- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சவாலில் தோற்றுப்போன விஜயா... சைக்கோவாக மாறிய அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடந்தது?
சவாலில் தோற்றுப்போன விஜயா... சைக்கோவாக மாறிய அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடந்தது?
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தன்னை ஏமாற்றியது போலி சாமியார் என்பது தெரிந்ததும், மீனாவை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றுள்ளார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் செயினை மீட்க சென்ற இடத்தில் முத்துவும் மீனாவும் கைதான நிலையில், அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை சொல்லி அண்ணாமலை அவர்களை மீட்டார். பின்னர் அந்த செயின் திருட்டு கும்பல் வசித்த வீட்டுக்கு சென்று, சீதாவின் செயினை திருடிச் சென்ற சொர்ணத்தை கையும் களவுமாக பிடித்துச் சென்ற முத்து மற்றும் மீனா, அவரை விஜயா முன் கொண்டுவந்து நிறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெண் ஒரு போலி சாமியார் என்பதையும் நிரூபித்திருக்கிறார் முத்து. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அடிவெளுத்த விஜயா
இன்றைய எபிசோடில், முத்து சவால்விட்டது போல், அந்த பொம்பள ஒரு போலிச் சாமியார் தான் என்பதையும், அவள் ஒரு திருடி, ஃபிராடு என்பதையும் எல்லோர் மத்தியிலும் நிரூபித்துள்ளார். இதனால் பயங்கர கோபமடைந்த விஜயா, சாமியார் போல் நடித்து தன்னை ஏமாற்றிய அந்த பெண்ணை போட்டு அடிவெளுக்கிறார். அந்த ரோகிணி சொல்லி நீ வந்து நடிச்சு ஏமாத்துறியா, உன்னைய போய் நான் கையெடுத்து கும்பிட்டிட்டனேனு சொல்லி அவரை புரட்டி புரட்டி அடிக்கிறார். கொஞ்ச நேரத்தில் போலீசார் அங்கு வந்து அந்த பொம்பளையை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள்.
மீனாவை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாமியார்
இதையடுத்து மீனாவை வெளியே போகச் சொல்லும் முத்து, வாசலில் நிற்க சொல்கிறார். பின்னர் முத்து ஆரத்தி தட்டை எடுத்துவந்து அண்ணாமலையிடம் கொடுத்து, நீங்களே செய்யுங்க அப்பா என சொல்ல, அவரும் விஜயாவை அழைத்து, நீ விட்ட சவாலில் முத்து ஜெயிச்சிட்டான். நீ சொன்னமாதிரியே மீனாவை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிடு என சொல்லி ஆரத்தி தட்டை கொடுக்கிறார். விஜயாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியே இல்லாமல், ஆரத்தி எடுத்து, வா மருமகளேனு மீனாவை வீட்டுக்குள்ள அழைக்கிறார். அதன்பின்னர் பயங்கர கோபத்தில் இருக்கிறார் விஜயா.
அருணின் சைக்கோத்தனம்
மறுபுறம் சீதாவுக்கு தாலி செயின் கிடைத்துவிட்டதால், அவர் மீண்டும் வீட்டுக்கு செல்கிறார். தாலி செயின் இருந்தா தான் வீட்டுக்குள்ள விடுவேன்னு சீதாவை அடித்து விரட்டிய அருண், தற்போது சீதா கழுத்தில் தாலியை பார்த்ததும், அது என்னோட அம்மா நகை, அதனால் தான் இப்படி நடந்துக்கிட்டேன் என வழிகிறார். சைக்கோ போல் நடந்துகொள்ளும் அருணை, ஆஸ்பத்திரிக்கு அழைக்கிறார் சீதா. எதுக்கு என அருண் கேட்க, சைக்கார்டிஸ்டை பார்க்க என சீதா சொல்கிறார். நான் என்ன பைத்தியமா நான் எதுக்கு வரணும், உங்க அம்மா செத்தா உனக்கு, தெரியும்னு சொல்லி லூசு மாதிரி பேசுகிறார் அருண்.
மனோஜுக்கு பெண் பார்த்த ஜீவா
இதையடுத்து மனோஜின் ஷோரூமை காட்டுகிறார்கள். அப்போது அங்கு வரும் ஜீவா, மனோஜுக்காக ஏற்கனவே மேட்ரிமோனியில் பெண் பார்த்து வந்ததாகவும், அதில் ஒரு பெண் உங்களை பார்க்க வருகிறார் என்றும், அந்த பெண் பெயர் யமுனா, அவர் நேரடியாகவே இங்க வருகிறார் என சொன்னதும் மனோஜ் மிகவும் குஷியாகிவிடுகிறார். அந்த பெண்ணுக்காக மனோஜ் ஆர்வமுடம் காத்திருக்க, ஒரு அழகான பெண் வருகிறார். அந்த பெண் தான் யமுனா, இருவரும் பேச ஆரம்பிக்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

