- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சோழனுக்கு நிலா கொடுக்கும் ட்விஸ்ட்... காயத்ரியுடன் திடீர் சந்திப்பு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
சோழனுக்கு நிலா கொடுக்கும் ட்விஸ்ட்... காயத்ரியுடன் திடீர் சந்திப்பு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
அய்யனார் துணை சீரியலில் நிலாவை ஆபிஸில் பிக் அப் பண்ண சென்ற சோழனை நேராக காயத்ரியிடம் அழைத்து செல்கிறார் நிலா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், சோழன், நிலாவை பிக் அப் பண்ண ஆபிஸுக்கு சென்றிருந்த நிலையில், ஆபிஸில் இருந்து வெளியே வந்த நிலா, சோழனை பார்த்து ஐ லவ் யூ என சொல்கிறார். நிலாவா இப்படி மாறிவிட்டார் என நினைக்கும்போது தான் சோழன் கனவு கண்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது. சோழன் கனவு கண்டு சிரித்துக் கொண்டிருக்க இதை நிலாவின் பாஸ் பார்த்துவிடுகிறார். சோழனை பார்த்து கோபப்பட்ட பாஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறார். இவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்கிற பயம் ஒருபக்க இருக்க, நிலா ஆபிஸில் இருந்து வெளியே வருகிறார்.
சேரனை பார்க்க செல்லும் பல்லவன்
மறுபுறம் கல்லூரி முடிந்து வரும் பல்லவன், நேராக வீட்டுக்கு செல்லாமல், சேரன் வேலை செய்யும் பில்டிங்கிற்கு வருகிறார். அங்கு சேரனிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார் பல்லவன். அந்த நேரத்தில் சந்தா, சாப்பாடு, ஸ்வீட் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வருகிறார். அவரை பார்த்ததும் பல்லவன், சேரனிடம், அண்ணேன் உங்க ஆளு வந்திருக்கு என சொல்கிறார். பின்னர் சேரன் வேலை பார்க்க செல்ல, பல்லவனுடன் சந்தா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது என்னோட அண்ணன் கிட்ட தூய தமிழில் உன்னோட காதலை சொல்லு என சந்தாவிடம் கூறுகிறார் பல்லவன். அதற்கு சந்தாகவும் என்ன சொல்ல என கேட்கிறார்.
சந்தாவுக்கு செம பல்பு
கையில் ஹார்ட் சிம்பளை காட்டி, நீ ஒரு பொறுக்கினு போய் சொல்லு என சொல்கிறார். சந்தாவும் பல்லவன் பேச்சைக் கேட்டு, சேரனிடம் சென்று ஹார்ட் சிம்பளை காட்டி நீ ஒரு பொறுக்கி என சொல்கிறார். அதைக்கேட்டதும் சேரன் உள்பட அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ஷாக் ஆகிறார்கள். பின்னர் தான் இது பல்லவன் செய்த வேலை என தெரியவருகிறது. அதன்பின் சந்தாவுக்கு அதற்கான அர்தத்தை புரிய வைக்கிறார்கள். பின்னர் சந்தா, பல்லவனை அடிக்க துரத்துகிறார். அப்படியே ஜாலியாக இருவரும் ஓடுகிறார்கள்.
காயத்ரியிடம் மன்னிப்பு கேட்ட சோழன்
மறுபக்கம் நிலாவை பிக் அப் பண்ணிக் கொண்டு காரில் செல்லும் சோழன், பல்வேறு கர்ப்பனையில் இருக்க, நிலா சோழனை காயத்ரியின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இங்க எதுக்கு அழைச்சுட்டு வந்தீங்க என சோழன் கேட்க, அதற்கு நிலா, நீங்க காயத்ரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்கிறார். பின்னர் வீட்டுக்குள் சென்றதும் காயத்ரியிடம் மன்னிப்பு கேட்கும் சோழன், நான் நிலாவை இம்பிரஸ் பண்ண வேண்டும், இவங்களுக்கு பொசசிவ் வரவேண்டும் என்பதற்காக தான் உங்ககிட்ட பழகுனேன். மற்றபடி எந்த தப்பான நோக்கத்தோடும் நான் பழகவில்லை என சொல்லி மன்னிப்பு கேட்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

