Asianet News TamilAsianet News Tamil

வெயில் தாக்கமா...உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் மூலிகைகள்..!

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாத்துகொள்ளஐஸ்க்ரீம் மற்றும் குளிர்பானங்களை தற்காலிகமாக எடுத்து கொள்கிறோம். அவற்றினால் உடல் நலத்திற்கு எவ்வித பயனுமில்லை. ஆனால் சில மூலிகைகள் உட்லை உள்ளிருந்து குளிர்ச்சிபடுத்துகிறது. அவைகள் என்னென்ன என்ப்தை இக்கடடுரையில் பார்ப்போம்.

herbs that help keep the body cool in the summer time
Author
First Published Apr 18, 2023, 8:46 PM IST | Last Updated Apr 18, 2023, 9:00 PM IST

சில மூலிகைகள் இந்த கோடை நாட்களில் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உஷ்ணத்தை தணிக்க உதவுகிறது. வெப்பத்தை தணிக்கும் மூலிகைகள் பல நம்மிடம் நிறைந்து இருக்கிறது.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக் வைக்க உதவும்  மூலிகைகள்:herbs that help keep the body cool in the summer time

செம்பருத்தி:

இவை எல்லா காலங்களிலும் கிடைக்க கூடியவை. இது குடிப்பதற்கு குளிர்ச்சியாகவும். சுவைக்கு கசப்பாகவும், புளிப்பாகவும் , துவர்ப்பாகவும் இருக்கும். இதனை தேநீராகவும்,  சாறாகவும் எடுத்து ஃப்ரிட்ஜ்ஜில் குளிரவைத்து குடிக்கலாம். மேலும் பூச்சிக்கொல்லி மருந்து இல்லாத செம்பருத்தியை பயன்படுத்துவதுமிகவும் நல்லது.  

பயன்படுத்தும் முறை:

செம்பருத்தி பூ இதழ்கள் - 1 கைப்பிடி
தண்ணீர் - 2 டம்ளர்

கொத்திகும் நீரில் செம்பருத்தி பூக்களை சேர்க்க் வேண்டும். நன்கு கொதித்த பிறகு இறக்கி ஊறவிடவும் .பின்னர் அதை கரண்டியால் இலேசாக மசித்து விடவும். பிறகு ஃப்ர்டிஜ்ஜில் வைத்து தேன் கலந்து (இனிப்பு தேவையெனில்) குடிக்க வேண்டும். இதனை எல்லா வயதினரும் குடிக்கலாம். இது இருதய நலம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு போன்றவற்றிற்கு உதவுகிறது.

herbs that help keep the body cool in the summer time
​சோற்றுக்கற்றாழை​:


சோற்றுக்கற்றாழை ஆதி காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும்ல்லாமல் அழகு பராமரிப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது காயங்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்டுகிறது.


பயன்படுத்தும் முறை:

கற்றாழையை அழகு பராமரிப்பில் பயன்படுத்தலாம். இதனை ஸ்மூத்திகளிலும் சாறுகளிலும் உணவிலும் சேர்த்து பயன்படுத்தலாம்.

 

இதையும் படியுங்க்ள்: கோடை வெயிலால் முகத்தின் நிறம் மாறுகிறதா? அப்போ இந்த பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க..!

 

 

herbs that help keep the body cool in the summer time
கொத்துமல்லி மற்றும் தனியா விதைகள்:


தனியா விதைகள் குளிர்ச்சியானவை. இது அமிலத்தன்மையை அதிகரிக்க செய்யாது, செரிமானத்தை மேம்படுத்தும்.  இது இயற்கை டையூரிடிக் என்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் சரியான செயல்பாட்டுக்கு உதவக்கூடியது.

இது போல் கொத்துமல்லி தழையும் உணவுக்கு சுவை கூட்ட கூடியவை. இவை ஆண்டி ஆக்ஸிடண்ட், புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் நியூரோபிராக்டிவ் பண்புகள்  நிறைந்துள்ளது.

பயன்படுத்தும் முறை:

தனியா விதைகளை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்நீரை குடிக்கலாம். மேலும் தனியாவை தேநீராக்கியும் குடிக்கலாம். கொத்துமல்லித்தழையை உணவில் சேர்ப்ப்து மிக்வும் நல்லது. சாலட், சூப் வகைகளிலும், சட்னி அரைத்தும் சாப்பிடலாம். மேலும்மோருடன் கொத்துமல்லித்தழையும் சேர்த்து மிக்ஸியில் அடித்து குடித்தால் உடலை குளிர்ச்சியாக வைக்கும்.

herbs that help keep the body cool in the summer time

புதினா​:


புதினா குளிர்ச்சியானது. நறுமணமிக்க மூலிகையில் இதற்கு தனி இடம் உண்டு. புதினா குடல் பிரச்சனைக்கு  சிறந்தது. மேலும் இதுஉஷ்ண காலத்தில் புதினா மிகவும் நல்லது. ஏனெனில், புதினா வயிற்று தசை தளர்வுக்கு உதவக்கூடும். 

பயன்படுத்தும் முறை:

புதினாவை தினமும் உணவில் சேர்த்து கொள்ளவும். புதினா துவையல், புதினா சட்னி, புதினா சாதம் என்று சாப்பிடலாம். இதனை மோருடன் கலந்து அரைத்து குடித்தால், உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். மேலும் புதினாவை எலுமிச்சையுடன் கலந்து சாறாக்கியும் குடிக்கலாம்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios