- Home
- Cinema
- தொலைக்காட்சி
- 75ஆவது பிறந்தநாளுக்காக ஆத்தா போட்ட கண்டிஷன் – வாயடைத்து போன இளையவர் சக்திவேல்!
75ஆவது பிறந்தநாளுக்காக ஆத்தா போட்ட கண்டிஷன் – வாயடைத்து போன இளையவர் சக்திவேல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் காந்திமதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் அதில் தனது மகள் கோமதியும் கலந்து கொள்ள வேண்டும் என்று காந்திமதி கண்டிஷன் போட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் சீரியலின் மூத்த நடிகையான காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்கிறது. இதற்காக மகன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். பேரனான குமரவேல் தான் பிறந்தநாளுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இதில் காந்திமதி இந்த பிறந்தநாள் தான் தனக்கு கடைசி பிறந்தநாளாக இருக்க கூடும் என்ற பயத்தில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனது மகள் கோமதியும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
முத்துவேல், சக்திவேல்
ஆனால், முத்தவர் முத்துவேல் சைலண்டாக இருக்கும் போது இளையவரான சக்திவேல் தான் கொஞ்சம் ஓவராக ஆட்டம் போடுகிறார். காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக நடந்த ஆலோசனையில் சக்திவேல் அதெல்லாம் முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ஆனால், காந்திமதியோ நம்ம குடும்பமும், கோமதி குடும்பமும் இருக்கும் பகையெல்லாம் மறந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்ல சக்திவேலோ சத்தியமா அது நடக்கவே நடக்காது ஆத்தா என்றார்.
காந்திமதி 75ஆவது பிறந்தநாள்
அதற்கு காந்திமதியும் அப்போ என்னுடைய பிறந்தநாளும் நடக்கவே நடக்காது. மூத்தவர் முத்துவேல் ஆத்தா வரட்டு பிடிவாதம் பிடிக்காத என்று சொல்ல மருமகள்களும் அத்தை எங்களுடைய சந்தோஷத்திற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஒத்துக் கொள்ளுங்கள் என்றனர். மகன்கள் சந்தோஷம், மருமகள்கள் சந்தோஷம் என்று இருந்து தான் நான் இம்முட்டு காலம் அமைதியாக இருந்தேன். ஆனால், இனிமேல் என்னால் அப்படி இருக்க முடியாது. அந்த 2 ஓடிகாலி பற்றி பேசாதீங்க. பெற்றவர்களின் வயிற்று எரிச்சலைக் கொட்டிக் கொண்டு ஓடிப்போன அவர்கள் இருவரும் ஓடுகாலிங்க தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
அந்த குடும்பத்தோடு சேர்வதையும், ஒட்டி உறவாடுவதையும் நான் விரும்பமாட்டேன். என்னை விடுங்கள், கோமதியைப் பற்றி சற்றும் சிந்தித்து பார்த்தீர்களா? நாம் எல்லோரும் குலதெய்வ கோயிலுக்கு போறோம், பிறந்தநாளும் கொண்டாடுறோம் என்றால் கோமதியால் வரமுடியாது என்றால் அவளுடைய மனசு என்ன கஷ்டப்படும் என்று யோசனை செய்தீர்களா? கோமதி எவ்ளோ ஒருத்தி கிடையாது. அவள் என்னுடைய மகள். நானாக வந்து எனக்கு பிறந்தநாள் கொண்டாடுங்கள், விருந்து வையுங்கள் என்று சொல்லவில்லை. நீங்களாத்தான் எல்லாவற்றையும் செய்கிறீர்கள்.
காந்திமதியின் கண்டிஷன்
ஊரில் உள்ளவர்களுக்காக எங்களுடைய அம்மாவை இப்படி பார்த்துக் கொள்கிறோம், அப்படி பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி கிடா விருந்து எல்லாம் போடுறீங்க. ஆனால், இதில் எல்லாம் எனக்கு சந்தோஷமா என்று கேட்டால் சத்தியமாக இல்லை. அதற்கு பேரன் குமரவேல் அப்பத்தா, உங்களுக்கு எது சந்தோஷம் என்று சொல்லுங்கள். நாங்கள் அதனை செய்கிறோம் என்று வாக்குறுதி கொடுக்க, காலம் முழுவதும் ரெண்டு குடும்பமும் ஒன்றாக சேர்ந்து இருப்பது தான் எனக்கு சந்தோஷம் என்று சொல்ல சக்திவேல் ஆத்தா என்னுடைய உயிர் இருக்கும் வரையில் அது நடக்கவே நடக்காது என்றார்.
காந்திமதி 75ஆவது பிறந்தநாள்
இதற்கு காந்திமதியும் என்னுடைய 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க வேண்டுமென்றால் என்னுடைய மகள் கோமதியும் பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டும். ரெண்டு குடும்பமும் ஒன்று சேர வேண்டும். அப்படி இல்லை என்றால் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். நான் என்னுடைய ரூமை விட்டு கூட வெளியில் வர மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.