MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சிந்தாமணியால் பிரேக் அப் ஆகும் சத்யா - ரேகாவின் காதல்? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிந்தாமணியால் பிரேக் அப் ஆகும் சத்யா - ரேகாவின் காதல்? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில், சிந்தாமணியின் மகள் தான் ரேகா என்கிற உண்மையை அறியும் சத்யா, காதலை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 16 2026, 09:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட மீனா, அவரைவிட அதிக வாக்குகள் வாங்கி பூ வியாபாரிகள் சங்க தலைவியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவரை எப்படியாவது அந்த பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார் சிந்தாமணி. மறுபுறம் மனோஜுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளை முழுவீச்சில் தொடங்கிய விஜயா, நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
ரேகா சொல்லும் உண்மை
Image Credit : jiohotstar

ரேகா சொல்லும் உண்மை

மீனாவின் தம்பி சத்யாவும், சிந்தாமணியின் மகள் ரேகாவும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் காதலுக்கு தற்போது வில்லியாக மாறி இருக்கிறார் சிந்தாமணி. சத்யாவை ஆபிஸில் சந்தித்து பேசும் ரேகா, தான் சிந்தாமணியின் மகள் என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார். இதை அறிந்ததும் பதறிப் போன சத்யா, நம்முடைய காதல் கைகூடாது என்றும், உங்க அம்மாவால் தான் என்னுடைய அக்கா பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். எலெக்‌ஷன் அப்போ எங்க அக்காவை கத்தியால் குத்தியதும் உங்க அம்மாவின் வேலை தான் என்று சொல்ல, அதற்கு ரேகா, நாம் இருவரும் உங்க அக்காவிடமும் மாமாவிடமும் பேசிப் பார்ப்போம் என கூறுகிறார்.

Related Articles

Related image1
நீத்துவுக்கு பளார் என அறைவிட்ட மீனா; மனோஜுக்கு செக் வைத்த ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Related image2
தலைகீழாக மாறிய தேர்தல் ரிசல்ட்; மீனாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சிறகடிக்க ஆசை சீரியல்
35
சிந்தாமணியிடம் சிக்கும் சத்யா
Image Credit : jiohotstar

சிந்தாமணியிடம் சிக்கும் சத்யா

இதையடுத்து சத்யா உடன் வெளியே செல்லும் ரேகா, தேர்தலில் வெற்றிபெற்ற மீனாவுக்கு கேக் வெட்டுவதற்காக ஒரு கடைக்கு ஜோடியாக சென்று கேக் வாங்குகிறார்கள். அப்போது சிந்தாமணி இவர்கள் இருவரையும் ஜோடியாக பார்த்துவிடுகிறார். மீனாவின் தம்பியோடு தன் மகள் ரேகா சுற்றுவதை பார்த்த சிந்தாமணி, அவரை பாலோ பண்ணுகிறார். அவர்கள் இருவரும் எப்படியோ தப்பித்துவிடுகிறார்கள். மறுபுறம் விஜயாவின் வீட்டிற்கு சில பெண்கள் கூட்டமாக வந்து, மீனாவை பார்க்க வந்திருப்பதாக சொல்கிறார்கள். அவரோ அப்படி இங்க யாரும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

45
மீனாவை சீண்டும் விஜயா
Image Credit : jiohotstar

மீனாவை சீண்டும் விஜயா

அந்த நேரம் பார்த்து அங்கு வரும் அண்ணாமலை அவர்களை சோஃபாவில் அமர வைக்கிறார். அங்கு வரும் மீனா அவர்களிடம் என்ன பிரச்சனை என கேட்க, அந்த சிந்தாமணியின் ஆட்கள் எங்களை வியாபாரம் செய்ய விடாமல் தொந்தரவு பண்ணுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்கிறார். அந்த நேரத்தில் குறுக்கிடும் விஜயா, மீனாவிடம் நீ இப்படி இவங்க கூட பேசிக்கிட்டு இருந்தால் சமையல் வேலையெல்லாம் யார் பார்ப்பா என கேட்க, அங்கு வரும் முத்து, அதெல்லாம் நான் பாத்துக்குறேன் என சொல்லிவிடுகிறார். பின்னர் சிறிது நேரத்தில் தன்னுடைய அறை சுத்தம் செய்யாமல் இருக்கு என விஜயா சொன்னதும், முத்து நான் சுத்தம் செய்றேன் என சொல்கிறார்.

55
முத்துவுக்கு பாராட்டு
Image Credit : jiohotstar

முத்துவுக்கு பாராட்டு

இவளை எப்படியாவது எழுப்ப வேண்டும் என முடிவெடுக்கும் விஜயா, தனக்கு காஃபி வேண்டும் என சொல்ல, உடனே முத்து காஃபியை கொண்டு வந்து நீட்டுகிறார். இதையெல்லாம் பார்த்த அந்த பெண்கள். இப்படி ஒரு பொறுப்பான பையன் உனக்கு கிடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும் மீனா என சொல்கிறார்கள். மறுபுறம் மனோஜை காட்டுகிறார்கள், அவர் தனக்கு புதிதாக நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் ஹரிணி உடன் சாப்பிட வெளியே செல்கிறார். மனோஜ் காரில் செல்லலாம் என சொல்ல, ஹரிணியோ ஆட்டோவில் போக ஆசைப்படுகிறார். இதனால் அவரை ஆட்டோவில் அழைத்து செல்கிறார் மனோஜ். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் எதாவது பண்ணிப்பேன் - காதல் கணவரால் கண்ணீர் விட்டு கதறிய விஜய் டிவி சீரியல் ஹீரோயின்!
Recommended image2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மெகா ட்விஸ்ட்! தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் ரகசியத்தை உடைத்த மீனா - கதிகலங்கிய குடும்பம்!
Recommended image3
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: தங்கமயிலால் வந்த சண்டை.. செந்திலை வீட்டை விட்டு துரத்திய மீனா! இன்றைய எபிசோட் அப்டேட்!
Related Stories
Recommended image1
நீத்துவுக்கு பளார் என அறைவிட்ட மீனா; மனோஜுக்கு செக் வைத்த ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
தலைகீழாக மாறிய தேர்தல் ரிசல்ட்; மீனாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சிறகடிக்க ஆசை சீரியல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved