MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?

Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?

Ayyanar Thunai Serial Today Episode : அய்யனார் துணை சீரியலில் சோழனிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் நிலா.

2 Min read
Author : Ganesh A
Published : May 11 2026, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ayyanar Thunai Serial Today Episode
Image Credit : jiohotstar

Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் நிலாவும், சோழனும் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை வர உள்ளதால், நிலா விவாகரத்து வேண்டாம் என்று தான் சொல்வார் என்கிற மிதப்பில் இருந்தா சோழன். ஆனால் நிலா, நான் வேணும்னு தான் சொல்வேன் என கூறி சோழனை வெறுப்பேற்றுகிறார். இதனால் பீதி அடைந்த சோழன் தன்னுடைய அண்ணன் சேரனிடம் அதை சொல்லி ஃபீல் பண்ணுகிறார். பின்னர் சேரன், நிலாவை தனியாக அழைத்து, நிஜமாவே டைவர்ஸ் கொடுக்கப் போறியா என கேட்க, அதற்கு அவர் அதெல்லாம் கொடுக்கமாட்டேன் என வாக்குறுதி கொடுத்திருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
விவாகரத்து கேட்ட நிலா
Image Credit : jiohotstar

விவாகரத்து கேட்ட நிலா

இதையடுத்து இருவரும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது, நீதிபதி முன் செல்லும் நிலா, தனக்கு டைவர்ஸ் வேண்டும் என கூறுகிறார். இதைக்கேட்டதும் சோழன் செம ஷாக் ஆகிறார். அப்போது குறுக்கிடும் நிலாவின் வக்கீல், நேத்து வரைக்கும் டைவர்ஸ் வேண்டாம்னு சொன்ன, இப்போ வேணும்னு சொல்ற என கேட்க, காரணமே சொல்லாத அவர், தனக்கு டைவர்ஸ் தான் வேணும் என சொன்னதும், நீதிபதி வேறுவழியின்றி டைவர்ஸ் கொடுத்துவிடுகிறார். அப்போது அருகில் இருந்த சோழனுக்கு எதுவுமே புரியவில்லை. அவர் நிலா பின்னால் கெஞ்சுகிட்டே ஓடுகிறார்.

Related Articles

Related image1
Ayyanar Thunai : டைவர்ஸுக்கு நாள் குறித்த நிலா... அதிர்ச்சியில் சோழன் - அனல்பறக்கும் இன்றைய எபிசோடு
Related image2
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
35
சோழனிடம் நிலா கேட்ட கேள்வி
Image Credit : jiohotstar

சோழனிடம் நிலா கேட்ட கேள்வி

ஒரு கட்டத்தில் நிலா எல்லா உண்மையையும் உடைக்கிறார். நீ சோழவந்தான் கிட்ட பேசுன எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன் என கூறுகிறார். நான் உன்னைய காதலிச்சனா கல்யாணத்துக்கு முன்னாடி, எதுக்கு இப்படி பொய் சொல்லி, என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணுன என சோழனை செம திட்டு திட்டுகிறார். அதன்பின்னர் விறுவிறுவென ஒரு ஆட்டோவில் ஏறி கிளம்புகிறார் நிலா. அதன்பின்னர் சோழன் என்ன செய்வதென்றே தெரியாமல் வீட்டில் உள்ள எல்லாருக்கும் போன் பண்ணி விஷயத்தை சொல்லிவிடுகிறார். அதன்பின் எல்லாருமே வீட்டுக்கு கிளம்பி வருகிறார்கள்.

45
அப்செட்டில் வானதி
Image Credit : jiohotstar

அப்செட்டில் வானதி

மறுபுறம் வானதி, பாண்டியனை பார்ப்பதற்காக மறுபடியும் பாண்டியின் கடைக்கு வருகிறார். பாண்டி அந்த நேரத்தில் கடையில் இல்லை. அவர் சோழன் சொன்ன பிரச்சனையால் வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார். அங்கிருந்த பாண்டியின் அசிஸ்டண்ட்டிடம் பாண்டி எங்க என வானதி கேட்க, அதற்கு அவரோ, நீ பிரேக் அப் பண்ணுன சந்தோஷத்துல அவங்க எல்லாரும் டூர் கிளம்பி போயிட்டாங்கனு சொல்லி வானதியை வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறார். இதனை உண்மை என நம்பிய வானதி என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்.

55
கதறி அழும் நிலா
Image Credit : jiohotstar

கதறி அழும் நிலா

நிலா ஆட்டோவில் வீட்டுக்கு வந்து இறங்குகிறார். உள்ளே வந்ததும் யாரிடமும் எதுவும் பேசாமல், நேராக ரூமுக்குள் சென்று அமர்ந்து அழுகிறார். கொஞ்ச நேரத்தில் சோழனும் பின்னாடியே காரில் வருகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? நிலா, சோழன் தனக்கு செய்த துரோகத்தால் வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்துள்ளதால், அவரை சேரன் தடுத்து நிறுத்துவாரா? நிலா - சோழன் மீண்டும் சேருவார்களா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : 1000 எபிசோடுகளை எட்டி சிறகடிக்க ஆசை சாதனை... இதற்கு முன் இந்த மைல்கல்லை எட்டிய விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன?
Recommended image2
Siragadikka Aasai : ரேகாவுக்கு டேக்கா கொடுக்கும் சிந்தாமணி... கடும் அப்செட்டில் விஜயா
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Related Stories
Recommended image1
Ayyanar Thunai : டைவர்ஸுக்கு நாள் குறித்த நிலா... அதிர்ச்சியில் சோழன் - அனல்பறக்கும் இன்றைய எபிசோடு
Recommended image2
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved