MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!

Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!

Ayyanar Thunai Serial Today Episode : அய்யனார் துணை சீரியலில், நிலாவும் சோழனும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 08 2026, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ayyanar Thunai Serial Today Episode
Image Credit : jiohotstar

Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், டைவர்ஸ் கேஸ் தொடர்பாக சோழனும், நிலாவும் வக்கீலை பார்த்துவிட்டு ஜோடியாக பைக்கில் வருகிறார்கள். அப்போது நிலாவிடம் பேசும் சோழன், எப்படியும் நீங்க நாளைக்கு டைவர்ஸ் வேண்டாம்னு சொல்லிடுவீங்க. அதுக்கப்பறம் நாம் இருவரும் ஜோடியா வாழ்க்கையை தொடங்கலாம் என சோழன் பயங்கர சந்தோஷத்தில் சொல்ல, அது எப்படி நான் சேர்ந்து வாழப்போறதா முடிவெடுப்பேன்னு உங்களுக்கு தெரியும். நான் அப்படிலாம் சொல்ல மாட்டேன். சேர்ந்து வாழ வேண்டாம்னு தான் சொல்வேன் என சொல்லிக் கொண்டு வருகிறார் நிலா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஃபீல் பண்ணும் சோழன்
Image Credit : jiohotstar

ஃபீல் பண்ணும் சோழன்

அதற்கு சோழன், நீங்க சும்மா சொல்லாதீங்க, கண்டிப்பா என்கூட சேர்ந்து வாழணும்னு தான் சொல்லப்போறீங்க, எனக்கு நல்லாவே தெரியும் என ரொம்ப கான்பிடண்டா சொல்லிக்கிட்டே வர்றார். இதன்பின் இருவரும் வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டுக்கு வந்ததும் சோழனுக்கு டவுட் வர ஆரம்பிக்கிறது. ஒருவேளை நிலா நம்ம கூட சேர்ந்து வாழ மாட்டேன்னு சொல்லிட்டாங்கனா என்ன செய்யுறது என தன்னுடைய அண்ணன் சேரனிடம் சொல்லி ஃபீல் பண்ணுகிறார் சோழன். அதெல்லாம் நல்லதாவே நடக்கும் என சேரனும், பாண்டியனும் சோழனுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்கள்.

Related Articles

Related image1
பீச்சில் ரொமான்ஸ் பண்ணும் சோழன் - நிலா... டைவர்ஸ் முடிவு என்ன ஆச்சு? அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Related image2
வானதியிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்ட சோழன்... நிலா எடுத்த எதிர்பாரா முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
34
முரண்டு பிடிக்கும் நடேசன்
Image Credit : jiohotstar

முரண்டு பிடிக்கும் நடேசன்

உனக்கு ஒன்னுன்னா நிலா தான் வர்றா, அதனால் அவ உன்னைவிட்டு பிரியமாட்டா என உறுதியாக சொல்கிறார் சேரன். அதன்பின்னர் பாண்டியன் வானதியை தேடிச் செல்கிறார். வானதி வீட்டின் முன் நின்று, உள்ளபோய் பேசலாமா... வேண்டாமானு யோசிக்கிறார். அதன்பின்னர் நடேசன் வண்டியை எடுத்துட்டு வந்து, அதுலயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, அதுலயே தூங்குகிறார். அதைப்பார்த்த பாண்டியன், உங்களுக்கு தான் உடம்பு சரியில்லேல்ல, எதுக்காக இந்த கொசுக்கடியில தூங்குறீங்க, ஒழுங்கா வீட்டுக்கு வாங்க என கூப்பிடுகிறார். என் உடம்ப எனக்கு பாத்துக்க தெரியும் நீ போடானு சொல்லி அனுப்பிவைக்கிறார் நடேசன்.

44
முடிவை சொன்ன நிலா
Image Credit : jiohotstar

முடிவை சொன்ன நிலா

மறுநாள் காலையில் விடிந்ததும், சேரன், நிலாவை அழைத்து டைவர்ஸ் கேஸ் விஷயமாக பேசுகிறார். இன்னைக்கு கோர்ட்டுக்கு போறேல்ல, அங்க என்ன சொல்லப்போற, சோழனோட சேர்ந்து வாழுறேன்னு தான சொல்லப்போற, அவன் உன்னைய ரொம்ப நேசிக்கிறான். உன்கூட சேர்ந்து வாழனும்னு தான் ஆசைப்படுகிறான் என சேரன் சொல்ல, அதற்கு நிலாவும், நான் டைவர்ஸ் வேணும்னு சொல்லமாட்டேன் கவலைப்படாதீங்க என சொல்கிறார். இதனால் நிம்மதி பெருமூச்சு விடுகிறார் சேரன். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Jai: கோவிலில் எனக்கு நடந்த அவமானம்.! இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து உண்மைகளை உடைத்த நடிகர் ஜெய்.!
Recommended image2
Siragadikka Aasai : ஃபிராடு வெளியபோ டி... ரோகிணியை விரட்டிவிட்ட விஜயா - மாட்டிக்கொண்டு முழிக்கும் மனோஜ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷன் - அன்புக்கரசி கல்யாணம் நடந்ததா? ஆதி குணசேகரன் வைத்த எதிர்பாரா ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
பீச்சில் ரொமான்ஸ் பண்ணும் சோழன் - நிலா... டைவர்ஸ் முடிவு என்ன ஆச்சு? அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
வானதியிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்ட சோழன்... நிலா எடுத்த எதிர்பாரா முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved