MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • வானதியிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்ட சோழன்... நிலா எடுத்த எதிர்பாரா முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

வானதியிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்ட சோழன்... நிலா எடுத்த எதிர்பாரா முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

அய்யனார் துணை சீரியலில் யதார்த்தமாக பாண்டியை சந்திக்க வீட்டுக்கு வந்த வானதியிடம் தான் ஜெயிலுக்கு போன விஷயத்தை கூறி உள்ளார் சோழன். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 24 2026, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ayyanar Thunai Serial Today Episode
Image Credit : jiohotstar

Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் சோழன் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அவர் மீது நிலா கடும் கோபத்தில் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக இருந்தது. நிலா, சோழனிடம் வழக்கம்போல் பேசி, அவரை சமாதானப்படுத்தி, வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது நடு ரோட்டில் வைத்தே நிலா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் சோழன். இதன்பின் இருவரும் ஜோடியாக வீட்டுக்கு வந்ததை பார்த்து சேரன், பாண்டியன் ஆகியோரும் சந்தோஷமடைந்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ஃபீல் பண்ணும் பல்லவன்
Image Credit : jiohotstar

ஃபீல் பண்ணும் பல்லவன்

நிலாவே சோழனை மன்னித்ததால், சேரனும் அவர்மீது எந்தவித கோபமும் இன்றி சகஜமாக பழக ஆரம்பித்துவிட்டார். அதை நோட் பண்ணிய பாண்டியன், சோழனை மன்னித்த நீங்கள் ஏன் பல்லவனை மன்னிக்க மறுக்கிறீர்கள் என கேட்க, அவனுக்கு அவன் பண்ண தப்பு எவ்வளவு பெருசுனு உணரனும் அதனால் தான் அவனுடன் பேசாமல் இருக்கிறேன் என சொல்கிறார் சேரன். பின்னர் கிச்சனில் நிலா உடன் சேர்ந்து சேரன் சமைத்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் பல்லவன், தண்ணி மட்டும் குடித்துவிட்டு, காலேஜுக்கு கிளம்புகிறார். தனக்கு லேட் ஆனதால் சாப்பிடாமல் செல்கிறார். வெயிட் பண்ணி சாப்பிட்டு போகுமாறு நிலா சொன்னாலும் சேரன் அவரிடம் பேசாமல் கப்சிப் என இருக்கிறார்.

Related Articles

Related image1
அந்தர் பல்டி அடித்த நிலா... காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சோழன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Related image2
Top 10 Serial TRP : அதளபாதாளத்தில் எதிர்நீச்சல்; அடிவாங்கிய அய்யனார் துணை - இந்த வார டாப் 10 சீரியல் இதோ
35
வானதியிடம் சிக்கிய சோழன்
Image Credit : jiohotstar

வானதியிடம் சிக்கிய சோழன்

பின்னர் வெளியே சோழன் சோகமாக அமர்ந்திருக்க அப்போது அங்கு வரும் நடேசன். நான் ஒருமுறை ஜெயிலுக்கு போனதுக்கே என்மேல கோபப்பட்டீங்க, இப்போ அண்ணனும், தம்பியும் மாத்தி மாத்தி ஜெயிலுக்கு போயிட்டு வர்றீங்க என கிண்டலடிக்கிறார். அப்போது அங்கு வானதி வருகிறார். அவர் தான் ஜெயிலுக்கு போன விஷயம் தெரிந்து தான் இங்கு வந்திருக்கிறார் என தப்பு கணக்கு போடும் சோழன், தான் ஜெயிலுக்கு போன விஷயத்தை தன் வாயாலேயே உலறிவிடுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன வானதி, அப்படியா எனக்கு தெரியாதே என சொன்னதும், அய்யய்யோ நம்மலா தான் வாய்விட்டு மாட்டிக்கிட்டோமா என ஃபீல் பண்ணுகிறார்.

45
உண்மையை உடைக்கும் பாண்டி
Image Credit : jiohotstar

உண்மையை உடைக்கும் பாண்டி

இதையடுத்து உள்ளே சென்று பாண்டியனை சந்திக்கும் வானதி, இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு நீ ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லல என கேட்கிறார். அதற்கு பாண்டியன் ஏதேதோ சொல்லி மழுப்புகிறார். என்ன நடந்துச்சுனு சொல்லு என வானதி கேட்க, வேறுவழியின்றி எல்லா பிரச்சனையையும் சொல்லிவிடுகிறார் பாண்டியன், பின்னர் சோழனிடம் சென்று பேசும் வானதி, நீங்க எதுவும் ஃபீல் பண்ணாதீங்க என சொல்லிவிட்டு மீண்டும் பாண்டியனுடன் சென்று கடலை போடுகிறார்.

55
ட்ரிப் கிளம்பும் நிலா - சோழன்
Image Credit : jiohotstar

ட்ரிப் கிளம்பும் நிலா - சோழன்

அந்த நேரத்தில் சோழனுக்கு அவருடைய ஓனரிடம் இருந்து ஒரு போன் கால் வருகிறது. அப்போது அவர் ஒரு கோவில் ட்ரிப் வந்திருக்கு, அதுக்கு நீ தான் டிரைவரா வரணும்னு கேட்குறாங்க என சொல்ல, சோழன் யோசித்து பதில் சொல்றேன் என கூறுகிறார். பின்னர் நிலாவிடம் இந்த ட்ரிப் பற்றி சோழன் சொன்னதும் நானும் கூட வரவா என கேட்கிறார். சேரனும் நிலாவை அழைத்துப் போக சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Recommended image2
Siragadikka Aasai : மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி
Related Stories
Recommended image1
அந்தர் பல்டி அடித்த நிலா... காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சோழன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
Top 10 Serial TRP : அதளபாதாளத்தில் எதிர்நீச்சல்; அடிவாங்கிய அய்யனார் துணை - இந்த வார டாப் 10 சீரியல் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved