இயற்கையான முறையில் சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பாதுகாக்க கற்றாழை, மலாய் இரண்டுமே நல்லது தான். ஆனால் இவை இரண்டில் எது மிக அற்புதமாக, நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு ரிசல்ட் கொடுக்கும்? இது எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பளபளப்பான, ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவது என்பது பலரின் கனவாக இருக்கிறது. இதற்காக எண்ணற்ற இரசாயனப் பொருட்கள் நிறைந்த கிரீம்களையும், சிகிச்சைகளையும் நாடுவதை விட, இயற்கையான வழிகளில் கிடைக்கும் நன்மைகள் அதிகம். அப்படியான இரண்டு அற்புதப் பொருட்கள் தான் கற்றாழையும்,மலாயும் (பால் ஏடு்). இவை இரண்டும் சருமப் பராமரிப்பில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றில் எது உங்கள் சருமத்திற்குச் சிறந்தது?

கற்றாழை :

கற்றாழை, 'மருத்துவ ஆலை' என்று அழைக்கப்படும் ஒரு சதைப்பற்றுள்ள தாவரம். கற்றாழை ஜெல் சருமத்தில் ஏற்படும் சிவத்தல், எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். வெயில் பட்டு சிவந்த சருமத்திற்கு (sunburn) இது ஒரு சிறந்த நிவாரணி. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, வறண்ட சருமத்தை மென்மையாக்குகிறது. ஆனால், இது எண்ணெய் பசையை அதிகரிக்காமல், சருமத்தின் ஈரப்பதம் சமநிலையைப் பராமரிக்கிறது. இதில் சாலிசிலிக் அமிலம் (Salicylic acid), லுபியோல் (Lupeol), சின்னமிக் அமிலம் (Cinnamic acid), யூரியா நைட்ரஜன் (Urea Nitrogen) போன்ற கலவைகள் இருப்பதால், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. இது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கற்றாழையை எப்படிப் பயன்படுத்துவது?

கற்றாழை இலையிலிருந்து ஃப்ரெஷ்ஷான ஜெல்லை எடுத்து, சுத்தமான முகத்தில் நேரடியாகப் பூசலாம். 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேன், மஞ்சள் தூள் அல்லது கடலை மாவு கலந்து முகமூடியாகப் பயன்படுத்தலாம். தினமும் காலையில் மேக்கப் போடும் முன் மாய்ஸ்சரைசருக்குப் பதிலாகக் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம்.

மலாய் :

மலாய் என்பது பாலில் இருந்து எடுக்கப்படும் ஒரு அடர்த்தியான, கொழுப்பு நிறைந்த பொருள். இது பல நூற்றாண்டுகளாக சருமப் பராமரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மலாயில் உள்ள கொழுப்புகள் சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை அளித்து, வறண்ட மற்றும் செதில் செதிலாக உள்ள சருமத்தை மிருதுவாக்குகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சருமத்தின் கடினமான பகுதிகளை மென்மையாக்கி, மிருதுவான உணர்வைத் தரும். இதில் உள்ள லாக்டிக் அமிலம் (Lactic acid) ஒரு லேசான எக்ஸ்ஃபோலியேட்டராகச் செயல்பட்டு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, துளைகளைத் திறக்க உதவுகிறது. இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை சுத்தப்படுத்தும். மேலும், சருமத்தின் பளபளப்பை அதிகரித்து, கருமையான திட்டுகளைக் குறைத்து, சருமத்திற்கு ஒரு இயற்கை ஒளியைத் தருகிறது.

மலாயை எப்படிப் பயன்படுத்துவது?

சுத்தமான மலாயை முகத்தில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யது 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். மலாயுடன் சிறிது மஞ்சள் தூள், சந்தனப் பொடி அல்லது தேன் கலந்து முகமூடியாகப் பயன்படுத்தலாம். மலாயுடன் சிறிது ஓட்ஸ் அல்லது அரிசி மாவு கலந்து மெதுவாகத் தேய்த்து, இறந்த செல்களை நீக்கலாம்.

கற்றாழை Vs.மலாய் : எது உங்களுக்கு சிறந்தது?

இந்த இரண்டு இயற்கை வைத்தியங்களும் தங்கள் தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. உங்கள் சரும வகையைப் பொறுத்து எது உங்களுக்குச் சிறந்தது என்பதைத் தீர்மானிக்கலாம்.

எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு உள்ளவர்களுக்கு கற்றாழை சிறந்தது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகப்பருவைக் கட்டுப்படுத்தவும், சருமத்தில் எண்ணெய் பசையைக் குறைக்கவும் உதவும். மழையில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், எண்ணெய் பசை சருமத்திற்கு இது மேலும் எண்ணெய் பசையை அதிகரிக்கலாம்.

வறண்ட மற்றும் உணர்திறன் சருமம் உள்ளவர்களுக்கு மலாய் ஒரு சிறந்த தேர்வாகும். இதன் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வறண்ட சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி, மென்மையாக்கும். கற்றாழையும் வறண்ட சருமத்திற்கு நல்லது என்றாலும், மழை கூடுதல் ஊட்டச்சத்தை வழங்கும்.

கற்றாழையும், மலாயும் தனித்தனியே சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன. உங்கள் சருமத்தின் தேவையைப் பொறுத்து இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது தேவைப்பட்டால் இரண்டையும் சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். இயற்கையின் இந்த கொடைகளைப் பயன்படுத்தி, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுங்கள்.