அட வீட்ல சமைச்ச சிக்கன் கிரேவி மிஞ்சி விட்டதா? கவலைய விடுங்க; இதோ இந்த மாதிரி செஞ்சு அசத்துங்க!!
வீட்டில் சாதம் மிஞ்சி விட்டால் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை சிறிது மோர் அல்லது தயிர், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து குழந்தைகளுக்கு கொடுத்து பெரியவர்களும் சாப்பிடலாம். இது உடம்புக்கு மிகவும் நல்லது. ஆனால், சிக்கன் போன்ற மாமிச உணவுகள் மிஞ்சி விட்டால் என்ன செய்வது என்று பார்க்கலாம்.
வாரத்தின் இறுதி நாளில் விருந்தினர்களை அல்லது நண்பர்களை உணவுக்கு அழைத்து இருக்கலாம். சிக்கன் கிரேவி போன்ற மாமிச உணவுகள் மிஞ்சிவிட்டால் வருத்தப்படாதீர்கள். அப்படியே எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விடவும். இதோ இப்படி செய்யலாம்.
சிக்கன் சான்ட்விச்:
சிக்கனை இரண்டாக கட் செய்ய வேண்டும். இதில் சிறிது கிரேவி ஊற்ற வேண்டும். கொதிக்க வைக்கவும். இதை பிரட் மீது தடவி, வெள்ளரி, தக்காளி, வெங்காயம் வைத்து மற்றொரு பிரட் கொண்டு மூடி டோஸ்ட் செய்ய வேண்டும். இதோ சிக்கன் சான்ட்விச் தயார்.
சிக்கன் பராத்தா:
மேலே குறிப்பிட்டது போல் சிக்கன் சேர்த்து கட்டியாக கிரேவி செய்ய வேண்டும். தனியாக மாவு பிசைந்து பூரி அல்லது பராத்தா செய்து அத்துடன் வைத்து சாப்பிடலாம்.
வீட்டில் மாவு இல்லையா? கவலை வேண்டாம்.. ஹெல்தியான தோசை ரெசிபி இதோ..
சிக்கன் நூடுல்ஸ்:
எண்ணெய் சூடு செய்து, வெட்டிய வெங்காயம், வெள்ளப்பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தும் போட்டு வதக்க வேண்டும். சிறிது சிக்கன் கிரேவியை சேர்க்கவும். பின்னர் சிறிதாக வெட்டிய சிக்கன் துண்டுகளை சேர்க்கவும் (முந்தைய நாள் மிஞ்சிய சிக்கனாகவும் இருக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்து இருக்க வேண்டும்) நன்றாக கலந்து வேகவைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். உப்பு, மிளகு பொடி சேர்க்கவும்.
சிக்கன் புலாவ்:
பாசுமதி அரிசியை பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை கொண்டு வேக வைக்கவும். வடித்து விடவும். இத்துடன் சிக்கன் கிரேவியை சேர்த்து சாப்பிடலாம். வேண்டுமென்றால் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
சிக்கன் ரோல்:
மெல்லிசான பராத்தா தயார் செய்யவும். இதன் மையப் பகுதியில் சிக்கன் துண்டு, கிரேவியை சேர்க்கவும். இதன் மீது வெள்ளரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை ஜூஸ், உப்பு, மிளகுப் பொடி சேர்க்கவும். இத்துடன் சிலருக்கு கிரீன் சில்லி சாஸ் அல்லது தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளப் பிடிக்கும். அதையும் சேர்க்கவும். தற்போது ரோல் செய்து சாப்பிடவும்.
கம கம மட்டன் கீ ரோஸ்ட் மசாலா செய்வது எப்படி?
சிக்கன் தோசை:
இதே கிரேவியை தோசைக்கும் பயன்படுத்தலாம். தோசை ஊற்றி அதன் மையப்பகுதியில் கிரேவியை நிரப்பி சாப்பிடலாம். எனவே, சிக்கன் கிரேவி மிஞ்சி விட்டது என்று வருத்தப்பட வேண்டாம்.