MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • முத்து - மீனாவை கைது செய்த போலீஸ்... சீதாவை அடிச்சு துரத்திய அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்

முத்து - மீனாவை கைது செய்த போலீஸ்... சீதாவை அடிச்சு துரத்திய அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் சீதாவின் திருடு போன செயினை கண்டுபிடிக்க சென்ற நிலையில், அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 24 2026, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா கோவிலில் சாமி கும்பிடும் போது அவருடைய தாலி செயின் காணாமல் போகிறது. அப்போது அங்கு வந்த மீனா, தன்னை இடித்துவிட்டு ஓடிய பெண் தான் அதை எடுத்துச் சென்றிருப்பால் என கருதி, அந்த பெண்ணை சேஸ் பண்ணி சென்று பிடித்துவிடுகிறார். பின்னர் அந்த பெண்ணின் முக்காடை விலக்கிவிட்டு பார்த்தபோது தான் அது தன்னை வீட்டை விட்டு துரத்தச் சொன்ன போலி சாமியார் என்று, பின்னர் அந்த பெண் மீனாவை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து முத்துவும், மீனாவும் அந்த பெண்ணை தேடி சென்றுள்ளனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
கெட் அப் மாற்றிய முத்து - மீனா
Image Credit : jiohotstar

கெட் அப் மாற்றிய முத்து - மீனா

நகையை திருடிச் சென்ற பெண் அவருடைய பர்ஸை தவறவிட்டிருக்கிறார். அந்த பர்ஸில் இருந்த அட்ரஸை பற்றி முத்து அவருடைய நண்பரிடம் விசாரிக்கையில், அது திருட்டு நகைகளை விற்கும் இடம் என கூறி இருக்கிறார். பின்னர் பிளான் ஒன்றை போடும் முத்து, நாமும் திருட்டு நகையை விற்க வந்திருப்பது போல் உள்ளே செல்வோம் என முடிவெடுத்து, தன்னுடைய நண்பனின் வீட்டுக்குள் சென்று லுங்கியை மாற்றி ஆளே வித்தியாசமாக மாறுகிறார். மீனாவும் சேலையை மாற்றிக் கொண்டு, இருவரும் அந்த இடத்துக்கு செல்கிறார்கள். அங்கு சென்றதும் திருடி வந்த நகைகளை விற்று காசு வாங்க வந்ததாக சொல்கிறார்கள்.

Related Articles

Related image1
மீனாவிடம் சிக்கிய டுபாக்கூர் சாமியார்... விஜயாவிடம் சவால்விட்ட முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Related image2
தாலியை தொலைத்த சீதா... தடபுடலாக கொண்டாடப்படும் அண்ணாமலை பர்த்டே - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
35
கைது செய்யும் போலீஸ்
Image Credit : jiohotstar

கைது செய்யும் போலீஸ்

இவர்கள் புதுசா இருப்பதால், ஒருவேளை போலீஸ் ஆக இருப்பார்களோ என அங்கிருப்பவர்கள் சந்தேகப்படுகிறார்கள். உங்களை இங்கு பார்த்ததே இல்லையே, நீங்க எப்படி இங்க வந்தீங்க என கேட்க, ஜோசியம் பார்த்து ஃபிராடுத்தனம் பண்ணிகிட்டு தெரியும்ல அந்த அம்மா சொல்லி தான் இங்க வந்தோம் என கூறுகிறார் முத்து. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு போலீஸ் வருகிறார்கள். அங்கிருந்தவர்களை எல்லாம் மடக்கிப் பிடித்து அரெஸ்ட் பண்ணும் போலீசார். இறுதியாக முத்து மற்றும் மீனாவின் கெட் அப் பார்த்து அவர்களையும் திருடர்கள் என நம்பி கைது செய்துவிடுகிறார்கள்.

45
அண்ணாமலைக்கு போன் போடும் போலீஸ்
Image Credit : jiohotstar

அண்ணாமலைக்கு போன் போடும் போலீஸ்

அந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த பெண், முத்துவிடம், நீங்க கவலைப்படாதீங்க, நான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி கரெக்ட் பண்ணிடுறேன் என சொல்கிறார். நாங்க ரெண்டு பேரும் திருடர்கள் இல்லை என முத்துவும் மீனாவும் அவர்களிடம் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார்கள். ஆனால் போலீஸ் நம்பவில்லை. இதையடுத்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு போலீசிடம் கெஞ்சி கேட்கும் முத்து, என்னுடைய அப்பாவுக்கு ஒரே ஒரு போன் மட்டும் பண்ணிக்குறேன். அவர் வந்தா உங்களுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடும் என சொல்லி போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்கிறார்.

55
வீட்டை விட்டு விரட்டப்படும் சீதா
Image Credit : jiohotstar

வீட்டை விட்டு விரட்டப்படும் சீதா

அண்ணாமலை உடனே ரவிக்கும், ஸ்ருதிக்கும் போன் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்க, நாங்க கொஞ்ச நேரத்தில் வர்றேன் என கூறுகிறார். பின்னர் அவசர அவசரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் ரவி மற்றும் ஸ்ருதிக்கு, முத்து மீனாவை பார்த்து அடையாளமே தெரியவில்லை. அதன்பின்னர் போலீஸிடம் சென்று இருவரும் பேசுகிறார்கள். நடந்த பிரச்சனையை கூறுகிறார்கள். மறுபுறம் அருண் தன்னுடைய மனைவி சீதாவிடம், தாலி செயின் இல்லாம நீ வீட்டுக்குள்ளேயே வரக் கூடாது என சொல்லி அவரை வீட்டை விட்டே துரத்தி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Recommended image2
Siragadikka Aasai : மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி
Related Stories
Recommended image1
மீனாவிடம் சிக்கிய டுபாக்கூர் சாமியார்... விஜயாவிடம் சவால்விட்ட முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
தாலியை தொலைத்த சீதா... தடபுடலாக கொண்டாடப்படும் அண்ணாமலை பர்த்டே - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved