MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியது ஏன்? உண்மையை உடைத்த செஃப் தாமு!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியது ஏன்? உண்மையை உடைத்த செஃப் தாமு!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதில் இருந்தே பலரும் அவர் விலகியது குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது குறித்து முதல் முறையாக செஃப் தாமு கூறியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 10 2023, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு கலகலப்பாக மாற்ற முடியுமா? என பலரையும் ஆச்சரியப்படுத்தியதோடு, ஒவ்வொரு வாரமும் மற்ற நிகழ்ச்சிகளுக்கு படிஆர்பியில் டப் கொடுத்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில், கடந்த மூன்று சீசன்களாக தன்னுடைய காமெடியால் பலரையும் சிரிக்க வைத்து வந்தவர் மணிமேகலை.  இதில் கோமாளியாக இருந்த பாலா, புகழ், சிவாங்கி, போன்றோர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகின்றனர். அதே போல் கோமாளிகளாக இருக்கும் பிரபலங்களுக்கும் பட வாய்ப்புகள் கிடைப்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த இளம் நடிகர் - நடிகைகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

'சர்தார்' வெற்றியை தொடர்ந்து... அடுத்தடுத்த படங்களில் பிசியாகும் லைலா! வெளியான புது பட தகவல்..!

36

கடந்த சீசனில் அவ்வபோது புகழ் இந்த குக் வித் கோமாளி செட்டுக்கு விசிட் அடித்த நிலையில், இந்த சீசன் முழுவதும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதேபோல் பாலா கடந்த சீசன் முழுவதும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தன்னுடைய காமெடியால் கலகலப்பாக மாற்றிய நிலையில்,  இந்த முறை படப்பிடிப்பில் பிசியாகி விட்டதால் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
 

46

இந்நிலையில் சமீபத்தில் மணிமேகலை 'நானே வருவேன்' கெட்டப்பில் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இவர் இந்நிகழ்ச்சியை விட்டு விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும், திரைப்படங்களில் நடிக்கிறார் என்றும் விஜய் டிவி தரப்பினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விலகியதாகவும் கூறப்பட்டது.

16 வயதினிலே ஸ்ரீதேவி கெட்டப்பில்... ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி கவர்ச்சி விருந்து வைத்த ஜான்வி! ஹாட் போட்டோஸ்!
 

56

ஆனால் இதுவரை மணிமேகலை இது குறித்து வாய் திறக்காத நிலையில், குக் வித் கோமாளி சக போட்டியாளர்களும்... நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது  அவரின் விருப்பம் என்பது போல் தெரிவித்து வந்தனர்.

66

இந்நிலையில் செஃப் தாமு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றியில், மணிமேகலை விளங்கியது குறித்து பேசி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது... குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை மணிமேகலையின் காமெடியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் என்னுடைய மகள் போன்றவர். இந்த நிகழ்ச்சியை விட்டு அவர் வெளியேறியது எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்புதான். அதே நேரத்தில் அவர் விரும்பி எடுத்த முடிவு இது.அடுத்த கட்ட தொகுப்பாளினி உட்பட ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளார். எனவே அவரது எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறியுள்ளார். இதையடுத்து மணிமேகலைக்கு பலரும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

66 வயதில் மறைந்த பாலிவுட் இயக்குனர் சதீஷ் கௌஷிக்குக்கு 10 வயதில் மகள்! அவர் மனைவி யார் தெரியுமா?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image2
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image3
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved