- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கிரிஷோட அம்மா ரோகிணியா? கண்டுபிடித்த முத்து... சிக்கலில் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
கிரிஷோட அம்மா ரோகிணியா? கண்டுபிடித்த முத்து... சிக்கலில் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவுக்கு ரோகிணி தான் கிரிஷோட அம்மா கல்யாணி என்கிற உண்மை தெரியவந்திருக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் மீது முத்துவுக்கு சந்தேகம் வந்த நிலையில், ரோகிணியை தனியாக அழைத்து பேசிய மீனா, இன்னும் 7 நாளில் நீ உன்னைப் பற்றிய உண்மையை சொல்ல வேண்டும் என கெடு விதித்திருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் தரமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. ரோகிணியின் முதல் கணவர் சேகரின் அண்ணன் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே சென்னைக்கு வந்திருந்தபோது முத்துவின் காரில் சென்றபோது அவருடன் நெருக்கமானார். இதையடுத்து தற்போது மீண்டும் சென்னைக்கு வந்துள்ள அவர் முத்துவின் காரில் பயணிக்கிறார்.
முத்துவுக்கு தெரியவரும் உண்மை
அப்போது தன்னை ஒரு ஸ்டூடியோவுக்கு அழைத்து செல்லுமாறு சொல்ல, முத்துவும் அவரை தனக்கு தெரிந்த ஸ்டூடியோவுக்கு அழைத்து செல்கிறார். அப்போது அந்த நபர் உள்ளே சென்று தன்னுடைய தம்பி சேகரின் கல்யாண போட்டோவை பிரேம் போட சொல்கிறார். அவர் தன்னுடைய போனை காரிலேயே விட்டுச் செல்கிறார். அப்போது அந்த போனுக்கு கால் வர, முத்து அதை எடுத்துக் கொண்டு கொடுக்க ஸ்டூடியோவுக்குள் செல்கிறார். அப்போது, அவர் பிரேம் போடச் சொன்ன போட்டோவை முத்து பார்த்துவிடுகிறார். அந்த போட்டோவில் ரோகிணி இருப்பதை பார்த்து முத்து அதிர்ச்சி அடைகிறார்.
ரோகிணி தான் கல்யாணியா?
பின்னர் அவரிடம் இது யார் என்று கேட்கும் போது, இதுதான் என் தம்பி சேகரோட பொண்டாட்டி கல்யாணி என்றும், இவர்களின் பையன் தான் கிரிஷ் எனவும் கூறுகிறார். தற்போது கல்யாணி இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சென்னையில் தான் இருக்கிறார் என்கிற விஷயத்தையும் அவர் கூறுகிறார். இத்தனை நாட்களாக ரோகிணி ஏமாற்றி வந்த விஷயத்தை அறிந்து முத்து கடும் கோபம் கொள்கிறார். அவர்களை காரில் டிராப் செய்துவிட்டு, வீட்டுக்கு விறுவிறுவென செல்கிறார்.
கிரிஷை தத்துக்கொடுக்க முடிவெடுக்கும் மனோஜ்
மறுபுறம் மனோஜிடம் பேசும் ஜீவா, கிரிஷை தத்தெடுக்க லண்டனில் உள்ள ஒரு தம்பதி ஆசைப்படுவதாகவும், அதற்காக அவர்கள் 25 லட்சம் தர ரெடியாக இருப்பதாகவும் சொல்கிறார். பணம் தருவார்கள் என்று அறிந்ததும் மனோஜ் கிரிஷை லண்டன் தம்பதிக்கு தத்துக் கொடுக்க முடிவெடுக்கிறார். இதுகுறித்து ரோகிணியிடமும் அவர் சொல்கிறார். அவர் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னாலும், அதை கேட்காத மனோஜ், அவனோட வாழ்க்கை நல்லா இருக்கும், இதுகுறித்து முத்துவிடம் நான் பேசுகிறேன் என சொல்கிறார்.
வீட்டில் வெடிக்கும் பிரச்சனை
ரோகிணி பற்றிய உண்மை தெரிந்த கோபத்தில் வீட்டுக்கு வரும் முத்து, அனைவரையும் ஹாலுக்கு வரச் சொல்கிறார். அப்போது இத்தனை நாள் பார்லர் அம்மா நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்திருக்காங்க. நீங்கெல்லாம் நினைக்குற மாதிரி இவ ரோகிணி இல்ல கல்யாணி என சொன்னதும் ரோகிணி வெட வெடத்துப் போகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது? ரோகிணி பற்றி முத்து கண்டுபிடித்தது கனவா? இல்லை நிஜமா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

