- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஆதி குணசேகரனின் கொட்டத்தை அடக்க மாஸ் எண்ட்ரி கொடுக்கும் மெயின் வில்லன்... ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியல்
ஆதி குணசேகரனின் கொட்டத்தை அடக்க மாஸ் எண்ட்ரி கொடுக்கும் மெயின் வில்லன்... ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தன்னைமிஞ்ச ஆளே இல்லை என டெரர் வில்லனாக ஆட்டம் போட்டு வரும் ஆதி குணசேகரனுக்கு ஆப்பு வைக்க மெயின் வில்லன் எண்ட்ரி கொடுக்கப் போகிறார்.

Ethirneechal Thodargiradhu Serial New Villain
சினிமாவுக்கு நிகராக விறுவிறுப்பான கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியல் வாரத்தின் 7 நாட்களில் சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர் கோலங்கள் என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் சீரியலை இயக்கி இருக்கிறார். எதிர்நீச்சல் தொடரின் முதல் சீசன் 2022 முதல் 2024 வரை நடந்த நிலையில், அதன் இரண்டாவது சீசன் எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு தற்போது 280 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவியின் திருமணம் பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த ட்விஸ்டாக ஆதி குணசேகரன் பற்றிய ரகசியங்கள் வெளிவர இருக்கின்றன. கடந்த வாரம் ஆதி குணசேகரனின் ரூமில் ஏதாவது ஆதாரம் சிக்குமா என தேடிப் பார்த்த சக்திக்கு ஒரு லெட்டர் கிடைத்தது. 30 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்த லெட்டரை படித்ததும் சக்தி பதறிப்போனார். அப்படி அந்த லெட்டரில் என்ன தான் இருந்தது என்பதை சீக்ரெட்டாக வைத்திருந்த இயக்குனர், நேற்று ஆதி குணசேகரன் அந்த லெட்டர் தொலைந்து போன விஷயத்தை அறிந்தபோது ஒரு பின்னணி குரல் மூலம் அந்த லெட்டரில் இருந்தவற்றை போட்டுடைத்தார்.
அந்த லெட்டரில் என்ன இருந்தது?
ஒரு பெண் தான் குணசேகரனுக்கு அந்த லெட்டரை எழுதி இருக்கிறார். அதில் அவர், இந்த லெட்டரை நான் எழுதும்போது மணி ராத்திரி 2.30, அக்டோபர் மாதம் 18ந் தேதி, வருடம் 1990. இப்போ இங்கே ராமேஸ்வரத்தில் கடல் அலைகள் ஆர்ப்பரித்து அழிச்சுட்டு இருக்கு. என் மனசும் அதேபோல் தான் உள்ளது. இந்த லெட்டர் உனக்கு கிடைக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். பாக்கி மிச்சம் எதுவும் இல்லைனு சந்தோஷப்படாத. அப்படியே மிச்சம் இருந்தாலும் பேப்பர் மட்டும்தானே... அது காலப்போக்கில் அழிஞ்சு போயிடும்னு நினைக்காத. நீ விட்டுட்டு போனது வெறும் பேப்பர் இல்ல, ஒரு விதை. அந்த விதை நாளைக்கு ருக்ஷமா வந்து, அதோடு கிளைகள் உன்னோட கழுத்தை நெரிக்கும்.
உன்னை மட்டுமல்ல, உன்னுடைய தாய், உன் தம்பிகள், உன் தங்கச்சி, பிள்ளைங்க, பேரன், பேத்திங்கனு உன்னுடைய வம்சத்தையே அழிச்சு, உன்னை நிர்மூலம் ஆக்கிடும். இப்போ எல்லாம் அழிஞ்சிடுச்சுனு நினைச்சுட்டு இருக்க, ஒரு காலம் வரும், அப்போ நீ... அய்யய்யோ விட்டுட்டோமே, ஏமாந்துட்டோமேனு நினைப்ப. அன்னைக்கு உனக்கு தெரியும், நீ பண்ணிய பாவம், உன்னை துரத்தி வரும்” என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
புது வில்லன் யார்?
ஆதி குணசேகரன் ஏமாற்றிய அந்த பெண், உன்னை அழிக்க ஒரு விதை இருப்பதாக சொல்லி ஹிண்ட் கொடுத்திருக்கிறார். அநேகமாக அது ஆதி குணசேகரனின் காதலியாகவோ அல்லது முதல் மனைவியாகவோ இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் சொன்ன அந்த விதை தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மெயின் வில்லனாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். அவர் வேறு யாருமில்லை கோலங்கள் சீரியலில் ஆதியாக மிரட்டிய அஜய் கபூர் தான். அவர் விரைவில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மெயின் வில்லனாக எண்ட்ரி கொடுக்க உள்ளதால் இனி சீரியல் மேலும் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதி.