- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தலைகீழாக மாறிய தேர்தல் ரிசல்ட்; மீனாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சிறகடிக்க ஆசை சீரியல்
தலைகீழாக மாறிய தேர்தல் ரிசல்ட்; மீனாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை சீரியலில் பூ வியாபாரிகள் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவும் சிந்தாமணியும் பூ வியாபாரிகள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு படுஜோராக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று தலைவி பதவியை தட்டி தூக்குவார்கள் என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். மீனாவுக்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும், சிந்தாமணி பல தில்லுமுல்லு வேலைகளை செய்து இருப்பதால் யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கும் என்பது புரியாத புதிராக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
லீடிங்கில் சிந்தாமணி
எலெக்சன் முடிந்த கையோடு தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை தொடங்குகிறார்கள். அப்போது முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சிந்தாமணி லீடிங்கில் இருப்பதாக வந்து அதிகாரி ஒருவர் கூறுகிறார். இதைக் கேட்டதும் சிந்தாமணியின் நாட்கள் படு குஷியாகி நீங்க தான் கண்டிப்பா ஜெயிப்பிங்க அக்கா என சொல்லி கொண்டாடுகிறார்கள். பின்னர் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவில் மீனாவை விட சிந்தாமணி 75 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதாக தேர்தல் அதிகாரி கூற மீனாவின் முகம் வாடிப் போகிறது. கடைசி நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என சொல்லி முத்து அவரை தெம்பூட்டுகிறார்.
வாக்கு எண்ணிக்கையில் காத்திருந்த ட்விஸ்ட்
பின்னர் இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கை முடிந்து விட்டதாக கூறும் தேர்தல் அதிகாரி, தான் தற்போது ரிசல்ட் வாசிக்க இருப்பதாக சொல்லி, மீராவை விட அதிகமாக வாக்குகள் பெற்று சிந்தாமணி வெற்றி பெற்றுள்ளதாக கூறுகிறார். இதைக் கேட்டதும் குஷியான சிந்தாமணி ஆட்கள் அவருக்கு மலர் தூவி, ஆட்டம் பாட்டம் என குதூகளிக்கிறார்கள். சிறிது நேரத்தில் உள்ளே இருந்து வெளியே வரும் மற்றொரு அதிகாரி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வாக்குப்பெட்டி மட்டும் எண்ணப்படாமல் இருப்பதாக சொல்கிறார். அதை எண்ணிய பின்னர் இறுதி முடிவு அறிவிக்கிறோம் என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்கள். அந்தப் பெட்டியில் உள்ள வாக்குகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணுகிறார்கள் அதில் அதிக அளவில் மீனாவுக்கு தான் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
வெற்றி பெற்ற மீனா
பின்னர் வெளியே வரும் தேர்தல் அதிகாரி சிந்தாதிரிப்பேட்டை வாக்கு பெட்டியின் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இறுதியாக சிந்தாமணியை விட 12 ஓட்டுகள் அதிகம் பெற்று மீனா வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கிறார். இதைக் கேட்டதும் குஷியான முத்து, சிந்தாமணி முன்பு குத்தாட்டம் போட்டு மீனாவின் வெற்றியை கொண்டாடுகிறார். அங்கிருந்த சுருதி, ஸ்வேதா, சீதா ஆகியோர் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். மீனாவிடம் போட்டியிட்டு தோற்றதால் கடும் அப்செட் ஆகும் சிந்தாமணி அங்கிருந்து சோகத்தோடு கிளம்பி செல்கிறார். முத்து தன்னுடைய அப்பா அண்ணாமலைக்கு போன் போட்டு, மீனா தேர்தலில் வெற்றி பெற்ற விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார்.
வயிற்றெரிச்சலில் விஜயா
மீனா வீட்டுக்கு வரும் முன்பே தன்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் போன் போட்டு அவர் தேர்தலில் ஜெயித்த விஷயத்தை சொல்லி உற்சாகமடைகிறார் அண்ணாமலை. வீட்டுக்கு வந்த கையோடு அண்ணாமலை இடம் ஆசிபெரும் மீனா, தான் இந்த தேர்தலில் ஜெயிக்க முக்கிய காரணமே நீங்கதான் என சொல்கிறார். மீனாவின் அம்மாவும், நீங்க மட்டும் இல்லையென்றால் என் மகள் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்திருக்க முடியாது. அதுமட்டும் இன்றி அவள் பூ வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்ததும் நீங்கள் தான். இன்று இந்த தேர்தலில் அவள் போட்டியிட காரணமும் நீங்கள் தான் என சொல்லி உச்சி முகர்கிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜயா வயிற்றெரிச்சலில் குமுறுகிறார்.
பழிவாங்க திட்டமிடும் சிந்தாமணி
இறுதியாக சிந்தாமணி தேர்தலில் தோற்ற சோகத்தில் வீட்டில் அமர்ந்திருக்க, அவரைச் சென்று சந்திக்கிறார் ரோகினி. என்ன ஆன்ட்டி இப்படி தனியா ஒக்காந்து இருக்கீங்க என ரோகிணி கேட்க, நான் தேர்தலில் தோற்றுவிட்டதால் என்கூட இருந்தவர்கள் எல்லாரும் சென்றுவிட்டார்கள் எனக் கூறி பீல் பண்ணுகிறார் சிந்தாமணி. இருந்தாலும் அந்த மீனாவை பழி வாங்காமல் விடமாட்டேன் என சொல்லி தன் வில்லத்தனத்தை காட்டுகிறார். அனேகமாக மீனாவை தலைவி பதவியில் இருந்து தூக்க ரோகினி உடன் சேர்ந்து சிந்தாமணி பிளான் போடுவார் என தெரிகிறது. அவர்களின் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா? இல்லையா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

