- Home
- Cinema
- தொலைக்காட்சி
- 'எதிர்நீச்சல்' சீரியல் ஹீரோயின் பார்வதிக்கு அடித்த ஜாக்பாட்! குவியும் வாழ்த்து!
'எதிர்நீச்சல்' சீரியல் ஹீரோயின் பார்வதிக்கு அடித்த ஜாக்பாட்! குவியும் வாழ்த்து!
'எதிர்நீச்சல்' சீரியல் மூலம், ரசிகர்களை கவர்ந்த பார்வதி வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ள தகவல் உறுதியாகி உள்ளது. இது இவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

TRP-யில் கெத்து காட்டும் எதிர்நீச்சல் தொடர்கிறது:
சின்னத்திரையில் ஒவ்வொரு நாளும், இல்லத்தரசிகள் மற்றும் இளசுகளை கவரும் விதத்தில், ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், அதில் ஒரு சில தொடர்களுக்கே மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில்... ஒவ்வொரு வாரமும் TRP-யில் டாப் 3 இடங்களை கைப்பற்றி வரும் தொடர் தான் 'எதிர்நீச்சல் தொடர்கிறது'.
புதிய ஜனனியாக மாறிய பார்வதி:
இந்த தொடரின் முதல் பாகம் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், இரண்டாவது பாகம் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடித்த பிரபலங்கள் இந்த சீசனிலும் நடிக்க, ஒரு சிலர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக முதல் சீசனில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்த நிலையில், இரண்டாவது பாகத்திலிருந்து அவர் விலகியதால்... பார்வதி தற்போது ஜனனியாக நடித்து வருகிறார்.
தலைதூக்க உள்ள அடுத்த பிரச்சனை:
இந்த சீரியலின் கதைக்களம், கடந்த 1 மாதமாக அனல் பறக்கும் சுவாரஸ்யத்துடன் சென்றுகொண்டிருக்கிறது. குணசேகரன் எப்படியும் அன்புக்கரசி மற்றும் தர்ஷன் திருமணத்தை நடத்த வேண்டும் என்கிற ஆணவத்தோடு இருந்த நிலையில், பெண்கள் அணி குணசேகரன் ஆசைக்கு ஆப்பு வைக்கும் விதமாக, பல பிரச்சனைகளை கடந்து தர்ஷனுக்கும் - பார்கவிக்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
திருமண பிரச்சனை
திருமண பிரச்சனை முடிவுக்கு வந்தாலும், குணசேகரனுக்கும் அவர் குடும்பத்துக்கும் பெண் ஒருவரால் வர போகும் ஆபத்து குறித்த கடிதம் சக்தியிடம் சிக்கியது. அதற்கான லீடை ஏற்கனவே இயக்குனர் கொடுத்து விட்ட நிலையில், இதற்கான எதிர்பார்ப்பும் தாறுமாறாக எகிறி போய் உள்ளது.
ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் சூப்பர் ஹிட் தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
போலீஸ் போலீஸ் வெப் தொடர்:
இந்த நிலையில் தான் எதிர்நீச்சல் சீரியல் தொடரின் கதாநாயகி பார்வதி நடித்திருக்கும் வெப் தொடர் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதாவது தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் வெப் தொடர் தான் 'போலீஸ் போலீஸ்'. இந்த வெப் தொடரில் மிர்ச்சி செந்தில், ஜெயசீலன், சுஜிதா, ஷபானா, சத்யா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த வெப் சீரிஸில் முரட்டு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மிர்ச்சி செந்திலின் மனைவியாக பார்வதி நடித்து வருகிறார்.
பார்வதிக்கு அடித்த ஜாக்பார்ட் வாய்ப்பு:
இதுவரை சீரியல் நடிகையாக இருந்த பார்வதியை, இந்த வெப் தொடர் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது அவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பு என, ரசிகர்கள் பார்வதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 'எதிர்நீச்சல் தொடர்கிறது' தொடர் போலவே இந்த வெப் சீரிஸும், இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆண்டனி வர்கீஸ் அதிரடி லுக்கில் மிரட்டும் 'காட்டாளன்' ஃபர்ஸ்ட் லுக்!