MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Madhumitha : காதலனோடு சேர்ந்து கல்யாண தேதியை அறிவித்த அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதா - குவியும் வாழ்த்து

Madhumitha : காதலனோடு சேர்ந்து கல்யாண தேதியை அறிவித்த அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதா - குவியும் வாழ்த்து

Ayyanar Thunai Madhumitha Marriage : அய்யனார் துணை சீரியலில் நாயகியாக நடித்து வரும் மதுமிதா, தன்னுடைய காதலனுடன் ஜோடியாக திருமண தேதியை அறிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 28 2026, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ayyanar Thunai Madhumitha Marriage
Image Credit : instagram

Ayyanar Thunai Madhumitha Marriage

பெங்களூருவை சேர்ந்தவர் மதுமிதா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். இதையடுத்து 2019-ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான பிரியாத வரம் வேண்டும் என்கிற சீரியலில் நாயகியாக நடிக்க கமிட் ஆனார். பின்னர் சன் டிவிக்கு தாவிய மதுமிதா, கடந்த 2022-ம் ஆண்டு திருச்செல்வம் இயக்கத்தில் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் நாயகியாக நடிக்க கமிட் ஆனார். அந்த சீரியலில் ஜனனி என்கிற கேரக்டரில் நடித்தார் மதுமிதா. அந்த சீரியல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த சீரியல் கடந்த 2024-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதா
Image Credit : insta

அய்யனார் துணை ஹீரோயின் மதுமிதா

இதையடுத்து விஜய் டிவிக்கு சென்ற மதுமிதா, அங்கு அய்யனார் துணை என்கிற சீரியலில் நடிக்க கமிட் ஆனார். அய்யனார் துணை சீரியல் தொடங்கிய ஒரே வருடத்தில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக விஜய் டிவியில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்று முதல் இடத்தில் இருந்து வருகிறது அய்யனார் துணை. தற்போது பிரைம் டைம் சீரியலாக இது ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் நிலா என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார் மதுமிதா. அவருக்கு ஜோடியாக அரவிந்த் நடிக்கிறார்.

34
காதலனை அறிமுகப்படுத்திய மதுமிதா
Image Credit : insta

காதலனை அறிமுகப்படுத்திய மதுமிதா

மதுமிதாவின் நடிப்புக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. இந்த நிலையில், தன்னுடைய வாழ்க்கை குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக குறிப்பிட்ட மதுமிதா, தன்னுடைய காதலனை கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். அவர் பெயர் பாலாஜி என்பதையும் சொல்லி இருந்தார். இருவரும் தற்போது திருமணத்துக்கு தயாராகிவிட்டனர். அதன்படி தன்னுடைய திருமண தேதியையும் மதுமிதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

44
மதுமிதா திருமணம் எப்போது?
Image Credit : insta

மதுமிதா திருமணம் எப்போது?

அதன்படி மதுமிதா - பாலாஜி ஜோடியின் திருமணம் வருகிற செப்டம்பர் 30ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவில் தன்னுடைய காதலுடன் ஃபாரினில் நடத்திய போட்டோஷூட்டை பகிர்ந்துள்ளார் மதுமிதா. அவரின் இந்த பதிவுக்கு லைக்ஸுகளும் குவிந்த வண்ணம் உள்ளனர். அய்யனார் துணை சீரியலில் நாயகனாக நடிக்கும் அரவிந்தும் காதல் திருமணம் தான் செய்துகொண்டார். அவர் நடிகை சங்கீதாவை காதலித்து கரம்பிடித்தார். அதேபோல் தற்போது மதுமிதாவை தன்னுடைய நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்க உள்ளார்.

Ayyanar Thunai: உயிருக்கே ஆபத்து! கூரையை பிரித்து வீட்டிற்குள் குதித்த சோழன் - சிக்கப் போவது யார்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஜெயிப்பவர்களுக்கு பிக் பாஸ் வைத்துள்ள மெகா ட்விஸ்ட் பற்றி தெரியுமா?
Recommended image2
Karthigai Deepam : ரேவதிக்கு மீண்டும் திருமணம் செய்ய பிளான் போடும் சாமுண்டீஸ்வரி.. வயதான மாப்பிள்ளையை தேடும் சந்திரகலா!
Recommended image3
Bigg Boss 10 : தந்தை மரணம்... பிக் பாஸ் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய போட்டியாளர் - ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்
Related Stories
Recommended image1
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா எதிர்நீச்சல் மதுமிதா? வழக்குப்பதிவு செய்த போலீசார் சொன்னதென்ன?
Recommended image2
Actress Madhumitha : திருமண கோலத்தில் 'அய்யனார்' சீரியல் நடிகை மதுமிதா! லட்சணமான போட்டோஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved