- Home
- Cinema
- தொலைக்காட்சி
- காணாமல் போகும் ஆதி குணசேகரன்... ஜனனி - சக்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
காணாமல் போகும் ஆதி குணசேகரன்... ஜனனி - சக்திக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் வீட்டில் உள்ள பெண்களிடம் கதிர் மற்றும் ஞானம் சண்டை போட்டு வந்த நிலையில், ஆதி குணசேகரன் காணாமல் போன விஷயம் அவர்களுக்கு தெரியவருகிறது.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும், சக்தியும் ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை கெவினின் நண்பன் அஸ்வினிடம் இருந்து மீட்க போராடி வருகின்றனர். நேற்றைய எபிசோடில் அஸ்வினை நேரில் சந்தித்து மிரட்டிய சக்தி, அந்த வீடியோவை தங்களிடம் கொடுக்காவிட்டால் உன்னுடைய உயிருக்கே ஆபத்து வரும் என சொல்ல, அதனால் பதறிப்போன அஸ்வின், நாளை வீடியோவை எடுத்துக் கொண்டு வருவதாக கூறி கிளம்பிச் சென்றார். வீடியோ எப்படியும் நம் கையில் சிக்கிவிடும் என்கிற தைரியத்தில் ஜனனியும், சக்தியும் செல்கிறார்கள். இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கதிருக்கு பதிலடி கொடுக்கும் தர்ஷன்
வீட்டிற்கு வரும் சக்தி மற்றும் ஜனனி மீது கதிருக்கு டவுட் வருகிறது. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ ஒரு வேலையை பார்க்கிறார்கள் என்று சந்தேகப்படுகிறார். பின்னர் மாடியில் உள்ள ரேணுகா, தர்ஷன், பார்கவி, ஜனனி ஆகியோரிடம் பேச வரும் ஞானம், இனிமே ஆடுறதுக்கு என்ன இருக்கு என சக்தியிடம் கேட்க, அவர் இனிமே தான் மொத்த ஆட்டமும் ஆரம்பம், கூட்டத்தோட உள்ள போகப்போறீங்க பாருங்க என சவால்விடுகிறார். அப்போது அங்கு இருக்கும் தர்ஷனை பார்த்து, உன்னெல்லாம் நசுக்கி போட்டு போயிட்டே இருப்பேன் என கதிர் மிரட்ட, உன்னால ஒரு மண்ணும் பண்ண முடியாது என பதிலடி கொடுக்கிறார் தர்ஷன்.
ஜனனி - சக்திக்கு ஏமாற்றம்
அப்போது அங்கு வரும் கரிகாலன், ஆதி குணசேகரன் காணாமல் போன விஷயத்தை சொல்கிறார். இதனால் கதிர், ஞானம் ஆகியோர் அண்ணன் எங்க போயிருப்பார் என பதறிப்போய் அவரை தேடுகிறார்கள். மறுபுறம் அஸ்வினிடம் வீடியோ ஆதாரத்தை வாங்க ஜனனியும், சக்தியும் செல்கிறார்கள். அவர்கள் ஒரு மணிநேரமாக காத்திருந்தும் அஸ்வின் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடையும் ஜனனி, அவன் வருவானா இல்லை எங்காவது எஸ்கேப் ஆகியிருப்பானா என சக்தியிடம் கேட்க, அவரோ நிச்சயம் வருவான் என சொல்கிறார்.
ஆதி குணசேகரனின் அடுத்த மூவ் என்ன?
அஸ்வின் நீண்ட நேரம் ஆகியும் வராததால், காணாமல் போன ஆதி குணசேகரன் தான் அந்த அஸ்வினை கிட்னாப் பண்ணி இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஒருவேளை அஸ்வினை கடத்தாவிட்டால், அவர் அந்த லெட்டர் விவகாரத்தில் தொடர்புடைய பெண்ணை சந்திக்க இராமேஸ்வரம் சென்றிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் இல்லை என்றால், கைதுக்கு பயந்து அவர் தலைமறைவாகி இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் ஆதி குணசேகரனின் அடுத்த மூவ் என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.