- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Small Pimples : முகத்துல குட்டி குட்டி பருக்கள் அசிங்கமா இருக்கா? இந்த 4 பொருளை யூஸ் பண்ணா முகம் பொலிவாகும்
Small Pimples : முகத்துல குட்டி குட்டி பருக்கள் அசிங்கமா இருக்கா? இந்த 4 பொருளை யூஸ் பண்ணா முகம் பொலிவாகும்
முகம் முழுவதும் அசிங்கமாக இருக்கும் சின்ன சின்ன பருக்களை போக்க சில எளிமையான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Best Remedies For Pimples On Face
முகத்தில் பருக்கல் இல்லாமல் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமற்ற உணவு முறை, மோசமான வாழ்க்கை முறை மற்றும் சரியான பராமரிப்பு இல்லாமை போன்ற பல காரணங்களால் முகத்தில் பருக்கள், வறட்சி, சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் போன்றவை காணப்படுகின்றன. அதுவும் சருமத்தில் ஏற்படும் சில பொருட்கள் வலியை ஏற்படுத்தும்.
இத்தகைய சூழ்நிலையில், சிலருக்கு முகம் முழுவதும் சின்ன சின்ன பருக்கள் இருக்கும். இதை வியர்வை, தூசி, பூஞ்சை, பாக்டீரியா போன்றவற்றின் காரணமாக ஏற்படலாம். இதைக் குறைப்பதற்கு சிலர் கடைகளில் விற்பனையாகும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் சருமத்தில் பக்க விளைவுகளை தான் ஏற்படுத்தும். எனவே அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு முகத்தில் உள்ள சின்ன சின்ன பருக்களை சுலபமாக நீக்கிவிடலாம். அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
கற்றாழை தடவுங்கள் :
முகத்தில் இருக்கும் சிறிய பருக்களை போக்க காற்றாழை ஒரு சிறந்த தேர்வு. ஏனெனில் இதில் ஆன்டி ஆக்டி ஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ளதால், அவை சரும தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதற்கு தினமும் இரவு தூங்கும் முன் புதிய கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவுங்கள்.
தேன் தடவலாம் :
முகத்தில் உள்ள சிறிய பருக்கள் பிரச்சனையை குறைக்க தேன் மிகவும் நன்மை பயக்கும். தேன் இயற்கையாகவே ஈரப்பதத்தை அளிக்கும் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை அகற்றி சருமத்தை மென்மையாக மாற்ற உதவும் மற்றும் கூடுதல் எண்ணெயையும் நீக்கும். எனவே தேனை முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். விரும்பினால் தேனுடன் ஓட்ஸ் சேர்த்து ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.
மாதுளை தோல் :
முகத்தில் சின்ன சின்னதாக வெள்ளையாக இருக்கும் பருக்களை குறைக்க மாதுளை தோல் உங்களுக்கு உதவும். இதில் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இதற்கு மாதுளை தோலை பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கி, பிறகு ஆற வைத்து பொடியாக்கி அந்த பொடியுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போலாகி அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு கழுவ வேண்டும். இந்த டிப்ஸ் உங்களது முகத்தை பிரகாசமாகும் மற்றும் முகத்தில் இருக்கும் சிறிய பருக்களை போக்கும்.
சந்தனம் :
முகத்தில் இருக்கும் குட்டி குட்டி பருக்களை குறைக்க சந்தனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சருமத்திற்கு ஆக்சிஜனை வழங்குவது மட்டுமல்லாமல் பருக்கள் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும். இதற்கு முதலில் சந்தனத்தை பேஸ்ட் போல ஆக்கி முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். சந்தனம் பருக்களை மட்டுமல்ல எண்ணெய் பசை சருமத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.