MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • நீத்துவுக்கு பளார் என அறைவிட்ட மீனா; மனோஜுக்கு செக் வைத்த ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

நீத்துவுக்கு பளார் என அறைவிட்ட மீனா; மனோஜுக்கு செக் வைத்த ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிடம் முத்துவை பற்றி இழிவாக பேசிய நீத்துவுக்கு கன்னத்தில் பளார் என அறைவிழுந்துள்ளது. அதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 13 2026, 09:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் தேர்தலில் தோற்ற கோபத்தில் இருக்கும் சிந்தாமணி, தலைவிரிகோலத்தில் அமர்ந்துகொண்டு, ரோகிணியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த மீனாவை நான் சும்மா விடமாட்டேன். எலெக்‌ஷனில் ஜெயிச்சா என்ன, என்னோட ஆளுங்களை வைத்து அவளை இந்த தலைவர் போட்டியில் இருந்தே ஓட வைக்கிறேன் என சபதம் எடுக்கிறார். பணம் இருக்கும்போது எனக்கு என்ன கவலை. பணத்தை வைத்து, அவளை இந்த சங்கத்தில் இருந்தே தூக்குறேன் பாரு. மறுபடியும் எலெக்‌ஷன் வரவைத்து நான் அன்னபோஸ்டா ஜெயிப்பேன் என ரோகிணியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார் சிந்தாமணி.

25
பிரச்சனை பண்ணும் நீத்து
Image Credit : jiohotstar

பிரச்சனை பண்ணும் நீத்து

மறுபுறம் மீனாவும், முத்துவும் பிளான் பண்ணி ஸ்ருதியையும், ரவியையும் டூர் அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் டூர் போயிட்டு வரும் வரை முத்துவும், மீனாவும் தான் ரெஸ்டாரண்டை பார்த்துக் கொள்ளப் போகிறார்கள். மறுநாள் முத்துவும், மீனாவும், ரெஸ்டாரண்டை கவனித்துக் கொண்டிருக்கும் போது அங்கு நீத்து வருகிறார். அவர் ரவி எங்கே, போன் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறான். இன்னைக்கு நான் என்னோட பூக்கடையை ஓபன் பண்ணுறேன். அவன் இல்லாம நான் எப்படி கடை திறப்பு விழாவை நடத்த முடியும். அவனை எங்க மறச்சு வச்சிருக்கீங்க, வரச்சொல்லுங்க என கூறுகிறார்.

Related Articles

Related image1
தலைகீழாக மாறிய தேர்தல் ரிசல்ட்; மீனாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சிறகடிக்க ஆசை சீரியல்
Related image2
எலெக்‌ஷனில் காத்திருந்த ட்விஸ்ட்... மீனாவை டெபாசிட் இழக்க செய்தாரா சிந்தாமணி? சிறகடிக்க ஆசை சீரியல்
35
அறைவிட்ட மீனா
Image Credit : jiohotstar

அறைவிட்ட மீனா

ரவி இங்கே இல்லை என்று முத்துவும் மீனாவும் சொல்கிறார்கள். அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் நீத்து இல்லாததால், கோபமடையும் மீனா, அவரை செம திட்டு திட்டுகிறார். ஏண்டி இப்படி அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுறியே, ஒழுங்கு மரியாதையா, வாழத் தெரியாத என சொன்னதும், நீத்து முத்துவை பற்றி அவதூறாக பேசுகிறார். உன் புருஷன் மட்டும் என்ன ஒழுங்கானவனா, அவன் ஒரு ரெளடி தான என சொன்னதும் செம கோபமடைந்த மீனா, நீத்துவுக்கு கன்னத்திலேயே பளார் என அறைவிடுகிறார். என்னைய இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டேல்ல, உன்னை சும்மா விடமாட்டேன் என சொல்லிவிட்டு நீத்து அங்கிருந்து கிளம்புகிறார்.

45
டைவர்ஸ் கேஸில் ட்விஸ்ட்
Image Credit : jiohotstar

டைவர்ஸ் கேஸில் ட்விஸ்ட்

மறுபுறம் மனோஜ் கோர்ட்டில் தொடர்ந்த டைவர்ஸ் கேஸ் விசாரணைக்கு வருகிறது. இதனால் இந்த முறை தன்னுடைய மகன் கிரிஷை தன்னுடன் அழைத்து செல்கிறார் ரோகிணி. கோர்ட்டிற்கு வரும் மனோஜ், நீதிபதியிடம் தனக்கு டைவர்ஸ் வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் ரோகிணியோ, பயங்கரமா, டிராமா பண்ணி அழுது சீனைபோட்டு, இவரால நான் நிறைய கடன் வாங்கி வச்சுட்டேன். எனக்கு குழந்தை வேற இருக்கு, இப்போ டைவர்ஸ் கொடுத்துட்டா நான் என்ன பண்ணுவது என கூறி கண்ணீர் சிந்துகிறார். இதையடுத்து நீதிபதி, இந்த டைவர்ஸ் கேஸை 6 மாதத்திற்கு தள்ளிவைப்பதாக சொல்கிறார்.

55
மனோஜுக்கு செக் வைக்கும் ரோகிணி
Image Credit : jiohotstar

மனோஜுக்கு செக் வைக்கும் ரோகிணி

அதுமட்டுமின்றி இந்த ஆறு மாதமும் ரோகிணிக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் மனோஜ் கொடுக்க வேண்டும். உங்களுக்கு சம்மதம் என்றால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நீதிபதி ஒரே போடாக போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. ரோகிணிக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க மனோஜ் சம்மதிப்பாரா? ரோகிணியின் இந்த டிராமாவிற்கு மனோஜ் செவி சாய்ப்பாரா? இல்லையா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும். அதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தர்ஷனுக்கு மீண்டும் கல்யாணம்... ஈஸ்வரியின் ஆசை நிறைவேறுமா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
TRP ரேஸில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி சீரியல்கள்; கடும் சரிவை சந்தித்த விஜய் டிவி
Recommended image3
தலைகீழாக மாறிய தேர்தல் ரிசல்ட்; மீனாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சிறகடிக்க ஆசை சீரியல்
Related Stories
Recommended image1
தலைகீழாக மாறிய தேர்தல் ரிசல்ட்; மீனாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image2
எலெக்‌ஷனில் காத்திருந்த ட்விஸ்ட்... மீனாவை டெபாசிட் இழக்க செய்தாரா சிந்தாமணி? சிறகடிக்க ஆசை சீரியல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved