வீட்டில் மாவு இல்லையா? கவலை வேண்டாம்.. ஹெல்தியான தோசை ரெசிபி இதோ..

மாவு இல்லாமலே அருமையான, ஆரோக்கியமான தோசை செய்யலாம்.

Healthy breakfast recipe in tamil : how to make easy dosa

வீட்டில் தோசை மாவு இல்லை என்றாலே இல்லத்தரசிகளுக்கு கை உடைந்தது போல இருக்கும். ஆனால் இனி மாவு இல்லை என்றாலும் கவலை வேண்டாம். மாவு இல்லாமலே அருமையான, ஆரோக்கியமான தோசை செய்யலாம். இது வழக்கமான தோசை மாதிரி இல்லாமல், ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்

ரவை – 2 டீஸ்பூன்

உப்பு

பெருங்காயத்தூள்

வெங்காயம்

சீரகம்

கேரட் – அரை கப்

முட்டைக்கோஸ் – அரை கப்

குடை மிளகாய்

சாம்பார் பொடி – அரை ஸ்பூன்

செய்முறை :

கோதுமை மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும். இந்த கலவை 20 நிமிடங்கள் ஊற வேண்டும். இதனிடையே வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் காய்கறிகளை சேர்த்து வதக்கிய பின் சாம்பார் தூளை சேர்த்து வதக்கவும். இப்போது இந்த கலவையை, ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து நன்றாக கலந்து தோசை ஊற்றலாம். இதற்கு சாம்பார், தேய்காய் சட்னி, வெங்காய சட்னி ஆகியவை வைத்து சூடாக பரிமாறவும்.

 

தக்காளி இல்லாமலே டேஸ்டியான சட்னி செய்யலாம்.. இதை ட்ரை பண்ணி பாருங்க..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios