MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நேரம் மாற்றம்... சன் டிவியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நேரம் மாற்றம்... சன் டிவியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

சன் டிவியில் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற உள்ளதாக சன் டிவி அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 03 2026, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Timing Changed
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Timing Changed

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியல்களில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் ஒன்று. திருச்செல்வம் இயக்கத்தில் உருவான இந்த சீரியல், கடந்த ஆண்டு விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்றதால் டிஆர்பி ரேஸில் டாப் 5க்குள் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதன் கதைக்களம் மந்தமாக உள்ளதால் அதன் டிஆர்பி ரேட்டிங்கும் கடும் சரிவை சந்தித்து உள்ளது. கதையை சூடுபிடிக்க வைக்க ஏராளமான புதுப் புது கேரக்டர்களையெல்லாம் உள்ளே கொண்டுவருகிறார்கள். ஆனால் அது எதுவுமே கைகொடுக்கவில்லை.

24
நிறுத்தப்பட்ட எதிர்நீச்சல் மறு ஒளிபரப்பு
Image Credit : youtube/suntv

நிறுத்தப்பட்ட எதிர்நீச்சல் மறு ஒளிபரப்பு

டிஆர்பி பிக் அப் ஆகாததால் இந்த மாதம் முதல் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் மறு ஒளிபரப்பு சன் டிவியில் நிறுத்தப்பட்டது. தினந்தோறும் காலை 8.30 மணிக்கு அதன் மறு ஒளிபரப்பு இருந்த நிலையில், அதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் அதனை நிறுத்திவிட்டது சன் டிவி. அதற்கு பதிலாக சன் டிவியில் அமோக வரவேற்பை பெற்ற புராண தொடரான இராமாயணம் இனி காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணிநேர ஸ்பெஷலாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Related image1
ஜனனியை காப்பாற்றிய ஆலிவர் தேவசகாயம் யார்? எதிர்நீச்சல் சீரியலில் காத்திருக்கும் எதிர்பாரா ட்விஸ்ட்
Related image2
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நிறுத்தப்படுகிறது - சன் டிவியின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
34
எதிர்நீச்சல் 2 சீரியலின் டைம் மாற்றம்
Image Credit : youtube/suntv

எதிர்நீச்சல் 2 சீரியலின் டைம் மாற்றம்

இது ஒரு புறம் இருக்க, தற்போது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவலை சன் டிவி வெளியிட்டுள்ளது. இதுவரை திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்தின் 7 நாட்களும் தினசரி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற பிப்ரவரி 9-ந் தேதி முதல் இந்த மாற்றம் நிகழ உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் போதே டிஆர்பியில் பயங்கர அடிவாங்கிய எதிர்நீச்சல் 10 மணிக்கு மாற்றப்பட்டால் மேலும் சரிவை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

44
முடிவுக்கு வருகிறதா எதிர்நீச்சல் 2?
Image Credit : youtube/suntv

முடிவுக்கு வருகிறதா எதிர்நீச்சல் 2?

எதிர்நீச்சல் சீரியல் 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. வழக்கமாக ஒரு சீரியல் 10 மணிக்கு மாற்றப்படுகிறது என்றால் அது விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்று தான் அர்த்தம். அதனால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம் இல்லாததால் முடிவுக்கு கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது. 10 மணிக்கு அந்த சீரியல் எவ்வளவு டிஆர்பி ரேட்டிங்கை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாண்டியனை வம்பில் மாட்டிவிட்ட வானதி... நள்ளிரவில் காத்திருந்த சம்பவம் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
அசிங்கப்பட்ட முத்து... ரவியிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ருதியின் அப்பா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image3
மகாநதி சீரியல் முடியப்போகுதா? விஜய் - காவேரிக்கு என்ன ஆச்சு? யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
ஜனனியை காப்பாற்றிய ஆலிவர் தேவசகாயம் யார்? எதிர்நீச்சல் சீரியலில் காத்திருக்கும் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நிறுத்தப்படுகிறது - சன் டிவியின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved