- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஓனரிடம் செம திட்டுவாங்கிய சோழன்... கடும் கோபத்தில் நிலா - அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
ஓனரிடம் செம திட்டுவாங்கிய சோழன்... கடும் கோபத்தில் நிலா - அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
அய்யனார் துணை சீரியலில் சோழனின் ஓனர் அவருக்கு போன் போட்டு திட்டியதால், செம அப்செட்டில் இருக்கிறார் நிலா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், சோழனை காயத்ரியின் வீட்டுக்கு அழைத்து சென்ற நிலா, அவரை காயத்ரியிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். சோழனும் நான் செஞ்சதெல்லாம் தப்பு என சொல்லி மன்னிப்பு கேட்கிறார். காயத்ரியும் பரவாயில்லை விடுங்க என சொன்னதும் சோழன் வெளியே வந்துவிடுகிறார். பின்னர் நிலாவும், சோழனும் வீட்டுக்கு வருகிறார். வந்த கையோடு நடந்தவை எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்கிறார். நான் உண்மையாவே திருந்திவிட்டேன். இனி பொண்ணுங்ககிட்ட பேசமாட்டேன் என அள்ளிவிடுகிறார். எல்லாருமே சோழனை கிண்டலடிக்கிறார்கள்.
சேரனை கிண்டலடிக்கும் தம்பிகள்
அப்போது நிலா மட்டும் சோழனுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். அவரே திருந்திவிட்டார், நீங்க ஏன் அவரை கிண்டல் பண்ணுறீங்க, என சொல்லிக் கொண்டிருக்கும் போது, சேரனுக்கு மெசேஜ் வருகிறது. அது வேறுயாருமில்லை சந்தாவிடம் இருந்து தான் மெசேஜ் வந்திருக்கிறது. சந்தாவிடம் இருந்து மெசேஜ் வந்ததை வைத்து சேரனை எல்லோரும் கிண்டலடிக்கிறார்கள். இதையடுத்து பல்லவனை பார்த்து, நீ மட்டும் சிரிக்காதடா, இன்னைக்கு கண்ஸ்ட்ரக்ஷன் வந்து நீ என்ன சேட்டையெல்லாம் பண்ணிவச்ச என சேரன் சொல்ல, எல்லாருமே அப்படி என்னடா பண்ணுன என கேட்கிறார்கள்.
சோழனை திட்டும் ஓனர்
பின்னர் பல்லவன் செய்த குறும்புத்தனத்தை அனைவரிடமும் சொல்ல, எல்லாரும் சிரிக்கிறார்கள். அந்த சமயத்தில் சோழனுக்கு ஒரு ஃபோன் கால் வருகிறது. அவரின் ஓனர் தான் போன் போடுகிறார். இப்போ தான் எல்லாரிடமும் திருந்திவிட்டேன் என சொல்லிக்கொண்டிருந்த சோழனை, அவருடைய ஓனர் போன் போட்டு திட்டுகிறார். வண்டில வர்ற பொண்ணுங்க கிட்ட வாய வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியா, ஏன் பொண்ணுங்ககிட்ட பேசுற, எதுக்கு நீங்க அழகா இருக்கீங்க, உங்க செண்டு சூப்பரா இருக்குனுலாம் கேக்குற என சொல்லி திட்டுகிறார்.
நிலா கொடுத்த கிஃப்ட்
இப்படியே பண்ணிகிட்டு இருந்தேன்னா நம்ம கம்பெனி என்ன ஆகுறது. நம்ம கம்பெனியோட பேரு தாண்டா கெட்டுப் போகும். இதுக்கப்புறம் இதுமாதிரி ஏதாச்சும் புகார் வந்துச்சுனா நான் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன் என சொல்லி போனை கட் பண்ணிவிடுகிறார் ஓனர். இப்போ தான் நிலா, சோழனுக்கு கொஞ்சம் கொஞ்சமா சப்போர்ட் பண்ணிக்கிட்டு வந்தாங்க. ஆனால் இப்படி விஷயத்தை கேட்டதும் சும்மா இருப்பாரா... பயங்கரமா கோபப்பட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிடுகிறார். பின்னர் நிலா, பல்லவனுக்காக தான் வாங்கி வந்த கிஃப்டை கொடுக்கிறார். அவர் வாட்ச் கொடுத்ததை பார்த்து செம குஷியான பல்லவன், எல்லோரிடமும் அதை காட்டுகிறார். இதையடுத்து என்ன ஆனது? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

