பாத அழகைக் கெடுக்கிறதா பித்த வெடிப்பு... கவலையை விடுங்க... எளிய முறையில் தீர்வு..!!
ஒரு பைசா செலவில்லாமல் உங்கள் பாதத்தில் இருக்கும் பித்த வெடிப்பை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ...
பித்த வெடிப்பு என்பது அழகுப் பிரச்னையாக மட்டுமின்றி ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாகவும் பார்க்க வேண்டும். ஏனெனில் உடலில் இருக்கும் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில் இருக்கின்றன. காலில் ஏற்படக்கூடிய இந்த பித்த வெடிப்பானது சில நேரங்களில் காலை கீழே வைக்க முடியாத அளவிற்கு வலியை கொடுக்கும். பித்த வெடிப்பில் இருந்து ஈசியாக நிவாரணம் பெற ஒரு ஐந்து நிமிடம் மட்டும் செலவு செய்தால் அதற்கான தீர்வு விரைவில் காணலாம்.
பித்த வெடிப்பில் இருந்து நிவாரணம் பெற செய்ய வேண்டியவை:
ஒரு அகலமான டப்பில் சுடு தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.பின் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை அதில்
போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் இரண்டு கால்களையும் ஐந்து நிமிடம் வைக்கவும். கால்களை வெளியே எடுத்த உடன், கோல்கேட் பேஸ்ட்டை கால்களின் விரல் நகங்களின் மேல் தடவ வேண்டும். இதன் மூலம் கால் நகங்களின் இடுக்குகளில் உள்ள தொற்றுகள் சரியாகும். பின்னர் குளிக்கும் ஸ்கிரப் கொண்டு நகங்கள் மற்றும் பாதம் முழுவதும் நன்கு தேய்க்கவும். இதனால் கால்கள் மென்மையாக மாறுவதை காணலாம்.
நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை எடுத்துக் கொண்டு அதை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு பாதியை எடுத்து இரண்டு கால்களிலும் தேய்த்து, பிறகு காலை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் மற்றோரு பாதி அளவு தக்காளியில் சர்க்கரையை சேர்த்து இரண்டு கால்களிலும் 5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். காலில் வெடிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இவ்வாறு செய்ய இதன் மூலம் காலில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து விடும். பின் காலை சுடு தண்ணீரில் கழுவி விட்டு ஒரு துணியை கொண்டு துடைக்க வேண்டிம்.
இதையும் ப்டிங்க: Bournvita: 'போர்ன்விட்டா' மீது விழுந்த குற்றச்சாட்டு.. குழந்தைகள் நல அமைப்பு முக்கிய அறிவிப்பு..
அதன் பின்னர் வாசலின் (Vaseline) எடுத்து இரண்டு கால்களிலும் நன்கு தடவவும். பகல் நேரம் என்றால் வாசலின் மட்டும் தடவலாம். இதுவே நீங்கள் தூங்குவதற்கு முன்பு செய்தால் தேங்காய் எண்ணெயை தடவி காலுக்கு சாக்ஸ் போட்டுக் கொண்டு தூங்க வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாள் செய்து வந்தால் பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.