- Home
- Cinema
- தொலைக்காட்சி
- விஜயா மூஞ்சில் கரியை பூசிய மீனா.. டுபாக்கூர் சாமியாரால் சிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
விஜயா மூஞ்சில் கரியை பூசிய மீனா.. டுபாக்கூர் சாமியாரால் சிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும், போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அந்த டுபாக்கூர் சாமியாரை மடக்கிப் பிடித்துள்ளனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் தாலியை திருடிய பெண்ணை கையும் களவுமாக பிடிக்க, மாறுவேடத்தில் சென்ற முத்துவும், மீனாவும், போலீஸிடம் சிக்கி கைதாகி உள்ளனர். அவர்கள் தாங்கள் இருவரும் எந்த தப்பும் செய்யவில்லை என கூறியும் அவர்களை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுவிட்டனர். பின்னர் அண்ணாமலைக்கு போன் போட்டு ஸ்டேஷனுக்கு வர சொல்கிறார்கள். அவர் முதலில் ஸ்ருதியையும், ரவியையும் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை வந்து இன்ஸ்பெக்டரை பார்த்து பேசுகிறார். இவங்க இந்த மாதிரி திருட்டு வேலை செய்பவர்கள் இல்லை. இவன் என்னுடைய பையன் தான் டிராவல்ஸ் வச்சிருக்கான். 3 வண்டி சொந்தமா வச்சிருக்கான். இது என்னோட மருமகள், சொந்தமாக பூக்கடை வச்சு நடத்திகிட்டு இருக்காள். நிறைய மண்டபத்துக்கு பூ டெகரேஷன் பண்ணிக்கிட்டு இருக்காள். இவளோட தங்கச்சி தாலியை ஒரு பெண் திருடிவிட்டால், அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்காக தான் இவர்கள் இருவரும் இப்படி மாறு வேடத்தில் சென்றிருக்கிறார்கள். இதையடுத்து இன்ஸ்பெக்டரும் அவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்புகிறார்.
முத்து - மீனாவின் மாஸ்டர் பிளான்
அதன்பின்னர் எப்படியாவது அந்த சொர்ணத்தை பிடித்தே ஆகவேண்டும் என முத்துவும், மீனாவும் முடிவெடுக்கிறார்கள். அண்ணாமலையை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் அந்த திருட்டு நகை விற்கும் இடத்துக்கே செல்கிறார்கள். அங்கு சொர்ணம் வருவதாக சொல்லி இருந்ததால், அவரை அங்கு வைத்து மடக்கிப் பிடிக்க கிளம்புகிறார்கள். சொர்ணமும் அங்கு போலீஸ் வந்த விஷயம் தெரியாமல், இரண்டு பேரை அழைத்துக் கொண்டு, திருட்டு நகையை விற்பனை செய்ய வருகிறார். அப்போது அங்கு யாருமே இல்லாததால் சொர்ணத்துக்கு லைட்டாக டவுட் வருகிறது.
வசமா சிக்கிய சொர்ணம்
பின்னர் மீனா, சாமி போல் கையில் சூலத்துடன் அமர்ந்து சொர்ணத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது சொர்ணம் கையில் இருக்கும் நகைப் பையை முத்து வாங்கி பார்க்கிறார். அதில் சீதாவின் தாலியும் இருக்கிறது. இதையடுத்து சொர்ணத்தை ரெண்டு சாத்து சாத்தியவுடன் அவர் நான் எல்லா உண்மையையும் சொல்லிடுறேன் என சொன்னதும், அவரை அழைத்துக் கொண்டு, முத்துவும், மீனாவும் நேராக விஜயா வீட்டிற்கு செல்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு வரும் முன், மீனாவின் அம்மா, தங்கச்சி, தம்பி எல்லாரும் வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என கேட்கிறார் விஜயா.
வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த மீனா
மாப்ள தான் என்னை இங்கு வர சொன்னார் என மீனாவின் அம்மா சொல்கிறார். சிறிது நேரத்தில் முத்துவும், மீனாவும் அங்கு வருகிறார்கள். அப்போது மீனாவை பார்த்து, எதுக்காக நீ இங்க வந்த, உன்னை இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாதுனு சொல்லிருக்கேன்ல என கேட்க, நீங்க தான் சொன்னீங்க, அந்த சாமியார் போலியானவர், அவர் ஒரு ஃபிராடு என்பதை நிரூபித்தால், உள்ளே வருவதாக சொல்லிருந்தோம்ல என சொல்லி அந்த டுபாக்கூர் சாமியார் சொர்ணத்தை உள்ளே வந்து நிறுத்துகிறார்கள். அவரைப் பார்த்ததும் விஜயா, பயபக்தியோடு, கையெடுத்து கும்பிடுகிறார்.
ரோகிணியை மாட்டிவிட்ட சொர்ணம்
பின்னர் சொர்ணம் விஜயாவிடம் தான் ஒரு போலி சாமியார் என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார். தான் மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்காக தான் இப்படி ஒரு பொய்யை சொன்னேன் என சொல்லிவிடுகிறார். அதன்பின்னர் யார் சொல்லி இந்த பொய்யை சொன்ன என கேட்க, அவர் சிந்தாமணியை போட்டுக்கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், சட்டென ரோகிணி சொல்லி தான் இதையெல்லாம் செய்தேன் என கூறிவிடுகிறார் அந்த பெண். இதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

