MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மவனே டைவர்ஸா கேக்குற... கதிரை பழிவாங்க நந்தினி போட்ட பலே பிளான் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

மவனே டைவர்ஸா கேக்குற... கதிரை பழிவாங்க நந்தினி போட்ட பலே பிளான் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் டைவர்ஸ் கேட்டு பேப்பரை நீட்டிய கதிருக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக நந்தினி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 03 2026, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதிர் மற்றும் ஞானம் இருவரும் தங்களுக்கு டைவர்ஸ் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்புமாறு, நந்தினி மற்றும் ரோகிணியிடம் சொல்ல, அவர்கள் நாங்கள் உறவினர்கள் முன்னிலையில் தான் திருமணம் செய்துகொண்டோம், அதனால் உறவினர்கள் முன்னிலையில் தான் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுவோம் என்று சொல்ல, மறுதினமே உறவுக்காரர்களை எல்லாம் போன் போட்டு வர வைக்கிறார்கள். அவர்களும் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பதை தெரிந்துகொள்ள முனைப்பு காட்டுகிறார்கள். இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
கதிரை லாக் பண்ணிய நந்தினி
Image Credit : youtube/suntv

கதிரை லாக் பண்ணிய நந்தினி

கதிர், நந்தினியிடம் டைவர்ஸ் பேப்பரை கொடுத்து படிக்க சொல்கிறார். அதில், இருவருக்கும் இடையே ஒத்துப் போகாததால் விவாகரத்து பெற்று பிரிகிறோம். அதுமட்டுமின்றி நஷ்ட ஈடு எதுவும் கேட்க மாட்டோம். குழந்தைகளை அவர்கள் வளர்க்க விரும்பினால், அவர்களுக்கான செலவுகளுக்கு மட்டும் பணம் தருகிறோம் என எழுதி இருக்கிறார்கள். மறுபுறம் ரேணுகாவுக்கும் இதே தான் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் சம்மதம் தெரிவிக்காத நந்தினி மற்றும் ரேணுகா, தாங்கள் இந்த விவகாரத்தை நீதிமன்றம் வாயிலாக பார்த்துக் கொள்கிறோம் என கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.

Related Articles

Related image1
அரைச்ச மாவையே அரைக்குறாங்க... ரொம்ப போர்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Related image2
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நேரம் மாற்றம்... சன் டிவியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
35
பாயிண்டாக பேசிய நந்தினி
Image Credit : youtube/suntv

பாயிண்டாக பேசிய நந்தினி

அதுமட்டுமின்றி சட்டம் என்ன சொல்கிறது என்பதையும் போனில் எடுத்துக் காட்டுகிறார் நந்தினி. அதன்படி நாங்கள் கோர்ட்டுக்கு போனால் எங்க பெயரில் சொத்து எதுவும் இல்லாவிட்டாலும் 50 சதவீத பங்கை கூட கேட்டு வாங்க முடியும். ஆனால் நான் அதையெல்லாம் கேட்கமாட்டேன். நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக உங்க வீட்டில் அடிமையா வாழ்ந்திருக்கோம். அதனால் எனக்கு இந்த சொத்தில் 20 சதவீத பங்கு வேண்டும் என கேட்கிறார். இது எனக்கு மட்டும் தான், என்னோட பொண்ணுக்கு தனியாக கொடுக்க வேண்டும் என நந்தினி சொன்னதைக் கேட்டு அவரை அடிக்க பாய்கிறார் கதிர்.

45
கிளம்பிச் சென்ற உறவுகள்
Image Credit : youtube/suntv

கிளம்பிச் சென்ற உறவுகள்

அப்போது அங்கு வந்திருந்த சித்தப்பாவிடம் நாளைக்கே உங்க வீட்டில் பிரச்சனை வந்துவிட்டால் சித்தியும் இதே மாதிரி கேட்க சட்டத்தில் உரிமை இருக்கிறது என நந்தினி சொன்னதோடு, இப்படி எங்களுக்கு மத்தியஸ்தம் பண்ண வந்திருக்கீங்களே நாளைக்கே கோர்ட்டில் கேட்டால் நீங்களெல்லாம் சாட்சி சொல்ல வரவேண்டும் என நந்தினி சொன்னதைக் கேட்டு வந்திருந்த உறவினர்கள் பதறிப்போகிறார்கள். இந்த வம்பு நமக்கு எதுக்கு, இதெல்லாம் சரிப்பட்டு வராது என சொல்லிவிட்டு அனைவரும் கிளம்பிச் செல்கிறார்கள்.

55
ஜனனிக்கு வரும் டவுட்
Image Credit : youtube/suntv

ஜனனிக்கு வரும் டவுட்

மறுபுறம் ஜனனியை காப்பாற்றிய தேவசகாயம், ஜனனியிடம் என்ன பிரச்சனை என்பதை கேட்டுத் தெரிந்துகொண்ட பின்னர், இவ்வளவு கொடுமைகளையா அனுபவிச்சீங்க, இப்போ நீங்க வெளியே போறது உங்களுக்கு பாதுகாப்பு இல்ல, இங்க எனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசி உங்களை வெளியே அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறேன் என கூறுகிறார். நீண்ட நாளுக்கு பின்னர் என்னுடைய ஃபேமிலியை நினைவுகூர வைத்தவள் நீ, உன்னை என்னோட பொண்ணா தான் நான் பார்க்கிறேன் என சொல்கிறார். பின்னர் அந்த பங்களாவின் ஒரு பகுதியில் இருந்து கதவை தட்டுவது போல் சத்தம் கேட்கிறது. அதை பார்க்க செல்லும் ஜனனியிடம், இங்கெல்லாம் வரக்கூடாது என ஒரு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகிறார். இப்படி மர்மம் நிறைந்த இடத்தில் ஜனனி இருக்கிறார். இந்த தேவசகாயத்தாலும் ஜனனிக்கு ஆபத்து வர வாய்ப்பு இருக்கிறது. அது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரைச்ச மாவையே அரைக்குறாங்க... ரொம்ப போர்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image2
அடுத்த மெகா சங்கமம் இந்த 2 சீரியல்கள் தான்.. சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் குஷி
Recommended image3
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நேரம் மாற்றம்... சன் டிவியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
Related Stories
Recommended image1
அரைச்ச மாவையே அரைக்குறாங்க... ரொம்ப போர்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image2
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நேரம் மாற்றம்... சன் டிவியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved