MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சி்ந்தாமணி vs மீனா : யாருக்கு ஆதரவு அதிகம்? அதிர வைக்கும் சர்வே முடிவு - சிறகடிக்க ஆசை அப்டேட்

சி்ந்தாமணி vs மீனா : யாருக்கு ஆதரவு அதிகம்? அதிர வைக்கும் சர்வே முடிவு - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியும் மீனாவும் பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் போட்டியிடும் நிலையில், தேர்தலுக்கு முன் சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 09 2026, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியை எதிர்த்து மீனா தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை போட்டியிட விடாமல் தடுக்க சதி செய்த சிந்தாமணி, ஆள் வைத்து மீனாவை கத்தியால் குத்தி உள்ளார். இதற்கு பயந்து மீனா நாமினேஷனை வாபஸ் வாங்க போவதாக சொல்ல, முத்து அவருக்கு புத்திமதி சொல்லி தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார். மறுபுறம் விஜயா மீனாவின் வளர்ச்சி பிடிக்காமல், அவருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை எல்லாம் கிழித்து வர, மீனாவின் தோழிகள் அவரை பிடித்து அடித்துள்ளனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
வலியால் துடித்த விஜயா
Image Credit : jiohotstar

வலியால் துடித்த விஜயா

விஜயா தர்ம அடி வாங்கிவிட்டு வலி தாங்க முடியாமல், பெட்டில் படுத்துக்கொண்டு, அச்சச்சோ... அம்மம்மா முதுகு வலிக்குதேனு புலம்பிக் கொண்டிருக்கிறார். அங்கு வரும் அண்ணாமலை என்னாச்சு என கேட்க, உண்மையை சொல்லமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் முத்து, வேண்டுமென்றே விஜயாவை வெறுப்பேற்றும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்ல, அம்மா மாதிரி வயசான ஒரு பொம்பள, முக்காடு போட்டுக்கிட்டு, மீனாவின் போஸ்டரை எல்லாம் கிழிச்சிட்டு இருந்துச்சு. அதை மீனாவின் தோழிகள் பார்த்து அந்த பொம்பளைக்கு தர்ம அடி கொடுத்திருக்காங்க. அந்த பொம்பள தான் யாருன்னு தெரியல என சொல்கிறார் முத்து.

Related Articles

Related image1
மீனாவுக்கு எதிராக சதி... துரத்தி அடிக்கப்பட்ட விஜயா; அதிர்ச்சியில் முத்து - சிறகடிக்க ஆசை அப்டேட்
Related image2
மரண பயத்தை காட்டிய சிந்தாமணி... நாமினேஷன் வாபஸ் வாங்கும் முடிவில் மீனா..! சிறகடிக்க ஆசை அப்டேட்
35
அதிர வைக்கும் சர்வே
Image Credit : jiohotstar

அதிர வைக்கும் சர்வே

முத்து சொன்னதையெல்லாம் கேட்ட அண்ணாமலை, விஜயா தான் இதுமாதிரி சில்றத்தனமான வேலையை செய்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்கிறார். பின்னர் விஜயாவிடம் அட்வைஸ் பண்ணுகிறார். ஆனால் விஜயா அதையெல்லாம் காதுகொடுத்து கேட்பதாக இல்லை. மறுபுறம் ஸ்ருதியும் ஸ்வேதாவும் பூக்கடை வைத்திருப்பவர்களை எல்லாம் நேரில் சந்தித்து இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என சர்வே எடுக்கிறார்கள். எல்லாரிடமும் சர்வே எடுத்து பார்க்கும் போது சிந்தாமணிக்கு 65 சதவீதமும், மீனாவுக்கு 35 சதவீதமும் வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

45
களத்தில் இறங்கும் முத்து
Image Credit : jiohotstar

களத்தில் இறங்கும் முத்து

சிந்தாமணி தான் தேர்தலில் லீடிங்கில் இருக்கிறார் என்பதை அறிந்ததும் அதனை முத்துவிடம் சொல்கிறார்கள். மீனா மட்டும் இந்த எலெக்‌ஷன்ல ஜெயிக்கலேனா அவ அப்செட் ஆகிடுவா, எப்படியாச்சும் அவளை ஜெயிக்க வைக்கணும் என இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு பூக்கடைக்கும் சென்று அங்குள்ள உறுப்பினர்களை சந்தித்து, மீனா இந்த எலெக்‌ஷனில் ஜெயித்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை எடுத்துச் சொல்லி ஒவ்வொரு கடையாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள். அதன்பின் ஸ்ருதியும், ஸ்வேதாவும் மீனாவிடம் வாக்கு கேட்கும்படி பேச வைத்து வீட்டியோ எடுத்து சோசியல் மீடியாவில் போடுகிறார்கள்.

55
ஓட்டு கேட்டு செல்லும் மீனா
Image Credit : jiohotstar

ஓட்டு கேட்டு செல்லும் மீனா

வீட்டுக்குள்ளேயே இருந்தால் சரிப்பட்டு வராது என முடிவெடுத்த மீனா, காயத்தோடு, சாலையில் இறங்கி வாக்கு சேகரிப்பில் இறங்குகிறார். சிந்தாமணியின் ஆட்கள் தான் மீனாவை கத்தியால் குத்திவிட்டார்கள் என்று சொல்லி, முத்து ஒருபக்கம் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார். மீனா வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம், எல்லாருமே உனக்கு தான் வாக்களிப்போம் என சொல்கிறார்கள். இதனால் இந்த தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. இந்த தேர்தலில் சிந்தாமணியை தோற்கடித்து மீனா தலைவி ஆவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீண்டும் சீனுக்கு வந்த ஜீவானந்தம்... பேரைக் கேட்டதும் ஷாக் ஆன ஈஸ்வரி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
மீனாவுக்கு எதிராக சதி... துரத்தி அடிக்கப்பட்ட விஜயா; அதிர்ச்சியில் முத்து - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
போடி வெளிய... அறிவுக்கரசியை விரட்டும் ஈஸ்வரி; பயந்து நடுங்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related Stories
Recommended image1
மீனாவுக்கு எதிராக சதி... துரத்தி அடிக்கப்பட்ட விஜயா; அதிர்ச்சியில் முத்து - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
மரண பயத்தை காட்டிய சிந்தாமணி... நாமினேஷன் வாபஸ் வாங்கும் முடிவில் மீனா..! சிறகடிக்க ஆசை அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved