MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மனோஜ் காலில் விழுந்து கெஞ்சிய ரோகிணி... டைவர்ஸ் கேஸில் புது ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்

மனோஜ் காலில் விழுந்து கெஞ்சிய ரோகிணி... டைவர்ஸ் கேஸில் புது ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜும் ரோகிணியும் கவுன்சிலிங்கிற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த நிலையில், அங்கு எதிர்பாரா ட்விஸ்ட் ஒன்று அரங்கேறி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 20 2026, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு எப்படியாவது டைவர்ஸ் வாங்கிவிட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார் விஜயா. அதற்காக வக்கீலை சந்தித்து, இந்த வழக்கு தொடர்பாக பேசியதோடு, டைவர்ஸ் கிடைக்கும் முன்பே தன் மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கலாமா என்றும் கேட்டிருந்தார். அப்படி செய்தால் உங்களையும் உங்க புள்ளையையும் தூக்கி ஜெயிலில் போடுவார்கள் என எச்சரித்த வக்கீல், விவாகரத்து கிடைக்கும் வரை நிச்சயதார்த்தம் கூட செய்யக் கூடாது என கூறி உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
டிராமா பண்ணிய ரோகிணி
Image Credit : jiohotstar

டிராமா பண்ணிய ரோகிணி

கவுன்சிலிங் நடக்கும் ரூமுக்குள் மனோஜ், ரோகிணி இருவரும் செல்ல, அப்போது அங்கு வந்த விஜயா, முத்து மற்றும் மீனாவை வெளியே போக சொல்லிவிட்டு, அவர்கள் இருவரிடம் மட்டும் பேசுகிறார்கள். என்ன பிரச்சனை என கேட்கும் போது, ரோகிணி தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயம் தனக்கு டைவர்ஸ் வேண்டும் எனவும் கேட்கிறார் மனோஜ். அப்போது அருகில் இருந்த ரோகிணி அழத் தொடங்க, அதைப்பார்த்த மனோஜ், இதெல்லாம் நம்பாதீங்க, அவ்வளவும் நடிப்பு என சொல்லிக் கொண்டிருக்க, சட்டென மனோஜ் காலில் விழுகிறார் ரோகிணி.

Related Articles

Related image1
தினேஷை அடிச்சு ஓடவிட்ட முத்து... விஜயாவுக்கு வக்கீல் கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related image2
தினேஷின் கதையை முடித்த ரோகிணி... மனோஜை டார்ச்சர் பண்ணிய தங்கச்சி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
35
கவுன்சிலிங்கில் நடந்த ட்விஸ்ட்
Image Credit : jiohotstar

கவுன்சிலிங்கில் நடந்த ட்விஸ்ட்

பின்னர் கவுன்சிலிங் பேச வந்தவர்களிடம் நான் சாகுற வரைக்கும் மனோஜுடைய மனைவியாக தான் இருப்பேன். நான் அவர்கூட வாழ வேண்டும். எங்களுக்கு டைவர்ஸ் வேண்டாம் என விடாப்பிடியாக இருக்கிறார் ரோகிணி. இவளால என்னோட நிம்மதியே போச்சு, என்னோட குடும்பத்திலும் நிறைய பிரச்சனை வந்திருச்சு. அதனால இவகூட என்னால வாழ முடியாது என கூறிவிடுகிறார் மனோஜ். இப்படி இருவரும் எதிரும் புதிருமான முடிவில் இருப்பதால் கன்பியூஸ் ஆன கவுன்சிலிங் நடத்துபவர்கள், இதுக்குமேல எங்களால உங்களை பேசி சேர்த்துவைக்க முடியாது, இனிமேல் கோர்ட் என்ன முடிவு சொல்லுதோ அதை ஏத்துக் கோங்க என சொல்லிவிடுகின்றனர்.

45
விஜயாவுக்கு சவால் விட்ட ரோகிணி
Image Credit : jiohotstar

விஜயாவுக்கு சவால் விட்ட ரோகிணி

பின்னர் வெளியே வரும் மனோஜ், விஜயாவிடம் உள்ளே நடந்ததை கூறுகிறார். ரோகிணி அழுது சிம்பதி கிரியேட் பண்ணியதால் கோர்ட்டில் பார்த்துக்க சொல்லிட்டாங்க என சொல்கிறார். அப்போது அங்கு வந்த ரோகிணியிடம், பேசும் மீனா, நீ இப்படி அழுகாச்சியாக முகத்தை வச்சிருக்கும்போதே நினைச்சேன் ஏதாச்சும் டிராமா பண்ணுவேனு என சொல்ல, என்னை என்னுடைய புருஷன் கிட்ட இருந்து பிரிக்க நினைச்சா இப்படி தான் பண்ணுவேன் என கூறுகிறார். பின்னர் விஜயா, ஏண்டி என் பையன் பின்னாடி வேதாளம் மாறி சுத்திகிட்டே இருக்க என கேட்க, அவரிடம் நான் டைவர்ஸ் கொடுக்கவே மாட்டேன் என திமிராக சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

55
விஜயாவின் புது ஐடியா
Image Credit : jiohotstar

விஜயாவின் புது ஐடியா

பின்னர் வீட்டுக்கு வரும் விஜயா, கோர்ட்டில் நடந்ததை அண்ணாமலையிடம் சொல்லி புலம்புகிறார். அதற்கு அவர், நீ முதலில் மனோஜுக்கு பெண் பார்ப்பதை நிறுத்து, அது தான் ரோகிணிக்கு கோபம் என சொல்ல, அவரோ, அவளுக்கு பயந்து என்னால இருக்க முடியாது என கூறுவதோடு, மனோஜிடம், புதுசா பார்த்த பெண்ணோடு நீ பேசி பழகு அதைப்பார்த்து அந்த ரோகிணி வயிறு எரியட்டும் என சொல்ல, அதற்கு மனோஜும் ஓகே சொல்கிறார். அந்த நேரத்தில் முத்து, மீனாவிடம் இருந்து சாப்பாடு வாங்கி வர விஜயா தவிர எல்லோரும் சாப்பிட செல்கிறார்கள். இதையடுத்து என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Recommended image2
Siragadikka Aasai : மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி
Related Stories
Recommended image1
தினேஷை அடிச்சு ஓடவிட்ட முத்து... விஜயாவுக்கு வக்கீல் கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
தினேஷின் கதையை முடித்த ரோகிணி... மனோஜை டார்ச்சர் பண்ணிய தங்கச்சி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved