இளம் வயதில் அதிகமாக முகப்பரு வர காரணங்கள் மற்றும் அதை சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முகப்பரு என்பது டீன்ஏஜ் பருவத்தில் வரும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். பருக்கள் முகத்தின் அழகை கொடுப்பது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையையும் வைக்கிறது. டீன்ஏஜ் ஆண்களும் சரி, பெண்களும் சரி முகப்பருக்களை போக்க பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதில்லை.. சரி இப்போது இந்த பதிவில் டீன்ஏஜ் வயதில் முகத்தில் அதிகமாக பருக்கள் வருவதற்கான காரணங்கள் என்ன? அதை போக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

டீன்ஏஜ் வயதில் முகப்பருக்கள் வர காரணங்கள் என்ன?

1. டீன்ஏஜ் வயது தொடங்கும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முகப்பருக்கள் வருகிறது.

2. சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள், சரும துளைகள் சுறுசுறுப்புடன் இருக்கும் போது இந்த பருக்கள் அதிகமாக வருகிறது.

3. ஆரோக்கியமற்ற உணவு, மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களாலும் ஏற்படலாம். ஆனால் டீன்ஏஜ் வயதை கடந்த பிறகு முகப்பரு போய்விடும். சிலருக்கு இது சில காலம் வரை நீடிக்கும்.

டீன்ஏஜ் வயதில் வரும் முகப்பரு பிரச்சனையை சரி செய்வது எப்படி?

- தினமும் இரண்டு இரவு முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் அவை குறையலாம்.

- பதப்படுத்தப்பட்ட உணவுகள், பால் உணவுகள், குப்பை உணவுகள், துரித உணவுகள், எண்ணெயில் வறுத்த அல்லது பொறித்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் மற்றும் மெலிந்த புரதங்கள் நிறைந்த சமச்சீர் உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.

- முகப்பரு வீரியத்தை குறைக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது. மீன், ஆளி விதைகள், வால்நட் போன்ற உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

- முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி தான் மன அழுத்த ஹார்மோனை குறைக்க உதவுகிறது.

- சப்ளிமெண்ட்கள் ஏதேனும் எடுத்துக்கொள்ள விரும்பினால் அதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

- முகப்பருவை ஒருபோதும் கையால் கிள்ளி விடக்கூடாது ஏனெனில் சில சமயங்களில் இது சருமத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிலருக்கு தழும்பாக கூட மாறலாம்.

- முகப்பரு தீவிரமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதுதான் நல்லது.

குறிப்பு : 

ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் டீன்ஏஜ் முகப்பருவை சுலபமாக எதிர்கொள்ளலாம். வேண்டுமானால் ஸ்கின் மருத்துவரின் உதவியை கூட நாடலாம்.