MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜனனியை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிய தேவசகாயம்... வெளிவரப்போகும் உண்மை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ஜனனியை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிய தேவசகாயம்... வெளிவரப்போகும் உண்மை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை வெளியே விடாமல் அடைத்து வைத்திருக்கும் தேவசகாயம், ஆதி குணசேகரனை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 06 2026, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு தேவசகாயத்தின் நடவடிக்கைகளில் சந்தேகம் வந்துள்ளதால், அவர் வீட்டில் பின்னால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார். அங்கு சென்று கதவை திறக்க முயன்ற போது அங்கிருந்த பணிப்பெண் அதனை பார்த்துவிடுகிறார். பின்னர் ஜனனியை தரதரவென இழுத்து வந்து, தேவசகாயத்திடம் நடந்ததை எல்லாம் எடுத்துக் கூறுகிறார். அதுமட்டுமின்றி தான் சரியாகிவிட்டதாகவும், அதனால் இங்கிருந்து கிளம்புகிறேன் என்றும் கூறுகிறார். ஆனால் தேவசகாயம் ஜனனியை வெளியே அனுப்ப மறுக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
இரவில் நடந்ததை விவரிக்கும் ஜனனி
Image Credit : youtube/suntv

இரவில் நடந்ததை விவரிக்கும் ஜனனி

ஜனனியிடம் பேசும் தேவசகாயம், உன்னை தான் வெளியே வர வேண்டாம்னு சொன்னேன்ல, அதைமீறி எதாச்சும் பண்ணுனா உனக்கு தான் பிரச்சனை அதிகமாகும் என எச்சரிக்கிறார். இதையடுத்தும் பேசும் ஜனனி, இல்ல சார், ஏதோ சத்தம் கேட்டுச்சு, நைட்டு எந்திருச்சு வந்து ஜன்னல் வழியா பார்த்தப்போ நீங்கெல்லாம் அங்க நின்னுகிட்டு இருந்தீங்க. எனக்கு ஒன்னுமே புரியல, அப்புறம் என்னோட ரூம் கதவு வேற லாக் ஆகி இருந்தது. நான் சீரியஸா தான் சொல்றேன். யாரோ என் ரூம் கதவை லாக் பண்ணிருந்தாங்க. கீழ நீங்க மூணு பேரும் சீரியஸா பேசிக்கிட்டு இருந்தீங்க. எதாச்சும் பிரச்சனையா இருக்கும்னு நினைச்சேன் என ஜனனி சொல்கிறார்.

Related Articles

Related image1
தேவசகாயம் கிட்னி திருடனா? ஜனனிக்கு வந்த டவுட்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தடம் மாறும் கதைக்களம்
Related image2
ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேவசகாயம்... அடிச்சு தூக்க சொன்ன ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
35
ஜனனிக்கு டிரஸ் வாங்கி கொடுத்த தேவசகாயம்
Image Credit : youtube/suntv

ஜனனிக்கு டிரஸ் வாங்கி கொடுத்த தேவசகாயம்

நேத்து நீ ரெஸ்ட் எடுக்கனும் என்பதற்காக உனக்கு மயக்க ஊசி போட்டேன் என சொல்லும் தேவசகாயம். ஒருவேளை நீ சொல்றதெல்லாம் உன்னுடைய கற்பனையாக இருக்கலாம். உன்னுடைய மனதில் உள்ள பயமும், அழுத்தமும் தான் உன்னை இப்படி குழம்ப விட்டிருக்கு. நேத்து ராத்திரி இங்க யாருமே இல்ல. நானும் போய் படுத்துட்டேன் என சொல்லி மழுப்புகிறார் தேவசகாயம். இதையடுத்து தன்னுடைய டிரைவரிடம் சொல்லி காரின் உள்ளே உள்ள கவரை எடுத்து வரச் சொல்கிறார். அதை ஜனனியிடம் கொடுத்து, இதில் உனக்கான டிரஸ் இருக்கிறது போட்டுக்கொள்ளுமாறு சொல்கிறார்.

45
ஹவுஸ் அரெஸ்ட் ஆன ஜனனி
Image Credit : youtube/suntv

ஹவுஸ் அரெஸ்ட் ஆன ஜனனி

அந்த டிரெஸ்ஸை கையில் கொடுத்ததும் உள்ள போமா என சொல்கிறார் தேவசகாயம். சார், எனக்கு குழப்பமா இருக்கு. இருந்தாலும் நான் சரியாகிவிட்டேன்னு நினைக்குறேன். நான் இப்போ கிளம்புறேன் சார். நீங்க செஞ்ச உதவுக்கெல்லாம் ரொம்ப நன்றி என ஜனனி சொல்ல, உண்மையாவா சொல்றீங்க, இங்க நான் தானம்மா டாக்டர், நீ சரியாகிட்டியா, உனக்கு உடல்நிலை நார்மல் ஆகிவிட்டதா என்பதை நான் தான் முடிவு பண்ணுவேன். உள்ளபோ என மிரட்டும் டோனில் சொல்கிறார் தேவசகாயம். இதனால் ஜனனியும் வேறு வழியின்றி உள்ளே சென்றுவிடுகிறார். பின்னர் ஒருவருக்கு போன் போட்டு குணசேகரன் நம்பர் வேண்டும் என கேட்கிறார் தேவசகாயம்.

55
மிரட்டப்படும் விசாலாட்சி
Image Credit : youtube/suntv

மிரட்டப்படும் விசாலாட்சி

மறுபுறம் வீட்டில் ஆதி குணசேகரன், வக்கீல் மற்றும் ஆடிட்டரை வர வைத்து, சொத்து பத்திரத்தை எடுத்து தன்னுடைய அம்மாவை கையெழுத்து போடச் சொல்கிறார். அதில் விசாலாட்சி கையெழுத்து போட மறுக்கிறார். ஏதாச்சும் பிரச்சனை ஆகிவிடும் அதனால் போடமாட்டேன் என சொல்கிறார். அதற்கு அந்த ஆடிட்டர், நீங்க கையெழுத்து போடலேனா தான் பிரச்சனை ஆகும் என சொல்கிறார். அருகில் இருக்கும் கதிரும் நீங்க கையெழுத்து போடாவிட்டால், 10 உசுரு போகும் என சொல்ல, பயந்து கையெழுத்து போட போகிறார் விசாலாட்சி. அப்போது அவரை நந்தினி தடுத்து நிறுத்துகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
டைவர்ஸுக்கு வாய்ப்பில்ல ராஜா... ரோகிணியின் ராஜ தந்திரத்தால் வசமாக சிக்கிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
பாண்டியன் - வானதி காதலில் புது ட்விஸ்ட்... நிலாவை பழிவாங்கும் ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
Pandian stores 2: பாக்கியத்தின் கொடூர முகம் இதுதான்! சென்னைக்கு சென்ற கூலிப்படை?
Related Stories
Recommended image1
தேவசகாயம் கிட்னி திருடனா? ஜனனிக்கு வந்த டவுட்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தடம் மாறும் கதைக்களம்
Recommended image2
ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேவசகாயம்... அடிச்சு தூக்க சொன்ன ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved