- Home
- Cinema
- தொலைக்காட்சி
- எலெக்ஷனில் காத்திருந்த ட்விஸ்ட்... மீனாவை டெபாசிட் இழக்க செய்தாரா சிந்தாமணி? சிறகடிக்க ஆசை சீரியல்
எலெக்ஷனில் காத்திருந்த ட்விஸ்ட்... மீனாவை டெபாசிட் இழக்க செய்தாரா சிந்தாமணி? சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை சீரியலில் பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் மீனாவை எதிர்த்து சிந்தாமணி போட்டியிடும் நிலையில், அதற்கான வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளதை போல் சிறகடிக்க ஆசை சீரியலிலும் தேர்தல் படுஜோராக நடக்க இருக்கிறது. பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக தேர்தல் நடைபெறுகிறது. இதில் சிந்தாமணி கைகாட்டும் ஆள் தான் இதற்கு முன்பு வரை ஜெயித்துள்ளனர். இந்த முறை சிந்தாமணியையே உசுப்பேற்றி களத்தில் இறக்கிவிட்டுள்ளனர். சிந்தாமணி போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் மீனாவும் அவரை எதிர்த்து களத்தில் குதித்துள்ளார். சிந்தாமணி பணத்தை கொடுத்து வாக்கு வேட்டை நடத்த, மீனா பல நலத் திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தேர்தல் ஆரம்பம்
மீனாவும், சிந்தாமணியும் போட்டிபோட்டு வாக்கு வேட்டையில் ஈடுபட்ட நிலையில், பிரச்சாரம் முடிந்து, தேர்தலுக்கான நேரம் வந்துவிட்டது. வாக்குச்சீட்டு முறையில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொருவராக சென்று வாக்குகளை செலுத்தினர். மீனாவும் சிந்தாமணியும் ஒரே நேரத்தில் சென்று வாக்களித்தனர். அவர்கள் இருவரும் ரிசல்டை தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கின்றனர். தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டியில் இருக்கும் வாக்குச் சீட்டுகளை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை தொடங்குகிறார்கள்.
ஜெயித்தாரா சிந்தாமணி?
இதில் மீனாவைக் காட்டிலும் சிந்தாமணிக்கு தான் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இதனால் குஷியான சிந்தாமணி, மீனாவை பார்த்து ஏழனமாக சிரிக்கிறார். சிந்தாமணியின் ஆட்கள் அவருக்கு பூ தூவி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மீனா மனமுடைந்துபோகிறார். முத்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அதேபோல் ஸ்வேதா, ஸ்ருதி ஆகியோரும் மீனாவை சமாதானப்படுத்துகிறார்கள். சிந்தாமணி தேர்தலில் ஜெயித்ததைவிட மீனா தோல்வி அடைந்திருப்பதால் விஜயா செம சந்தோஷம் அடைகிறார்.
காத்திருக்கும் ட்விஸ்ட்
இப்படி சிந்தாமணி ஜெயிப்பது போல் காட்டியது கனவாக கூட இருக்கலாம். ஏனெனில் சிந்தாமணிக்கு மீனா ஜெயித்துவிடுவாரோ என்கிற பயம் நிறையவே இருக்கிறது. அதுமட்டுமின்றி சிந்தாமணி போல் பணத்தை மட்டும் நம்பி தேர்தலில் நிற்காமல், தான் பதவிக்கு வந்தால் பூ வியாபாரிகளுக்கு இலவச கல்வி, மருத்துவம் ஆகியவற்றை கொடுப்பேன் என்று ஆக்கப்பூர்வமான விஷயங்களை சொல்லி வாக்கு சேகரித்து இருக்கிறார். அதேபோல் மீனாவுக்கு தான் அதிகளவு மக்கள் ஆதரவு இருப்பதால் அவரே இந்த தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அடுத்தது என்ன?
ஒருவேளை மீனா இந்த எலெக்ஷனில் ஜெயித்துவிட்டால், சிந்தாமணியின் ஆட்டம் சற்று அடங்கும். அதுமட்டுமின்றி இந்த எலெக்ஷனுக்கு பின்னர் சிந்தாமணியின் மகள் தான் ரேகா என்கிற உண்மையும் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அது தெரிந்தால், மீனா தன்னுடைய தம்பியின் காதலுக்கு ஓகே சொல்வாரா? அப்படி மீனா பெரிய மனசோடு ஓகே சொன்னாலும் சிந்தாமணி ரேகாவின் காதலை ஏற்க மறுத்துவிடுவார். இதனால் இனிவரும் எபிசோடுகளில் செம ட்விஸ்ட் காத்திருக்கிறது.

