- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கல்யாணி என் தங்கச்சி... நாங்க ட்வின்ஸ்; முத்துவிடம் புது குண்டை தூக்கிபோட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்
கல்யாணி என் தங்கச்சி... நாங்க ட்வின்ஸ்; முத்துவிடம் புது குண்டை தூக்கிபோட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை முத்துவுக்கு தெரிந்த நிலையில், அதை வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்ல எல்லோரையும் போன் போட்டு வர வைக்கிறார் முத்து.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மை முத்துவுக்கு தெரியவருகிறது. ரோகிணியின் முதல் கணவர் சேகரின் அண்ணன் சென்னைக்கு வந்தபோது முத்து உடன் ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு சென்று ஒரு போட்டோவை ஃபிரேம் போடுகிறார். அந்த போட்டோவில் ரோகிணி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து, அது யார் என்று விசாரிக்கும் போது தான் இது தான் என் தம்பியோட பொண்டாட்டி கல்யாணி, இவளோட மகன் தான் கிரிஷ் என்கிற உண்மையை உடைக்கிறார். இதன்பின் வீட்டுக்கு சென்று முத்து சண்டை போடுவது போல் நேற்றைய எபிசோடு முடிவுக்கு வந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
என்னது ட்வின்ஸா?
வீட்டில் உள்ள அனைவரிடமும் முத்து வீட்டில் உள்ளவர்கள் பற்றிய எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறார். ஆனால் ரோகிணி, அது என்னோட அக்கா என்றும், அவர் பெயர் தான் கல்யாணி எனவும் கூறிவிடுகிறார். என் அக்காவோட குழந்தை தான் கிரிஷ். நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ் என புது குண்டை தூக்கிப்போட முத்துவே கன்பியூஸ் ஆகிறார். பின்னர் தான் இது முத்துவின் கனவு என்பது தெரியவருகிறது. முத்துவுக்கு ரோகிணி பற்றிய உண்மை தெரிந்தபின்னர் அவர் வீட்டுக்கு செல்லாமல் நேராக பாருக்கு போய் நன்கு குடிக்கிறார். அப்போது போதையில் நாம் வீட்டில் இந்த உண்மையை சொன்னால் என்ன நடக்கும் என நினைத்துப் பார்த்திருக்கிறார்.
அனைவரையும் வீட்டுக்கு வரச்சொல்லும் முத்து
இதன்பின்னர் முதல் வேலையாக மீனாவுக்கு போன் போடும் முத்து, உடனே வீட்டுக்கு வா முக்கியமான விஷயம் சொல்லனும் என அழைக்கிறார். மறுபுறம் நீத்துவின் ரெஸ்டாரண்டை காட்டுகிறார்கள். அந்த ரெஸ்டாரண்ட் கூட்டமின்றி காத்துவாங்குகிறது. இதனால் நீத்து ரவியிடம் புலம்பிக் கொண்டிருக்க, அந்த ஓட்டலில் வேலை பார்ப்பவர்கள் நாங்க வேலைக்கு வரவில்லை, சம்பளமும் கம்மியா இருக்கு, என சொல்லி கிளம்பிவிடுகிறார்கள். அந்த நேரம் பார்த்து முத்து, ரவிக்கு போன் பண்ணி, நீ உடனே ஸ்ருதியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வா, ஒரு அதிர்ச்சியான விஷயம் சொல்லப்போறேன் என கூறுகிறார்.
செம சம்பவம் வெயிட்டிங்
முத்து சொன்னபடி அனைவரும் வீட்டில் காத்திருக்க, மனோஜும் வீட்டுக்கு வந்து முத்துவை தேடுகிறார். ஏனெனில், கிரிஷை தத்துக்கொடுத்தால் 25 லட்சம் பணம் கிடைக்கும் என்று தன் அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்படும் மனோஜ், அதை எப்படியாச்சும் முத்துவிடம் பேசி, கிரிஷை லண்டன் தம்பதிக்கு தத்துக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார் மனோஜ், இதையடுத்து வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார் முத்து. ஃபுல் போதையில் வரும் அவர் வந்ததும் வீட்டின் கதவு, ஜன்னல் என எல்லாத்தையும் சாத்துகிறார். அப்போது கிரிஷை தத்துக்கொடுக்க இருக்கும் விஷயத்தை மனோஜ், முத்துவிடம் சொல்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்தது. இதன்பின்னர் நாளை எபிசோடில் ரோகிணி பற்றிய உண்மையை முத்து போட்டுடைக்க உள்ளார். அதன்பின் என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

