- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மீனா விதித்த கெடு... ரோகிணி இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
மீனா விதித்த கெடு... ரோகிணி இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் விவகாரத்தில் முத்து மற்றும் அண்ணாமலைக்கு சந்தேகம் வந்துவிட்டதால், ரோகிணியை அழைத்து உண்மையை சொல்ல கெடு விதித்து இருக்கிறார் மீனா.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் தன் அம்மா இறந்த சோகமே இல்லாமல் ஜாலியாக இருப்பதால் அவன் மீது அண்ணாமலை மற்றும் முத்துவுக்கு டவுட் வருகிறது. கிரிஷின் பாட்டி எப்போ வருவார்கள் என்று விசாரிக்குமாறு மீனாவிடம் அண்ணாமலை சொல்ல, மறுபுறம் முத்துவும் கிரிஷ் விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்றும், அவன் அம்மா கூட இருப்பது போலவே நடந்துகொள்கிறான். அவன் மனோஜை அப்பா என அழைப்பதைப் பார்த்தால், யாரோ சொல்லிக் கொடுத்து தான் அவன் இப்படியெல்லாம் செய்கிறான் போலத் தெரிகிறது என முத்து சொல்ல, அதெல்லாம் எதுவும் இருக்காது என மீனா அவரை டைவர்ட் பண்ணிவிடுகிறார்.
ரோகிணிக்கு 7 நாள் டைம்
பின்னர் கிரிஷின் பாட்டிக்கு போன் போட்டு பேசுவதாக சொல்லிவிட்டு மாடிக்கு செல்லும் மீனா, ரோகிணியை அழைத்து பேசுகிறார். அவரிடம் எப்போ உண்மையை சொல்லப்போற என மீனா கேட்க, அதற்கு அவர் கிரிஷுக்கு மனோஜ் உடன் ஒரு பாண்டிங் வந்ததும் சொல்லிவிடுகிறேன் என கூறுகிறார். அதுவரைக்கும் பொறுத்திருக்க முடியாது என மீனா சொல்ல, சரி அம்மாவை வரச் சொல்லி கிரிஷை கூட்டிட்டு போகச் சொல்கிறேன் என கூறுகிறார் ரோகிணி. அப்போ கடைசி வரைக்கும் நீ உண்மையை சொல்ற ஐடியாவில் இல்ல, இப்போ சொல்றேன், உனக்கு 7 நாள் தான் டைம் அதற்குள் உண்மையை சொல்லாவிட்டால் நானே சொல்லிவிடுவேன் என கட் அண்ட் ரைட் ஆக சொல்லிவிடுகிறார் மீனா.
பொய் சொன்ன மீனா
இதையடுத்து கீழே செல்லும் மீனாவிடம் என்னம்மா கிரிஷ் பாட்டிகிட்ட பேசுனியா என அண்ணாமலை கேட்க, அவரும் பேசியதாக பொய் சொல்கிறார். ஊரில் சொத்து பிரச்சனை இன்னும் முடியவில்லையாம், இன்னும் 7 நாள்ல வந்துடுவேன்னு சொன்னாங்க என கூறுகிறார். இதையடுத்து ரூமுக்குள் செல்லும் ரோகிணியிடம் இன்னும் 7 நாள் தான் இருக்கு என மனோஜ் சொல்ல, அவருக்கு தூக்கி வாரிப்போடுகிறது.
இவனுக்கு எப்படி அது தெரியும் என ரோகிணி யோசிக்க, நம்ம ஷோரூம் திறந்து 1 வருடம் முடிவடைய இன்னும் 7 நாள் இருப்பதாக சொல்கிறார். வெளியே ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் இன்னும் 7 நாள் இருப்பதாக சொல்லி தன்னுடைய ரெஸ்டாரண்ட் தொடங்கி 100 நாள் ஆக 7 நாள் இருப்பதாக சொல்கிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
மீனாவும் தன் பங்குக்கு 7ந் தேதி என்னோட அம்மாவுக்கு பிறந்தநாள் என சொல்கிறார். உடனே முத்து, சரி நம்ம கிஃப்ட் வாங்கிட்டு போகலாம் என சொல்கிறார். மறுநாள் மீனா தன்னுடைய அம்மா வீட்டுக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சென்று அவரிடம் தாங்கள் வாங்கி வந்த சேலையை முத்துவும், மீனாவும் பரிசாக கொடுக்கிறார்கள். பின்னர் எண்ட்ரி கொடுக்கும் சீதா - அருண், சேலை கொடுப்பது மட்டுமின்றி ஒரு கம்மலையும் கிஃப்டாக கொடுக்கிறார்கள். இதையடுத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்.
அப்போது மீனாவுக்கு ரோகிணியின் தோழி மகேஸ்வரி போன் போட்டு பேசுகிறார். இந்த 7 நாள் கெடு விதித்தது பற்றி பேசி அவரின் முடிவை மாற்றப்பார்க்க, மீனா தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருப்பதாக சொல்லி போனை வைக்கிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன ஆகப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

