- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தேவசகாயம் கிட்னி திருடனா? ஜனனிக்கு வந்த டவுட்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தடம் மாறும் கதைக்களம்
தேவசகாயம் கிட்னி திருடனா? ஜனனிக்கு வந்த டவுட்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தடம் மாறும் கதைக்களம்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தன்னைக் காப்பாற்றிய தேவசகாயம் யார் என்பதை தெரிந்துகொள்ள ஜனனி முனைப்பு காட்டி வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை காப்பாற்றியுள்ள ஓலிவர் தேவசகாயம், நல்லவரா இல்லை கெட்டவரா என்பது தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார் ஜனனி. நேற்றையை எபிசோடில் கார்டனில் ஜனனியை அழைத்து பேசிய ஒரு நபர், நீங்க இவருக்கு சொந்தமா என கேட்க, ஜனனி இல்லை என சொன்னதும், அப்புறம் ஏன் இங்க இருக்கீங்க தப்பிச்சு ஓடீருங்க என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் இரவில் ஜனனியின் ரூமுக்கு வந்து அவரது இரத்தம் எடுத்துச் சென்றிருக்கிறார் தேவசகாயம். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஜனனிக்கு வந்த சந்தேகம்
ஜனனி, தேவசகாயம் வீட்டின் பின் புறம் உள்ள ஒரு அறையில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதை உணர்ந்து அங்கு சென்று அந்த அறையை திறக்க முயல்கிறார். அப்போது அவர் கதவை திறக்க முயல்வதை பார்க்கும் அந்த வீட்டு வேலைக்கார பெண், என்னம்மா பண்ணுற, அங்கெல்லாம் போகக்கூடாது. சொன்னா கேக்க மாட்டீங்களா என திட்டும் அந்தப் பெண், அங்கு வேலை பார்க்கும் முத்தப்பாவை அழைக்கிறார். அவரோ அரிவாள் உடன் ஓடி வருகிறார். பின்னர் அவரிடம் சார் எங்க என விசாரிக்கிறார். அதற்கு அவர் சார் இப்போ வெளிய போயிருக்காரு. கொஞ்ச நேரத்துல வந்திருவாரு என சொல்கிறார்.
எச்சரிக்கும் தேவசகாயம்
பின்னர் அந்தப் பெண், வா மா என ஜனனியின் கையை பிடித்து வேகமாக இழுத்துச் செல்கிறார். அப்போது தேவசகாயம் வீட்டுக்கு வந்திறங்குகிறார். ஜனனியை அந்த பணிப்பெண் இழுத்து வந்ததைப் பார்த்து என்ன பிரச்சனை என கேட்கிறார் தேவசகாயம். அதற்கு அந்தப் பெண், சார் இவங்க சொல்ல சொல்ல கேட்காம பின்னாடி பக்கமே போய் பாக்குறாங்க என புகார் கூறுகிறார். வெளில வரவேண்டாம்னு நான் சொன்னேன்ல, அதைமீறி ஏதாவது பண்ணுனா உனக்கு தான் பிரச்சனை அதிகமாகும் என கூறுகிறார் தேவசகாயம்.
தேவசகாயம் நல்லவரா? கெட்டவரா?
சார், எனக்கு குழப்பமாக இருக்கிறது என சொல்லும் ஜனனி, நான் சரியாகிவிட்டேன்னு நினைக்குறேன். நான் இப்போ இங்க இருந்து போறேன் சார், நீங்க செஞ்ச உதவிக்கெல்லாம் ரொம்ப நன்றி என சொல்கிறார். உண்மையாவா சொல்றீங்க என கேட்கும் தேவசகாயம், இங்க நான் தான டாக்டர், நீ சரியாகிட்டியா... இல்லையாங்குறத நான் தான் முடிவு பண்ணுவேன். உள்ள போமா என மிரட்டும் தொனியில் சொல்கிறார். இதனால் வேறுவழியின்றி உள்ளே செல்கிறார் ஜனனி. தேவசகாயம் நல்லவன் போல் தன்னைக் காட்டிக் கொண்டாலும் அவரின் செயல்களெல்லாம் பார்க்கும் போது அவர் கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளை திருடி விற்கும் கும்பலைச் சேர்ந்தவராக இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளது. ஜனனியை தற்போது வெளியே விடாமல் பிடித்து வைத்திருப்பதும் அதற்காக தான் இருக்கும் என யூகிக்க முடிகிறது,.
சக்தியிடம் சிக்கும் வேலு
மறுபுறம் அமுதாவின் கணவர் வேலுவை தேடி அலையும் சக்தி, ஒருவழியாக அவரை கண்டுபிடிக்கிறார். சக்தியை பார்த்ததும் வேலு பதறி ஓடுகிறார். வேலுவிடம் அமுதாவை மிரட்டி வீடியோ எடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறது. அந்த ஆதாரத்தை அவரிடம் இருந்து சக்தி மீட்டாரா? வேலுவை தூண்டிவிட்டு அமுதாவை சாட்டி சொல்ல வைத்தது குணசேகரன் கும்பலா? ஜனனியை சிறைபிடித்து வைத்திருக்கும் தேவசகாயம் என்ன செய்யப்போகிறார்? தேவசகாயத்தின் கோட்டையில் இருந்து ஜனனியை காப்பாற்றப்போவது யார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

