- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மனோஜ் - ரோகிணிக்கு செக் வைத்த பைனான்சியர்... கிரிஷ் மீது முத்துவுக்கு வந்த ட்வுட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
மனோஜ் - ரோகிணிக்கு செக் வைத்த பைனான்சியர்... கிரிஷ் மீது முத்துவுக்கு வந்த ட்வுட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் காணாமல் போன அண்ணாமலை வீட்டுக்கு திரும்பி வந்த நிலையில், பைனான்சியரும் திடீர் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தனக்கு ரோகிணி மூலம் கிடைத்த பெரிய ஆர்டரை நம்பி, பிசினஸை டெவலப் பண்ணுவதற்காக 30 லட்சம் கடன் வாங்கி இருந்த நிலையில், திடீரென அந்த ஆர்டர் கைநழுவிப் போனது. இதை அறிந்து மனோஜுக்கு கடன் கொடுத்த பைனான்சியர், வீட்டுக்கே வந்து, மனோஜ் வாங்கிய கடனுக்காக பொறுப்பேற்றுக் கொள்ளும்படி, அண்ணாமலையிடம் கையெழுத்து வாங்கிவிட்டு சென்றது மட்டுமின்றி, பணம் திரும்ப வராவிட்டால் வீட்டில் இருந்து ஒருவரை தூக்குவேன் என்றும் மிரட்டி இருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பைனான்சியரிடம் பணம் கொடுத்த அண்ணாமலை
காணாமல் போன அண்ணாமலை வீட்டுக்கு வந்த நிலையில், அவரிடம் அனைவரும் விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், மனோஜுக்கு கடன் கொடுத்த பைனான்சியரும் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். இதையடுத்து நான் தான் அவரை வரச் சொன்னேன் என அண்ணாமலை சொல்கிறார். தான் வீட்டை விட்டு சென்ற பின்னர் பைனான்சியரை சந்தித்து, தன் ஊரில் உள்ள சொத்தை அடமானம் வைத்து 3 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்ததாகவும், மீதமுள்ள பணத்தை மனோஜ் மாத மாதம் கொடுக்க அந்த பைனான்சியர் சம்மதம் தெரிவித்த விஷயத்தையும் அண்ணாமலை சொல்கிறார்.
கடனுக்கு பொறுப்பேற்ற மனோஜ்
இதையடுத்து பேசிய அந்த பைனான்சியர், என் வாழ்க்கையில் இவரைப் போன்று ஒரு தந்தையை பார்த்ததில்லை என ஃபீல் பண்ணி பேசியதோடு, அண்ணாமலையை மிரட்டி கையெழுத்து வாங்கிய பத்திரத்தை கிழித்துப் போடுகிறார். அதுமட்டுமின்றி மனோஜ் தன்னிடம் வாங்கிய கடனுக்கு வட்டித் தொகை செலுத்த வேண்டாம் என்றும், அவர் வாங்கிய தொகையை மாத மாதம் 1 லட்சமாக கொடுத்து கழித்துக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார். இதற்கு சம்மதம் தெரிவித்து மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் பத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தருமாறு கேட்க, அவர்களும் கையெழுத்து போடுகிறார்கள்.
கிரிஷ் மீது எழும் சந்தேகம்
இதையடுத்து மாதம் 1 லட்சம் பணம் எப்படி கட்டப்போகிறோம் என யோசிக்கும் மனோஜ் மற்றும் ரோகிணி, வேறு ஏதாவது புது பிசினஸ் தொடங்கலாமா எனவும் ஆலோசித்துள்ளனர். இறுதியாக நமக்கு தெரிந்த இந்த ஷோரூம் பிசினஸை டெவலப் பண்ணலாம் என முடிவெடுக்கின்றனர். மறுபுறம் கிரிஷ் ஸ்கூலில் டூர் போக 2500 ரூபாய் கேட்டு ஒரு லெட்டரை முத்துவிடம் நீட்ட, அதை நான் தருகிறேன், நீ தருகிறேன் என அனைவரும் சொல்ல, இறுதியாக முத்து நானே எல்லாவற்றை கட்டுகிறேன் என சொல்லிவிடுகிறார்.
இதையடுத்து முத்துவிடம் பேசும் அண்ணாமலை, கிரிஷின் பாட்டி எதுக்கு அவனை நம்ம வீட்டில் விட்டுச் சென்றார் என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது என சொல்ல, இரவில் முத்துவும் அதுபற்றி யோசிக்கிறார். பின்னர் மீனாவிடம் பேசும் அவர், கிரிஷுக்கு அவங்க அம்மா இறந்த சோகம் கொஞ்சம் கூட இல்லை. அது தான் எனக்கும் சந்தேகமாக இருக்கிறது என சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

