- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஸ்விஃப்டு முதல் பென்ஸ் வரை கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டியிடம் இத்தனை விதவிதமான கார்கள் உள்ளதா?
ஸ்விஃப்டு முதல் பென்ஸ் வரை கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டியிடம் இத்தனை விதவிதமான கார்கள் உள்ளதா?
சன் டிவியின் கயல் தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன நடிகை சைத்ரா ரெட்டியின் கார் கலெக்ஷன் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Chaitra Reddy Car Collection
பெங்களூருவை சேர்ந்தவரான சைத்ரா ரெட்டி, ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கர் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக சைத்ரா ரெட்டி நாயகியாக நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழுக்கு தாவிய சைத்ரா, அதில் யாரடி நீ மோகினி என்கிற சீரியலில் வில்லியாக நடித்தார். அதில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. அந்த சீரியல் முடிந்த கையோடு சைத்ராவுக்கு கிடைத்த ஒரு பிளாக்பஸ்டர் வாய்ப்பு தான் கயல் சீரியல். சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சைத்ரா
சைத்ரா ரெட்டி சம்பளம்
சன் டிவியில் சக்கைப்போடு போடும் சீரியல்களில் கயல் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 4 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிநடைபோட்டு வருகிறது. சன் டிவியில் நடிக்கும் சீரியல் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது சைத்ரா ரெட்டி தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். அந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவ்வை விட சைத்ரா ரெட்டிக்கு தான் சம்பளம் அதிகம். இவர் சீரியல் மட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி தன்னுடைய சமையல் திறமையையும் வெளிப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறிய சைத்ராவுக்கு 3ம் இடம் கிடைத்தது.
சைத்ரா ரெட்டி கார் கலெக்ஷன்
நடிகை சைத்ரா ரெட்டி சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது தன்னிடம் உள்ள கார் கலெக்ஷன் பற்றி கூறினார். அதன்படி அவரிடம் மொத்தம் 4 கார்கள் சொந்தமாக வைத்திருந்தாராம். அதில் அவர் முதல்முதலில் வாங்கியது மாருதி ஸ்விஃப்டு கார் தானாம். அந்த காரை மூன்று ஆண்டுகள் வைத்திருந்த பின்னர், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஷூட்டிங் எதுவும் இல்லாததால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானதால், வேறு வழியின்றி அந்த காரை விற்றுவிட்டாராம். அந்த ஊரடங்கு முடிந்த பின்னர் தான் சன் டிவியில் கயல் சீரியல் தொடங்கப்பட்டது.
பென்ஸ் கார் வாங்கிய சைத்ரா
கயல் சீரியலில் அதிக சம்பளம் வாங்கி வந்ததால் நான்கு ஆண்டுகளில் கோடீஸ்வரி ஆகிவிட்டார் சைத்ரா. பின்னர் மகிந்திராவின் Alturas G4 என்கிற செவன் சீட்டர் கார் வாங்கினாராம் சைத்ரா. இதன்பின்னர் தன்னுடைய ட்ரீம் காரான மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ் காரை கடந்த ஆண்டு வாங்கினார் சைத்ரா. இதுதவிர அவரது கணவரிடமும் ஒரு கார் உள்ளதாம். சைத்ரா வாங்கிய மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ் காரின் விலை சுமார் ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பென்ஸ் கார் வாங்கியதும் தன்னுடைய பெற்றோர் மிகவும் சந்தோஷப்பட்டதாக சைத்ரா ரெட்டி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.