ஆண்களின் ஸ்டைலான லுக்கிற்கு நீளமான கூந்தல் அல்லது குட்டையான கூந்தல் இவை இரண்டில் எந்த ஹேர் ஸ்டைல் சிறந்தது என்பதை குறித்து இன்று பார்க்கலாம்.

தலைமுடி தான் ஒரு நபரின் ஒட்டுமொத்த அழகையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக தலைமுடி நீளமாக இருந்தால் அழகாக இருக்குமா? அல்லது குட்டையாக இருந்தால் அழகாக இருக்குமா? எது முக அமைப்புக்கு ஏற்றது என்ற குழப்பம் நிறைய ஆண்களுக்கு இருக்கும். நீங்களும் அப்படித்தான் குழம்பி போய் இருக்கிறீர்களா? இனி குழப்பம் வேண்டாம். இந்த பதிவில் உங்கள் குழப்பத்திற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து உங்களது முக அமைப்பிற்கு எந்த ஹேர் ஸ்டைல் பெஸ்ட் என்று தீர்மானியுங்கள். ஸ்டைலாக மாறுங்கள்.

ஆண்களின் முக அமைப்பிற்கு ஏற்ப ஹேர் ஸ்டைல் :

- ஓவல் வடிவ முகம் (oval face) உள்ள ஆண்களுக்கு நீளமான முடி (long hair) மற்றும் குட்டையான முடி (short hair) இவை இரண்டுமே பொருந்தும். எனவே இந்த முக வடிவுள்ள ஆண்கள் கவலைப்படாமல் எந்த ஹேர் ஸ்டைல் வைத்தாலும் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

- வட்ட வடிவ முகம் (Circle Face) கொண்ட ஆண்களுக்கு நீளமான சிகை அலங்காரம் தான் கச்சிதமாக பொருந்தும். ஏனெனில் இந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு மெலிதான முக அமைப்பை உருவாக்கும்.

- கூர்மையான தாடை (sharp jawlines மற்றும் சதுரமுகம் (square face) உள்ள ஆண்களுக்கு குட்டையான முடி தான் பெஸ்ட். இந்த ஹேர் ஸ்டைல் தான் அவர்களுக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் வசீகரமான தோற்றத்திற்கு இவர்கள் நீளமான கூந்தல் கூட வைக்கலாம்.

- ஆண்களே உங்களது முகம் இதய வடிவில் (heart shape face) இருந்தால், மீடியம் (medium hair) மற்றும் நீளமான (long hair) கூந்தல் தான் உங்களுக்கு ஸ்டைலான லுக்கை கொடுக்கும்.

ஆண்களின் ஸ்டைலான லுக்கிற்கு இவையும் தேவை :

ஒரு ஆணின் சிறந்த முடி அலங்காரத்திற்கு அவனது தினசரி வழக்கம் மற்றும் பின்பற்றும் ஸ்டைல்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அவை..

1. குட்டையான முடியை பராமரிக்க மிகவும் எளிது. ஆனால் அதன் அழகான வடிவத்தை தொடர நீங்கள் ஸ்டைலிங் மட்டுமல்லாமல், அடிக்கடி டிரிம் (trim) செய்ய வேண்டிய தேவையும் இருக்கும். தலை முடியை எப்போதும் நேர்த்தியாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு இது பொருந்தும்.

2. நீளமான முடியை பராமரிக்க பொறுமை அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பு கவனம் மிகவும் அவசியம். மேலும் நீரேற்றுடன் இருக்க வேண்டும். கண்டிஷனிங் பயன்படுத்துங்கள். அது மட்டுமில்லாமல் அவ்வப்போது கூந்தலை டிரிம் (trim) செய்ய வேண்டி இருக்கும். ஏனெனில் இவைதான் கூந்தலின் அடர்த்தியை பாதுகாக்கும்.

முக்கிய குறிப்பு :

- உங்களுக்கு எந்த பெஸ்ட் ஹேர் ஸ்டைல் என்று பிறரின் தலையீடு இல்லாமல் நீங்களே தீர்மானிக்க விரும்பினால் அதற்கு சிறந்த வழி கண்ணாடி தான். ஆம், நீங்கள் உங்களது தலை முடியை வெட்டாமலேயே அதை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து வைத்து பரிசோதித்து, தீர்மானிக்கலாம்.

- இது தவிர கடந்த கால புகைப்படங்களை ஒப்பிட்டு எது பார்ப்பதற்கு நல்லழுக்கை கொடுக்கிறது என்பதை நீங்களே பகுப்பாய்வு செய்யலாம்.

- மேலே சொன்ன இரண்டையும் தவிர தற்போது டிஜிட்டல் சிகை அலங்காரம் பயன்பாட்டில் உள்ளன. எனவே நீங்கள் அதில் பரிசோதித்து உங்களுக்கு பிடித்த ஹேர் ஸ்டைலை வைத்து கொள்ளுங்கள்.