- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஆதி குணசேகரனுக்கு நான் ஸ்டாப் ஆக விழும் அடி... லெட்டரால் வந்த புது ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
ஆதி குணசேகரனுக்கு நான் ஸ்டாப் ஆக விழும் அடி... லெட்டரால் வந்த புது ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தி தன்னிடம் இருக்கும் லெட்டர் விவகாரம் பற்றி சொன்னதால் ஆடிப்போய் உள்ளார் ஆதி குணசேகரன். அடுத்த என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வந்த வண்ணம் உள்ளது. பெரும் போராட்டத்துக்கு பின்னர் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து ஜனனி தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை காட்டி மிரட்டி ஆதி குணசேகரனை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மேலும் அவர் தன் சம்பந்தப்பட்ட பொருட்களையெல்லாம் கேட்டதற்கு, இன்னும் ஒரு வாரத்தில் கொடுத்துவிடுகிறேன் என சொல்லி இருக்கிறார் ஜனனி. அதனால் ஒரு வாரம் பொட்டியில் அடங்கிய பாம்பு போல் பம்மியே இருக்கிறார் ஆதி குணசேகரன். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கலாட்டா பண்ணும் கதிர்
தர்ஷனுக்கும், பார்கவிக்கும் தனி ரூம் கொடுக்க ஆதி குணசேகரன் சம்மதித்ததால் கதிர், ஞானம் ஆகியோர் வெளியே தூங்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் ரூமுக்குள் சென்ற தர்ஷனும், பார்கவியும் மனம் விட்டு பேசுகிறார்கள். தனக்கு செட் ஆக டைம் வேண்டும் என பார்கவி கேட்டதால், தற்போதைக்கு பர்ஸ்ட் நைட் வேண்டாம் என இருவரும் முடிவெடுக்கிறார்கள். இதன்பின்னர் இருவரும் படுத்து தூங்குகிறார்கள். தங்களை வெளியே படுக்க வைத்துவிட்டார்கள் என்கிற கடுப்பில் இருக்கும் கதிர், காலையில், தர்ஷனின் ரூம் கதவை தட்டி கலாட்டா பண்ணுகிறார். சத்தம் கேட்டு அங்கு வரும் நந்தினி, உனக்கு அறிவில்லையா என திட்டுகிறார்.
ஆதாரத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த சக்தி
பின்னர் சிறிது நேரம் கழித்து கீழே வரும் சக்தியிடம் நீ என்ன இப்போ பெருசா கண்டுபிடிச்சனு அலப்பறை பண்ணிகிட்டு திரியுற என ஞானம் கேட்கிறார். அதற்கு சக்தி, அவர்கிட்ட போய் கேளு நான் என்னத்த கண்டுபிடிச்சேன், ஏன் அதைப்பத்தி இதுவரை என்கிட்ட அவர் கேட்கல என சொல்கிறார். மறுபுறம் அந்த லெட்டர் விவகாரம் லீக் ஆன விஷயம் அறிந்த ஆதி குணசேகரன், இத்தனை நாள் மூடி வைத்த ரகசியம் எல்லாம் போச்சே என இடிந்து போய் இருக்கிறார். கதிரும், ஞானமும் சக்தி எதைக் கண்டுபிடித்தான் என்பது தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்.
வீடியோவை மீட்க ஜனனி போட்ட பிளான்
ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கியதற்கான வீடியோ ஆதாரத்தை பெற, சக்தியுடன் சேர்ந்து கேமராமேன் கெவினின் பிரெண்டுக்கு போன் போட்டு பேசுகிறார் ஜனனி. அந்த வீடியோவை கொடுக்காவிட்டால் உன் வீட்டுக்கே வந்துருவேன் என மிரட்டுகிறார் சக்தி. இதனால் பதறிப்போகும் கெவினின் நண்பன், அதெல்லாம் வேண்டாம் என சொல்ல, அப்போ நான் அனுப்பும் லொகேஷனுக்கு கிளம்பி வா என கூறுகிறார் சக்தி. இதையடுத்து என்ன ஆனது? சக்தி அந்த வீடியோ ஆதாரத்தை மீட்டாரா? லெட்டர் விவகாரத்தால் நடக்கப்போகும் ட்விஸ்ட் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.