- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சோழனின் அட்ராசிட்டி தாங்க முடியல... பாண்டியனுக்கு செம டோஸ் கொடுக்கும் வானதி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
சோழனின் அட்ராசிட்டி தாங்க முடியல... பாண்டியனுக்கு செம டோஸ் கொடுக்கும் வானதி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
அய்யனார் துணை சீரியலில் சோழன் காரில் பெண்ணை அழைத்து செல்லும் போது அதிகப்பிரசிங்கித்தனமாக பேசி அவரிடம் திட்டு வாங்கி உள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில் நிலா பல்லவனுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். இதையடுத்து பல்லவனை பைக்கில் அழைத்து வந்து பஸ்டாப்பில் டிராப் பண்ணுகிறார். பின்னாடியே அங்கு வரும் சோழன், நிலா உன்னை எங்கு அழைச்சுட்டு போனா என கேட்கிறார். அண்ணி என்னை கோவிலுக்கு அழைத்துச் சென்று அட்வைஸ் பண்ணினார், அவங்க ரொம்ப சூப்பரானவங்க என புகழ்ந்து பேசுகிறான் பல்லவன். அதற்கு சோழனும், ஆமா அவ நல்லவனு எனக்கு தெரியும், பார்த்தியா நான் எப்படி கண்டுபிடிச்சு ஒரு நல்ல அண்ணிய அழைச்சிட்டு வந்திருக்கேன் பாத்தியா என பெருமையாக பேசுகிறார்.
திட்டுவாங்கும் சோழன்
இதையடுத்து சோழன் அங்கிருந்து சென்றுவிட, காயத்ரி அங்கு வருகிறார். அவர் பல்லவனிடம், எல்லாம் ஓகேவா என விசாரிக்கிறார். நேத்து அழுதியே என்னாச்சு, வீட்ல எதாச்சும் பிரச்சனையா என கேட்க, அதெல்லாம் ஒன்னுமில்ல நார்மலா தான் இருக்கேன் என பல்லவன் சொல்லிவிடுகிறார். பின்னர் சோழன் ஒரு பெண்ணை தன்னுடைய காரில் அழைத்து செல்கிறார். அப்போது அந்தப் பெண் போனில் பேசுவதையெல்லாம் கவனித்துக்கொண்டே வரும் சோழன், கூடவே சேர்ந்து கமெண்ட் பண்ணுகிறார். அவரின் இந்த செயலால் அந்த பெண் கடுப்பாகி சோழனை திட்டுகிறார்.
ஒட்டுக்கேட்ட நிலா
அப்போது நிலா, சோழனுக்கு போன் போட்டு, சாயங்காலம் என்னை ஆபிஸில் வந்து பிக் அப் பண்ணிகிட்டு போங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும் என கூறுகிறார். அதைக்கேட்டு சோழனும் குஷியாகிவிடுகிறார். நிலா என்ன சொல்லப்போறாளோ என்கிற எதிர்பார்ப்பில் போனை கட் பண்ணாமலே வைத்துவிடுகிறார். அதன்பின்னர் காரில் வரும் பெண்ணிடம் பேசி சோழன் கடலை போடுவதையெல்லாம் நிலா போனில் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அந்த பெண்ணிடம் சோழன் திட்டுவாங்குவதை கேட்டுக்கொண்டே இருக்கும் அவர், இவன் அட்ராசிட்டி தாங்க முடியல என மனசுக்குள்ளேயே நினைக்கிறார்.
பாண்டியன் உடன் சண்டை போடும் வானதி
மறுபுறம் பாண்டியன் தன்னுடைய கடையை எப்படி அலங்கரிக்கலாம் என போனில் டிசைன் பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் வானதி, வழக்கம்போல பாண்டியன் உடன் சண்டைபோடுகிறார் வானதி. இப்போல்லாம் நீ என்னைய கூப்பிடுவதில்லை. உனக்கு எதற்கெடுத்தாலும் அண்ணி தான். அவங்க பின்னாடியே போறேல, நான்லாம் உனக்கு எதுக்கு என வழக்கம்போல சண்டையை போட்டுவிட்டு கிளம்புகிறார் வானதி. அதேபோல் நிலாவை சோழன் பிக் அப் பண்ணிவிட்டு காரில் செல்கிறார். சோழனிடம் நிலா சொல்லப்போகும் விஷய்ம் என்ன என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

