- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜெயிலில் கம்பி எண்ண போகும் பாண்டியன் அண்ட் ஃபேமிலி – அரசி, ராஜீ மீது பாவப்பட்ட இன்ஸ்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
ஜெயிலில் கம்பி எண்ண போகும் பாண்டியன் அண்ட் ஃபேமிலி – அரசி, ராஜீ மீது பாவப்பட்ட இன்ஸ்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதிர்பாராத டுவிஸ்டாக ஒட்டுமொத்தமாக குடும்பமும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ராஜீ மற்றும் அரசி இருவரும் தப்பித்துள்ளனர்.

Pandiyan Stores 2 Serial Latest Promo Analysis
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடைசி 2 நாட்களுக்கான எபிசோடின் புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், உங்கள் யாரையும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்க முடியாது. அதனால், ஜெயிலில் அடைக்க போகிறோம் என்று சொல்லவுமே ஒவ்வொருவருக்கும் பயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கெட்டதுலயும் ஒரு நல்லது என்றால் அது ராஜீ மற்றும் அரசி இருவரும் சிறையில் அடைக்கப்படவில்லை. பாண்டியன்,கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர் என்று ஒவ்வொருவரும் தனித்தனியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Bakkiyam Revenge on Pandiyan Stores 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் விவாகரத்து கேட்டு தங்கமயிலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதைத் தொடர்ந்து தங்கமயிலின் அம்மா பாக்கியம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது மற்றும் அடித்து துன்புறுத்துவது என்று பல பிரிவுகளில் புகார் செய்தார். இதன் காரணமாக பாண்டியனின் குடும்பத்தில் குழலி மற்றும் மீனாவை தவிர மற்ற அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டனர். நீண்ட நேரமாக ஸ்டேஷனில் காக்க வைக்கப்பட்ட நிலையில் பகையை மறந்து முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் பேசினர்.
Inspector Sympathy for Raji and Arasi
ஃபட் எந்த பயனும் இல்லை. இதற்கிடையில் உதவி ஆய்வாளர் தங்கமயிலிடம் சென்று ஸ்டேட்மெண்ட் பெற்றுக் கொண்டு வந்தார். இதையடுத்து பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில், கதிர், ராஜீ மற்றும் அரசி என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர்கள் உண்மையில் எந்த தவறும் செய்யப்படவில்லை என்று இன்ஸ்பெக்டருக்கு தெளிவாக தெரிந்த நிலையிலும் கூட மயிலின் புகாருக்காக பாக்கியத்தை வர வழைத்து அவரிடம் விசாரனை நடத்தினார். அப்போதும் கூட பாக்கியம் வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார். கடைசியாக முத்துவேல் மற்றும் சக்திவேல் ஆகியோரை அழைத்து இன்ஸ்பெக்டர் விசாரனை மேற்கொண்டார்.
Pandiyan Stores 2 Today Episode
அப்போது எனக்கு பாண்டியனை பிடிக்காது தான். அவன் தான் எங்களுடைய எதிரி. இருந்தாலும் வீட்டிற்கு வாழ வந்த பொண்ணை கொடுமைப்படுத்தும் அளவிற்கு அவன் கெட்டவன் கிடையாது. அவன் ரொம்ப நல்லவன் என்று முத்துவேல் பாண்டியனுக்கு சாதகமாக பேசினார். இதே போன்று சக்திவேலும் அவருக்கு சாதகமாக பேசினார். தங்கமயிலிடம் பேச அவருக்கு மீனா போன் போட்டார். ஆனால் பாக்கியம் தான் போனை எடுத்தார். உன் மீது புகார் கொடுக்காமல் இருக்கிறேனே என்று சந்தோஷப்பட்டுக் கொள். இல்லையென்றால் உன் மீதும் புகார் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டினார்.அதன் பிறகு மீனா அமைதியாக இருந்தார். இதில், இனிமேல் தங்கமயில் அக்கா சேர்ந்து வாழ்வதற்கு 5 சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்று மீனா பேசினார்.
Pandiyan Family in Jail Twist
இந்த நிலையில் தான் நாளை மற்றும் நாளை மறுநாள் எபிசோடிற்கான புரோமோ வீடியோ வெளியானது. அதில் ராஜீ மற்றும் அரசி இருவரைத் தவிர மற்ற அனைவம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காரணம், நைட்டில் ஸ்டேஷனில் இருக்க கூடாது. அதன் காரணமாகத்தான் ஒட்டுமொத்தமாக பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனி வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் இருக்கும் பாண்டியன் கதறி அழும் காட்சி இடம் பெற்றுள்ளது.