- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஹீரோவை விட ஹீரோயினுக்கு அதிக சம்பளமா? கயல் சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
ஹீரோவை விட ஹீரோயினுக்கு அதிக சம்பளமா? கயல் சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
சன் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் கயல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

Kayal Serial Actors Salary
பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அப்படி சன் டிவியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் சைத்ரா ரெட்டியை கதையின் நாயகியாக வைத்து தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல். இந்த சீரியலில் சைத்ரா ரெட்டிக்கு ஜோடியாக சஞ்சீவ் நடிக்கிறார். ஆரம்பத்தில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்ததால் இந்த சீரியலுக்கு செம மவுசு இருந்தது. இதனால் டிஆர்பி ரேஸிலும் நம்பர் ஒன் சீரியலாக கயல் இருந்து வந்தது.
கயல் சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம்
ஆனால் போகப் போக கதையை எப்படி நகர்த்தி செல்வது என தெரியாமல், முழுவதும் பிரச்சனையாகவே காட்டி வருவதால், கயல் சீரியல் சமீப காலமாக சலிப்படைய செய்துள்ளது. இதன் எதிரொலியாக டிஆர்பி ரேஸில் முதல் இடத்தில் இருந்த கயல் சீரியல் தற்போது மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் டிஆர்பியும் சரிந்து வருகிறது. இதனால் இந்த சீரியலின் நேரமும் விரைவில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கயல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.
கயல் சீரியலில் கம்மி சம்பளம் வாங்குவது யார்?
அதன்படி கயல் சீரியலில் அன்பு கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஜீவா ராஜேந்திரனும், தனமாக நடிக்கும் நடிகை சுபகீதாவும் ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார்களாம். இதேபோல் ஷாலினி கேரக்டரில் நடிக்கும் நடிகை சத்யப்பிரியாவுக்கும், ஆறுமுகம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் செபஸ்டியனுக்கும் ஒரு நாளைக்கு 5 முதல் 8 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.
கயல் சீரியல் மூர்த்திக்கு சம்பளம் எவ்வளவு?
விக்னேஷ் கேரக்டரில் நடித்து வரும் கோபிக்கும், அவரது மனைவியாக தேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை நிலாவுக்கும் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். அதேபோல் காமாட்சி, ராஜலட்சுமி, சிவசங்கரி மற்றும் மாலதி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறார்களாம்.
மேலும் தர்மலிங்கம் கேரக்டரில் நடிக்கும் நடிகர் முத்துராமன் மற்றும் வடிவு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சுமங்கலி மற்றும் மூர்த்தி கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஐயப்பன் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 12 முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறதாம்.
சஞ்சீவை விட அதிக சம்பளம் வாங்கும் சைத்ரா ரெட்டி
கயல் சீரியலில் நாயகனாக எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சீவ் ஒரு நாளைக்கு ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதேபோல் இந்த சீரியலில் அதிகம் சம்பளம் வாங்குவது நடிகை சைத்ரா ரெட்டி தான். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.25 முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறதாம்.