சரும ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை தரும் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறை எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

இந்த நவீன காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் பலரும் பலவிதமான உடல்நல பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். இதில் சரும பிரச்சனைகளும் அடங்கும். அதாவது முகப்பரு, நேர்த்தியான கோடுகள், சருமத்தில் எரிச்சல், அரிப்பு, வறண்ட சருமம், சுருக்கங்கள் போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட சிலர் கடைகளில் விற்பனை ஆகும் சரும பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துவர். ஆனால் அவற்றில் இருக்கும் இரசாயனங்கள் சில சமயங்களில் பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம். ஆரோக்கியமாக இருக்க இயற்கை முறைகளை கையாளுவது தான் சிறந்த வழி.

எனவே, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க சமையலுக்கு பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை உங்களுக்கு உதவும். கறிவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் அவை சரும பராமரிப்புக்கு பெரிதும் உதவும். இது முகப்பரு, சுருக்குங்கள், நேர்த்தியான கோடுகள், வயதான அறிகுறிகள், சருமத்தின் எரிச்சல், அரிப்பு, சிவத்தல் போன்ற சரும பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். சரி இப்போது இந்த பதிவில் சரும ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலையின் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

சருமத்திற்கு கறிவேப்பிலை நன்மைகள் ;

1. பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் :

கறிவேப்பிலைகள் பூஞ்சை மற்றும் பேட்டரி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் தொற்றுக்களை எதிர்த்து போராடும். கறிவேப்பிலை எண்ணெய் முகப்பரு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று சொல்லுகின்றது. கறிவேப்பிலையை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் முகப்பரு பிரச்சனை நீங்கும். சருமமும் தெளிவாக இருக்கும்.

2. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

கறிவேப்பிலையில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிஜனேட்டிகள் சுருக்கங்களை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியை தூண்டி, சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்த உதவுகிறது.

3. இயற்கை எண்ணெய்கள்

கறிவேப்பிலையில் இயற்கை எண்ணெய்கள் நிறைந்துள்ளதால் அவை சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது மேலும் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றும்.

4. அலர்ஜி எதிர்ப்பு

கறிவேப்பிலையில் நிறைந்துள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, அரிப்பு, தடிப்புகள், சிவத்தல், வீக்கம், எரிச்சல் போன்ற பல சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும். இது தவிர சருமத்தின் காயங்களையும் குணப்படுத்தும்.

சருமத்திற்கு கறிவேப்பிலையை பயன்படுத்தும் வழிகள் :

கறிவேப்பிலையை சருமத்திற்கு பல வழிகளில் பயன்படுத்தலாம். அவை..

1. கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில் கறிவேப்பிலையை பேஸ்ட் போல் அரைத்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து பிறகு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

2. கறிவேப்பிலை மற்றும் கற்றாழை ஜெல் ஃபேஸ் பேக்

கறிவேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் ஆக்கி அதனுடன் கற்றாழை ஜெல் கலந்து பிறகு முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பிறகு கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் எரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைக்கும்.

3. கறிவேப்பிலை மற்றும் தேன்

இதை தயாரிக்க ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை 1 ஸ்பூன் தேனுடன் சேர்த்து நன்கு பிசைந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தின் நிறமியை குறைக்கும் மற்றும் சருமத்தை பிரகாசமாக மாற்றும்.

4. கறிவேப்பிலை மற்றும் தயிர்

கறிவேப்பிலையை நன்கு மையாக அரைத்து அதனுடன் 2 ஸ்பூன் தயிர் கலந்து அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை ஈரப்பதமாக வைக்கும் மற்றும் ஊட்டமளிக்கும்.