Karthigai Deepam Serial, Naveen in Danger Zone : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2

ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்கலில் கார்த்திகை தீபம் 2 சிரீயலும் ஒன்று. முதல் சீசனுடன் இணைந்து இந்த சீரியலானது கிட்டத்தட்ட 1002 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் பணக்கார ரோலில் நடித்த கார்த்திக் இந்த சீரியலில் மாமியார் வீட்டில் டிரைவராக நடித்து வருகிறார். அம்மாவும் இறந்துவிட்டார். 2 அண்ணன்கள் தான் கம்பெனியை நிர்வகித்து வருகிறார்கள். தற்போது சந்தர்ப்ப சூழல் காரணமாக பிரிந்திருந்த பாட்டி மற்றும் மாமியார் குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்த்து வைக்கும் முயற்சியில் கார்த்திக் இறங்கியிருக்கிறார். இதில் அவர் சந்தித்து வரும் பிரச்சனைகள் தான் ஏராளம். இப்போது கூட ஒரு பிரச்சனைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

காணாமல் போகும் ஆதி குணசேகரன்... ஜனனி - சக்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

அது என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கார்த்திக் திருமணம் செய்திருக்கும் ரேவதியின் தங்கை தான் துர்கா. இவர், கார்த்திக்கின் நண்பரான நவீனை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் துர்காவின் அம்மா சாமுண்டீஸ்வரிக்கு உடன்பாடில்லை. இந்த சூழலில் தான் நவீன் மற்றும் துர்கா திருமணத்தை சாமுண்டீஸ்வரி ஏற்றுக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி அவர்களை வீட்டை விட்டு துரத்தவும் செய்துள்ளார். இதன் காரணமாக நவீன் மற்றும் துர்கா இருவரும் இப்போது பரமேஸ்வரி பாட்டி வீட்டில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நவீனுக்கும் சிவனாண்டியும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சாமுண்டீஸ்வரி நவீன் மீது குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து வீட்டிலிருந்த நவீனை உன்னுடைய மாமியார் பஞ்சாயத்து ஆபிஸூக்கு வரச்சொன்னதாக செல்ல அவரை சந்தித்துவிட்டு வீடு திரும்பும் போது சிவனாண்டியும், அவரது ஆட்களும் சேர்ந்து தலையில் அடித்து மயக்கமடையச் செய்து மண்ணுக்கு அடியில் புதைத்துவிட்டனர்.

சுயநினைவிற்கு வந்த நவீன், கார்த்திக் மற்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து தான் ஆபத்தில் இருப்பதாகவும், தன்னை காப்பாற்றும்படியும் கூறியுள்ளார். மேலும், துர்கா பஞ்சாயத்து மற்றும் போலீஸ் ஸ்டேஷன் என்று அடுத்தடுத்து சாமுண்டீஸ்வரி மீது புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சாமுண்டீஸ்வரியை கைது செய்து லாக்கப்பில் அடைத்தனர். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில் நவீனுக்கு வந்த காலில் என்ன பெயர் சொன்னாங்க என்று கேட்டு, அவரது வீட்டிற்கு சென்று கார்த்திக் விசாரிக்கிறார். ஆனால், அங்கு ரவுடியின் மனைவி தான் இருக்கிறார். கார்த்திக் தேடி வந்த ரவுடி இல்லை. அதன் பின்னர் குடி போதையில் மட்டியாகிக் கிடக்கும் ரவுடியிடம் சென்று கார்த்திக் விசாரிக்கிறார். அவரோ போதையில் என்னுடைய போன் எங்க விழுந்தது என்று தெரியாது என்கிறார்.

இச்சம்பவம் குறித்து சந்திரகலாவிற்கு தெரியவர அவரோ உன்னுடைய போன் சிம் கார்டை முதலில் பிளாக் செய்து வை என்கிறார். அதுமட்டுமின்றி துர்காவிற்கு உன்னுடைய கணவர் இறந்துவிட்டதாக சொல்ல சொல்கிறார். இதில் அதிர்ச்சி அடைந்த துர்கா உடனடியாக தனது அம்மாவின் வீட்டிற்கு சென்று எல்லோரது முன்னிலையில் பூச்சி மருந்து குடித்து விட்டு அங்கேயே மயங்கி விழுகிறார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது பற்றி இன்று ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் பார்க்கலாம்.

8 மாதத்தில் அறிமுகம்; பெயர் மாற்றி கலக்கும் டாப் ஹீரோயின் யார் தெரியுமா?