Shanmugam Open Crackers Shop : அண்ணா சீரியலில் அக்டோபர் 15ஆம் தேதியான இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அண்ணா சீரியல்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் அண்ணா. முழுக்க முழுக்க அண்ணன், தங்கை பாச போராட்டத்தை மையபடுத்திய இந்த சீரியலானது ஜீ தமிழில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் நேற்று நடந்த எபிசோடில் அதெப்படி சண்முகம் பட்டாசு கடை போடலாம் என்று திட்டமிட்ட சௌந்தரபாண்டி தனக்கு தெரிந்த நாட்டு வெடிகுண்டு செய்பவரிடம் சென்று 4 நாட்டு வெடி குண்டு பாக்ஸ் வாங்கி வந்து அதனை சண்முகத்தின் பட்டாசு கடையில் வைக்கிறார்.
ஆனால், எதிர்பாராத விதமாக அந்த நாட்டு வெடி குண்டு பாக்ஸை ஆட்டோ டிரைவர் வீட்டிற்கே எடுத்துச் செல்கிறார். வீட்டில் பிள்ளைகள் தல தீபாவளி கொண்டாடும் மோடில் தீபாவளி பலகாரம் செய்து கொண்டிருக்கிறார் வைகுண்டம். அவர் உட்கார்ந்திருப்பது நாட்டு வெடிகுண்டு பாக்ஸ் மீதுதான். அப்போது நெருப்பு படுகிறது. இதில் வீட்டில் இருப்பவர்கள் பதற்றமடையவே எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அதன் பின்னர் அனைவரும் சாப்பிடுகின்றனர்.
ஓஹோ இதுதான் இயக்குனரோட பிளானா: பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை ஆட்டைய போடும் தங்கமயில் அண்ட் கோ?
இதெல்லாம் ஒருபுறம் நடந்தாலும் கடைக்கு நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்ட நிலையில், போலீஸுக்கு இது பற்றி தகவல் கொடுக்கப்படுகிறது. போலீசாரும் சண்முகத்தின் பட்டாசு கடைக்கு வந்து சோதனை செய்கின்றனர். ஆனால், கடையில் நாட்டு வெடி குட்னு இல்லை என்றூ தெரிந்து வந்த வேகத்தில் திரும்பி செல்கின்றனர். இது குறித்து சனியன் தனது முதலாளியிடம் தெரியப்படுத்துகிறார்.
இந்த நிலையில் தான் சௌந்தரபாண்டி வீட்டிற்கு தீபாவளி பலகாரம் கொடுக்க அவர் வைத்த நாட்டு வெடி குண்டு பாக்ஸூடன் வருகின்றனர். இதைப் பார்த்து சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். உண்மையில் சௌந்தரபாண்டி வைத்த நாட்டு வெடி குண்டு பாக்ஸ் வெடித்ததா இல்லை அதில் வேறேதும் பலகாரம் இருக்கிறதா என்பதை பற்றி தெரிந்து கொள்ள இன்று இரவு முழுவதும் காத்திருக்க வேண்டும்.
