- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கல்யாணமாகி ஒரு நாளிலேயே சண்டையா? தர்ஷன் - பார்கவியால் டென்ஷன் ஆன ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
கல்யாணமாகி ஒரு நாளிலேயே சண்டையா? தர்ஷன் - பார்கவியால் டென்ஷன் ஆன ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனும், பார்கவியும் திருமணம் முடிந்த கையோடு சண்டைபோட்டுள்ளனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கு சக்சஸ்புல்லாக திருமணத்தை நடத்தி முடித்த ஜனனி, அடுத்ததாக ஆதி குணசேகரனுக்கு எதிரான ஆதாரத்தை திரட்டும் வேலையில் இறங்கி இருக்கிறார். அந்த வகையில் அறிவுக்கரசி கொலை செய்த கெவினின் நண்பனான அஸ்வினுக்கு போன் போட்டு பேசிய சக்தி, உன்னிடம் உள்ள குணசேகரனின் வீடியோவை கொடுக்க சொல்லி மிரட்டுகிறார். இல்லையென்றால் உன் வீட்டுக்கு வருவேன் என சொல்ல, அஸ்வின் வேறு வழியின்றி தன்னிடம் உள்ள ஆதாரத்தை கொடுப்பதாக சொல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
அஸ்வினை சந்திக்கும் ஜனனி
இதையடுத்து அஸ்வினை சந்திக்க செல்லும் சக்தி மற்றும் ஜனனி, அவனிடம் நீ உன்கிட்ட இருக்க வீடியோவை கொடு, உனக்கு பிரச்சனை வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என சொல்ல, அவனும் ஆதாரத்தை கொடுக்க சம்மதிக்கிறான். பின்னர் அவனிடம் பேசிவிட்டு சக்தியும், ஜனனியும் வீட்டிற்கு திரும்புகிறார்கள். அப்போது வாசலில் அமர்ந்திருக்கும் ஞானம் மற்றும் கதிருக்கு டவுட் வருகிறது. ஒருவேளை அந்த போன் விஷயமாக தான் இவர்கள் இருவரும் சென்றிருப்பார்களோ என சந்தேகப்படுகிறார். இவர் ஏதோ ஒரு தில்லுமுல்லு பண்ணுறான் என்னனு தான் தெரியல என சொல்கிறார் கதிர்.
தர்ஷன் - பார்கவி சண்டை
மறுபுறம் கல்யாணம் முடிந்த மறுதினமே தர்ஷனுக்கும், பார்கவிக்கும் இடையே சண்டை வருகிறது. இதனால் பார்கவியை திட்டிவிட்டு கோபத்துடன் ரூமுக்கு செல்கிறார் தர்ஷன். அவனை பிடித்து செம டோஸ் கொடுக்கும் ஜனனி, இதுவரைக்கும் உன்னுடைய குணத்தினால் அதிகமா பாதிக்கப்பட்டது உன்னுடைய அம்மா, ஆனால் இனிமேல் பார்கவி தான் அதிகமா பாதிக்கப்படப் போகிறாள் என்று சொல்ல, பார்கவி உடன் சண்டை போட்டதற்காக ஃபீல் பண்ணுகிறார் தர்ஷன். இவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சது நீங்க சண்டை போடுவதற்காகவா என நந்தினியும் திட்டுகிறார்.
சக்தியின் புது பிளான்
சக்தி தன்னிடம் உள்ள லெட்டர் விவாகரத்தை ஜனனியிடம் சொன்னதோடு, அதன்பின்னணியில் மிகப்பெரிய மர்மம் இருப்பதாகவும் கூறி இருந்தார். மேலும் இதுதொடர்பாக இராமேஸ்வரம் சென்று விசாரிக்க உள்ளதாகவும் கூறி இருக்கிறார். இதனால் ஆதி குணசேகரனின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு வாரத்திற்கு ஆதாரத்தை கொடுப்பதாக சொன்ன ஜனனி, அதற்குள் அஸ்வினிடம் இருந்து அந்த வீடியோவை வாங்குவாரா? இல்லை அதிலும் ஏதேனும் ட்விஸ்ட் காத்திருக்கிறதா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.