- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP ரேஸில் தூக்கியெறியப்பட்ட எதிர்நீச்சல்... டாப்புக்கு வந்த அய்யனார் துணை - இந்த வார டாப் 10 சீரியல் இதோ
TRP ரேஸில் தூக்கியெறியப்பட்ட எதிர்நீச்சல்... டாப்புக்கு வந்த அய்யனார் துணை - இந்த வார டாப் 10 சீரியல் இதோ
சின்னத்திரை சீரியல்களின் டாப் 10 டிஆர்பி நிலவரம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இதில் கடந்த வாரம் டாப் 5ல் இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இந்த வாரம் சரிவை சந்தித்து உள்ளது.

Top 10 Tamil Serial TRP Rating
சின்னத்திரை சீரியல்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது அதன் டிஆர்பி ரேட்டிங் தான். மக்கள் மத்தியில் சீரியல்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை கணிப்பதற்கு டிஆர்பி உதவுகிறது. ஒருவேளை டிஆர்பி குறைந்தால், அந்த எபிசோடுகளை ஆராய்ந்து திரைக்கதையை மேலும் மெருகேற்றுவார்கள். அப்படி சின்னத்திரையில் 51வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் டிஆர்பி நிலவர்ம் தற்போது வெளியாகி உள்ளது. வழக்கம்போல் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெற்று உள்ளது. அவற்றை பார்க்கலாம்.
மீண்டும் சீனுக்கு வந்த சின்ன மருமகள்
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சின்ன மருமகள் கடந்த வாரம் டாப் 10 பட்டியலிலேயே இடம்பெறாமல் இருந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் அந்த பட்டியலில் நுழைந்துள்ளது. கடந்த வாரம் 10ம் இடத்தில் இருந்த சன் டிவியின் புத்தம் புது சீரியலான செல்லமே செல்லமே தொடரை பின்னுக்கு தள்ளி 6.47 புள்ளிகள் உடன் 10ம் இடத்தில் உள்ளது சின்ன மருமகள். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த வாரத்தைக் காட்டிலும் டிஆர்பி புள்ளிகள் குறைந்திருந்தாலும் 9-ம் இடத்திலேயே நீடிக்கிறது. இதற்கு இந்த வாரம் 7.64 புள்ளிகள் கிடைத்துள்ளன.
சறுக்கலை சந்தித்த எதிர்நீச்சல்
சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது கடந்த வாரம் 8.57 புள்ளிகள் உடன் 5-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதோடு, டிஆர்பி ரேஸிலும் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அதற்கு இந்த வாரம் 8.15 புள்ளிகள் கிடைத்துள்ளன. 8.18 புள்ளிகள் உடன் அன்னம் சீரியல் 7-ம் இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் மளமளவென முன்னேறி 6-ம் இடத்துக்கு சென்றிருக்கிறது. இந்த சீரியலுக்கு இந்த வாரம் 8.32 புள்ளிகள் கிடைத்துள்ளன.
முன்னேறிய அய்யனார் துணை
விஜய் டிவியின் லேட்டஸ்ட் டிரெண்டிங் சீரியலான அய்யனார் துணை கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி ஐந்தாம் இடத்துக்கு சென்றிருக்கிறது. அதற்கு 8.69 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த வாரம் நான்காம் இடத்தை சன் டிவியின் மருமகள் சீரியல் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 8.80 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. வழக்கம்போல் கயல் மூன்றாவது இடத்தையும், சிங்கப்பெண்ணே 2வது இடத்தையும், மூன்று முடிச்சு முதலிடத்தையும் பிடித்துள்ளது. இதில் கயல் சீரியலுக்கு 9.13 ரேட்டிங்கும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.83 ரேட்டிங்கும், மூன்று முடிச்சு சீரியலுக்கு 10.03 ரேட்டிங்கும் கிடைத்துள்ளது.

