MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • தாலியை தொலைத்த சீதா... தடபுடலாக கொண்டாடப்படும் அண்ணாமலை பர்த்டே - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

தாலியை தொலைத்த சீதா... தடபுடலாக கொண்டாடப்படும் அண்ணாமலை பர்த்டே - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலையின் 60வது பிறந்தநாளை முத்துவும், மீனாவும் தடபுடலாக கொண்டாடி உள்ளனர். இதன்பின் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 21 2026, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், இன்று அண்ணாமலையின் பிறந்தநாள் என்பதால், அவரின் நெருங்கிய நண்பரான பரசு, காலையிலேயே கோவிலுக்கு சென்று அண்ணாமலை பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு, பிரசாதத்தோடு வீட்டுக்குள் வருகிறார். அப்போது ஹாலில் அண்ணாமலை மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறார். என்ன அண்ணாமலை, இது உனக்கு 60வது பிறந்தநாள் ஆச்சே, நீ பயங்கரமா செலிபிரேட் பண்ணிகிட்டு இருப்பேன்னு பார்த்தேன், இங்க யாரையுமே காணோம் என கேட்கிறார். அந்த நேரம் பார்த்து விஜயா அங்கு வருகிறார்.

26
அண்ணாமலையின் பிறந்தநாளை மறந்த குடும்பத்தார்
Image Credit : jiohotstar

அண்ணாமலையின் பிறந்தநாளை மறந்த குடும்பத்தார்

அப்போது விஜயாவிடம் இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமாமா என பரசு கேட்க, இன்னைக்கு சனிக்கிழமை என அசால்டாக பதில் சொல்கிறார். அதன்பின்னர் மனோஜிடம் கேட்கிறார், அவரும் அதே பதிலை சொல்கிறார். ரவியும் அதையே தான் கூறுகிறார். கொஞ்ச நேரத்தில் முத்துவும் வீட்டுக்குள் வருகிறார். அவரும் அண்ணாமலையிடம் பேசாமல் அங்கிருந்து விறுவிறுவென கிளம்பிச் செல்கிறார். இவங்க மறந்ததெல்லாம் ஓகே, ஆனால் முத்துவும் அண்ணாமலையின் பிறந்தநாளை மறந்துட்டானே என சொல்லி பரசு ரொம்ப ஃபீல் பண்ணுகிறார். அப்போது ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

Related Articles

Related image1
மனோஜ் காலில் விழுந்து கெஞ்சிய ரோகிணி... டைவர்ஸ் கேஸில் புது ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Related image2
தினேஷை அடிச்சு ஓடவிட்ட முத்து... விஜயாவுக்கு வக்கீல் கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
36
முத்து கொடுத்த சர்ப்ரைஸ்
Image Credit : jiohotstar

முத்து கொடுத்த சர்ப்ரைஸ்

வெளியில் இருந்து மேள சத்தத்தோடு, வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார் முத்து. உடன் மீனாவும் வருகிறார். அவர்கள் கையில் தாம்புலம் நிறைய மாலை, புது டிரெஸ் எடுத்து வருகிறார்கள். இது அண்ணாமலையின் 60வது பிறந்தநாள் என்பதால் தான் முத்துவும், மீனாவும் இதை பிளான் பண்ணி பண்ணுகிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஸ்ருதியும் அங்கு வருகிறார். அவர் அண்ணாமலை பிறந்தநாளுக்காக கேக் வாங்கிக் கொண்டு வருகிறார். உனக்கு எப்படி தெரியும் என விஜயா கேட்க, மீனா தன்னிடம் நேற்றே சொல்லிவிட்டதாக கூறுகிறார் ஸ்ருதி.

46
சவால்விடும் ரோகிணி
Image Credit : jiohotstar

சவால்விடும் ரோகிணி

இதையடுத்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டலாம் என முடிவெடுத்து, கேக் கட் பண்ண போகும் நேரத்தில் ரோகிணி அங்கு வருகிறார். மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்திருப்பதாக ரோகிணி சொல்ல, அவரை வீட்டு வாசலிலேயே தடுத்து நிறுத்தும் விஜயா, நல்ல நாள் அதுவுமா பிரச்சனை பண்ணாத ஒழுங்கா கிளம்பி போயிடு என திட்டி அனுப்பிவிடுகிறார் விஜயா. செல்லும் முன், அடுத்த பிறந்தநாளுக்கு நானும் உங்க கூட இருப்பேன் பாருங்க என சவால் விட்டுட்டு கிளம்புகிறார் ரோகிணி.

56
முத்துவின் வேனுக்கு பூஜை
Image Credit : jiohotstar

முத்துவின் வேனுக்கு பூஜை

இதன்பின்னர் கேக் வெட்டி செலிபிரேட் பண்ணிவிட்டு, முத்துவுடன் அனைவரும் கோவிலுக்கு செல்கிறார். அவர் புதிதாக வேன் வாங்கியிருப்பதால், அதற்கு பூஜை போட சென்றிருக்கிறார்கள். முத்துவின் ஃப்பேமிலி மட்டுமின்றி மீனாவின் ஃபேமிலியும் அங்கு ஆஜர் ஆகிறார்கள். சாமி கும்பிட்டுவிட்டு அண்ணாமலை கையால் சாவியை வாங்கிக் கொள்ளும் முத்து, வண்டியை ஓட்ட ஆரம்பிக்கிறார். அவர் அந்த வேனுக்கு MM டிராவல்ஸ் என பெயரிட்டுள்ளார்.

66
சீதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Image Credit : jiohotstar

சீதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மறுபுறம் சீதா கோவிலை சுற்றி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர் தாலி காணாமல் போகிறது. தாலி தொலைந்து போனதை உணர்ந்த சீதா, அய்யய்யோ என பதறுகிறார். அப்போது ஒரு முக்காடு போட்ட பெண் மீனாவை இடித்துவிட்டு வேகமாக கோவிலில் இருந்து வெளியே ஓடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. சீதாவின் தாலியை திருடியது யார்? என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
Latest Videos
Recommended Stories
Recommended image1
கதையை முடிக்க சொன்ன ஆலிவர்... ஜனனிக்காக கழுகு போல் காத்திருக்கும் ரவுடிகள் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
கல்யாண நாளில் ரேவதிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய கண்டம் – சித்தரின் அருள் வாக்கால் ஷாக்கான கார்த்திக் – கார்த்திகை தீபம்!
Recommended image3
எட்டப்பன் வேலையை ஆரம்பித்த சந்திரகலா! திருந்தவே திருந்தாத மனுச ஜென்மம்! கார்த்திகை தீபம் அதிரடி எபிசோட்!"
Related Stories
Recommended image1
மனோஜ் காலில் விழுந்து கெஞ்சிய ரோகிணி... டைவர்ஸ் கேஸில் புது ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
தினேஷை அடிச்சு ஓடவிட்ட முத்து... விஜயாவுக்கு வக்கீல் கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved