Zee Tamil Getti Melam Serial to End: " 'ஜீ தமிழ் தொலைக்காட்சியில், இந்த ஆண்டு துவங்கப்பட்ட சூப்பர் ஹிட் தொடரான 'கெட்டி மேளம்' ... இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சிகள்:

தமிழில் சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சிகள் என்றால் அது சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தான். இந்த மூன்று தொலைக்காட்சி தொடர்களில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள், TRP-யிலும் போட்டி போட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்தது தான்.

கெட்டி மேளம் முடிவுக்கு வருகிறதா?

அதே நேரம் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் பெரும்பாலும்... 2 மற்றும் 3 வருடங்கள் வரை ஒளிபரப்பாகி வந்தாலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில தொடர்கள்... ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்துவிடுகின்ற. அந்த வகையில் தற்போது... ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடரான, 'கெட்டி மேளம்' சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சினிமாவில் விஜய் இடத்தை நிரப்பப்போவது யார்? பிரதீப் ரங்கநாதன் சொன்ன ஸ்மார்ட் பதில்

கெட்டி மேளம் தொடர் நடிகர்கள்:

'கெட்டி மேளம்' சீரியல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதில் ஹீரோவாக சிபு சூரியன் மற்றும் விராட் நடிக்க, ஹீரோயின்களாக சாயா சிங் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். விராட் இந்த சீரியலில் வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் பொன்வண்ணன், ப்ரவீனா போன்ற ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த தொடர் ஜீ கன்னடத்தில் ஒளிபரப்பான 'லட்சுமி நிவாஸா' என்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது.

இளம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு:

இதுவரை கெட்டி மேளம் சீரியல் 110 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி உள்ளது. இதுவரை வெளியான தொடர்களை விட, வித்தியாசமான கதைக்கத்தில் ஒளிபரப்பாகி வருவதால், இந்த சீரியலுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பசிக்குது, சமைக்கவும் எதுவுமில்ல, பாலுக்கும் வழியில்ல; தனியாக ஃபீல் பண்ணும் மீனா, அய்யோ பாவம்!

ரசிகர்கள் அதிர்ச்சி:

மிடிஸ் கிளாஸ் குடும்பத்தின் கதையாக ரசிகர்களை கவர்ந்து வரும் 'கெட்டி மேளம்' சீரியல் இன்னும் 2, 3 மாதங்களில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுவது, இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.