- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தேவசகாயத்தோடு கூட்டு சேரும் ஆதி குணசேகரன்... பேராபத்தில் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
தேவசகாயத்தோடு கூட்டு சேரும் ஆதி குணசேகரன்... பேராபத்தில் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை வீட்டுச்சிறையில் வைத்திருக்கும் தேவசகாயம், ஆதி குணசேகரனுக்கு போன் போட்டு பேசி உள்ளார். அதன் பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனின் கூட்டாளி பினாமி குமார் அனுப்பிய அடியாட்களிடம் இருந்து தப்பித்து சென்ற ஜனனி, தேவசகாயத்தில் காரில் அடிபட்ட நிலையில், அவரை தன்னுடைய மர்ம பங்களாவில் அடைத்து வைத்திருக்கிறார் தேவசகாயம். ஆரம்பத்தில் தன்னை நல்லவர் போல காட்டிக்கொண்ட அவர், போகப் போக டெரர் வில்லனாக மாறி இருக்கிறார். ஜனனியை வெளியே விடாமல் ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கும் தேவசகாயம், ஒருவருக்கு போன் போட்டு ஆதி குணசேகரனின் நம்பர் வேண்டும் என கேட்டிருக்கிறார். இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
தேவசகாயத்திடம் சிக்கும் ஜனனி
ஜனனி ரூமை விட்டே வெளியே வரவிடாமல் செய்ய அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து இருக்கிறார் தேவசகாயம். அந்த மாத்திரையை வேலைக்கார பெண் கொடுக்கையில், அதை வாயில் போட்டதை போல் நடித்த ஜனனி, சிறிது நேரத்தில் அதை துப்பி விடுகிறார். பின்னர் வெளியே சென்று என்ன நடக்கிறது என்பதை நோட்டமிட்ட ஜனனி, வீட்டின் பின்னால் இருக்கும் மர்ம அறைக்கு செல்கிறார். அங்கு உள்ள ஜன்னலை திறந்து பார்க்கும் போது உள்ளே ஒரு பெண் படுத்திருப்பதை பார்க்கிறார் ஜனனி. அந்த பெண்ணை எழுப்ப ஜனனி முயற்சிக்கிறார். அந்த நேரம் பார்த்து தேவசகாயம் அங்கு வந்து விடுகிறார்.
குணசேகரனுக்கு தெரியவரும் உண்மை
இதையடுத்து ஜனனியை அடித்து துன்புறுத்தும் அவர் ஒரு ரூமில் போட்டு அடைத்துவிடுகிறார். புலியிடம் இருந்து தப்பித்து சிங்கத்திடம் மாட்டிய கதையாக ஜனனியின் நிலைமை மாறிவிட்டது. அதுமட்டுமின்றி ஜனனி செத்துவிட்டால் என்கிற மிதப்பில் இருந்த ஆதி குணசேகரனுக்கு போன் போட்டு அவர் சாகவில்லை தன்னுடைய கஸ்டடியில் தான் இருக்கிறார் என்கிற உண்மையையும் சொல்லிவிடுகிறார் தேவசகாயம். இதனால் கடும் அதிருப்தி அடைந்த குணசேகரன், தன்னுடைய தம்பிகளிடம், அந்த பினாமி குமார் நம்மளையெல்லாம் ஏமாத்திட்டான் டா என கோபத்தில் கொக்கரிக்கிறார்.
வக்கீல் சாருபாலா கொடுத்த ஹிண்ட்
மறுபுறம் ஜனனியை தேடிக் கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்வதற்காக வக்கீல் சாருபாலாவை சந்திக்க சக்தியும், தர்ஷினியும் சென்றிருக்கிறார்கள். அவரிடம் நடந்ததை எல்லாம் எடுத்துக் கூறுகிறார். அதற்கு அவர், இந்த விஷயத்தில் குணசேகரனிடம் கேட்டால் ஏதாவது ஒரு ரூட் கிடைக்கும். அவரிடம் பேசிப்பாருங்கள் என சொல்கிறார் சாரு பாலா. ஆட்கொணர்வு மனு போடப்பட்டு உள்ளதால், ஜனனியை போலீஸும் தேடிக் கண்டுபிடிக்க களத்தில் இறங்கும். இதனால் தேவசகாயமும் போலீசிடம் சிக்க வாய்ப்பு இருக்கிறது.
அரங்கேறப்போகும் ட்விஸ்ட் என்ன?
அந்த தேவசகாயம் வில்லன் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அவர் செய்யும் ஃபிராடு வேலை என்ன என்பது தான் இன்னும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது. அவரின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கையில், உடல் உறுப்புகளை திருடி விற்பவர் போல தெரிகிறது. அதற்காக தான் பெண்களை தனி அறையில் அடைத்து வைத்து டார்ச்சர் செய்து வருகிறார். தற்போது ஜனனியும் தேவசகாயத்திடம் மாட்டிக் கொண்டிருக்கிறார். அவர் இந்த சூழலில் இருந்து மீண்டு வருவாரா? ஜனனியை காப்பற்றப்போவது யார்? தேவசகாயத்தின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண் யார்? ஆதி குணசேகரனுடன் சேர்ந்து தேவசகாயம் போடும் திட்டம் என்ன? என்கிற அடுக்கடுக்கான ட்விஸ்டுகளுக்கு இனி வரும் எபிசோடில் தான் விடை கிடைக்கும்.

