கம கம மட்டன் கீ ரோஸ்ட் மசாலா செய்வது எப்படி?

எப்போதும் நம்ம உணவை மட்டும் ருசித்துக் கொண்டு இருந்தால் எப்படி. மற்றவர்களின் உணவு முறைகளையும் ருசிப்பது. பல வகையான உணவுகளை வீட்டில் அன்போடு செய்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பரிமாறினால், சந்தோஷமே வேற லெவலில் இருக்கும்.

How to make Mutton Ghee Roast Masala non veg Mangalorean recipe

பொதுவாக குழந்தைகள் ஓட்டலில் வாங்கி சாப்பிட்டு பழகி அந்த மாதிரியான உணவுகளையும், ஜங் உணவுகளையுமே விரும்புகின்றனர். இதை மாற்றுவதற்கு நீங்களே சமைத்துக் கொடுங்கள். உங்களது குழந்தைகளும் மாறிவிடுவார்கள். இதோ மங்களூர் ஸ்டைலில் மட்டன் கீ ரோஸ்ட் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

500 கிராம்   - மட்டன் 
1/2 கப் - தயிர் 
1/2 டேபிள்ஸ்பூன் -  மஞ்சள் தூள் 
1  டேபிள்ஸ்பூன் - எலுமிச்சை ஜூஸ் 
6 - காய்ந்த மிளகாய் 
2  - கிராம்பு 
1  - டீஸ்பூன் மிளகு 
1  - வெந்தயம் 
2 - தனியா விதை 
1  - சீரகம் 
6  - பூண்டு 

மற்ற பொருட்கள்:
ஒரு டேபிள்ஸ்பூன் புளி பேஸ்ட் 
ஒரு டேபிள்ஸ்பூன் நெய் 
2 கறிவேப்பிலை 
2 டேபிள்ஸ்பூன் வெல்லம் 

மட்டன் கீ ரோஸ்ட் செய்முறை: 
மட்டன் கீ ரோஸ்ட் செய்முறையை தொடங்க முதலில் ஆட்டிறைச்சியை மசாலாவில் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

How to make Mutton Ghee Roast Masala non veg Mangalorean recipe

ஆட்டிறைச்சியை ஊற வைக்க:
ஒரு கலவை பாத்திரத்தில், ஆட்டிறைச்சி, தயிர், மஞ்சள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். நன்றாக கலந்து குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வைக்கவும். அல்லது ஒரே இரவு முழுவதும் கூட ஊற வைக்கலாம். 

மட்டன் கீ ரோஸ்ட் மசாலா செய்ய:
ஒரு வாணலியை மிதமான சூட்டில் சூடாக்கவும், இதனுடன் காய்ந்த மிளகாய், மிளகுத்தூள், கிராம்பு, வெந்தயம், கொத்தமல்லி விதைகள் மற்றும் சீரகம் சேர்க்கவும். சுமார் 4-6 நிமிடங்கள் அல்லது மசாலா வாசனை வரும் வரை வறுக்கவும். மசாலாவில் சூடு குறைய வேண்டும். 

மிக்ஸி ஜாரில், வறுத்த மசாலா, பூண்டு பற்கள் மற்றும் புளி விழுது சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து  மென்மையான பேஸ்டாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியே வைக்கவும்.

மட்டன் கீ ரோஸ்ட் செய்ய:
பிரஷர் குக்கரில் 1/4 கப் தண்ணீருடன் ஊறவைத்து இருக்கும் மட்டனைச் சேர்த்து மூடியை மூடவும்.

பிரஷர் குக் சுமார் 4-5 விசில் வரும் வரை விடவும். ஸ்டவ் அணைத்து, இயற்கையாக குக்கரில் இருந்து காஸ் வெளியேறும் வரை காத்திருக்கவும். ஆறியதும், மட்டனை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைக்கவும்.

ஒரு கடாயை மிதமான தீயில் சூடாக்கி, இதனுடன் நெய் சேர்க்கவும். நெய் சூடானதும் கறிவேப்பிலை சேர்க்கவும். கறிவேப்பிலை வதங்கியதும், அரைத்த மசாலாவை சேர்த்து, நெய் மேலே வரும் வரை வதக்கவும். இதற்கு மீடியம் வெப்பத்தில் 4-6 நிமிடங்கள் எடுக்கலாம்.

இந்த வதக்கிய மசாலாவில், பிரஷர் குக்கரில் இருந்து முன் சமைத்த மட்டனைச் சேர்த்து அதில் இருந்த தண்ணீரையும் சேர்க்கலாம். இப்போது வெல்லம் சேர்த்து உப்பைச் சரிசெய்யவும். குறைந்த வெப்பத்தில் சுமார் 8-10 நிமிடங்கள் சமைக்கவும். 

மட்டன் கீ ரோஸ்ட் மசாலாவை பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி சூடாக பரிமாறவும். தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios